இந்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் பங்குகொள்ளும் மாஸ்டர்கார்டு நிறுவனம்! - மானசி நரசிம்மன்

 

 

மானசி நரசிம்மன்

 

 

 மானசி நரசிம்மன்

மாஸ்டர்கார்ட், துணைத்தலைவர், விற்பனைத்துறை தலைவர்

தெற்காசியாவில் ஆறு நாடுகளில் தனது நிறுவனத்தை வேரூன்றச் செய்வதற்கான பல்வேற முயற்சிகளை செய்து வருகிறார். நிறுவனத்தின் விளம்பரம், வணிகம், விநியோகம் சார்ந்த முயற்சிகள் என அனைத்தும் மானசியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவர், இந்திய அரசின் பல்வேறு டிஜிட்டல் திட்டடங்களுக்கு ஆதரவளித்து செயல்பட்டு வருகிறார். நிறுவனங்களுடன் இணைந்து நீண்டகாக நோக்கில் வருமானத்தை பெறும் திட்டங்களை வகுத்து வருகிறார். இந்த வேலைகளுக்கு முன்னர் யுனிலீவரில் விற்பனை விநியோகப்பிரிவில் பணியாற்றினார். பின்னர் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகுதான் மாஸ்டர் கார்டு பணி. செல்போனில் மாஸ்டர்கார்டை பயன்படுத்தும் இவரது ஐடியா, எம்வீஸ் என்ற விருதை இவருக்கு பெற்றுத்தந்துள்ளது.

ஐஐம் பெங்களூருவில் எம்பிஏ படித்துள்ளார். லேடி ஶ்ரீராம் கல்லூரியில் பிஏ ஹானர்ஸ் முடித்துள்ளார்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்