படத்தில் கதையைப் பற்றித்தான் பார்வையாளர்களிடம் பேசுகிறேன்! பிரகாஷ் ஜா, இந்தி திரைப்பட இயக்குநர்
பிரகாஷ் ஜா,
பிரகாஷ் ஜா, இந்தி திரைப்பட இயக்குநர்
நீங்கள் எடுக்கும் படங்களில் நடிப்பவர்கள் கதையைத் தாண்டி நடிப்பதில்லை. எப்படி இந்த சூழலை ஏற்படுத்துகிறீர்கள்?
அது எளிமையானதுதான். ஆனால் படத்தில் கதையைப் பற்றித்தான் பார்வையாளர்களிடம் பேசுகிறேன். அதில் நடித்துள்ள நட்சத்திரங்களைப் பற்றியல்ல. எனவே இந்த கோணத்தில் அணுகும்போது படம் சரியாக இருக்கிறது. படத்தில் கதை, கதாபாத்திரம் என்று மட்டும் பார்க்கமுடிகிறது.
இப்போது வெளிவந்துள்ள ஆஷிராம் வெப்சீரியசிலும் கூட பாபி தியோல் படத்தில் தெரியமாட்டார். பாபாதான் தெரிவார். இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.
வெப்சீரிஸ் செய்வது எப்படியிருக்கிறது?
ஆஷிராம் சீரிஸை நாங்கள் நான்கு மாதங்களாக எடுத்தோம். இப்போது அடுத்த சீசனுக்கு தயாராகிவிட்டோம். வெப் சீரிசில் தனித்தனிய கதாபாத்திரத்தை விரிவாக காண்பிக்கும் வாய்ப்பு உள்ளது. சினிமாவில் அது சாத்தியமாகாது.
நீங்கள் உடலை கவனமாக பராமரிக்கிறீர்கள் என்று அறிந்தோம். உங்களின் ஆரோக்கிய ரகசியத்தைச் சொல்லுங்கள்.
சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வதும், அதிகாலையில் எழுவதும் என்னுடைய வழக்கம். சைவ உணவு சாப்பிடுகிறேன். தினசரி உடற்பயிற்சி செய்கிறேன். அளவுக்கு அதிகமாக உணவு உண்பதில்லை.
உங்களுடைய படம் பரீக்ஷா வெளியானபோது புதிய கல்விக்கொள்கை வெளியாகிவிட்டது. அதனை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தியாவில் ஆசிரியர்களுக்குத்தான் அதிக சம்பளமும், மரியாதையும் அளிக்கப்படுகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு புதிய கல்வி சார்ந்த பயிற்சி அளிக்கப்படவேண்டும்.
அடுத்த திட்டங்கள் என்ன?
நான் நடித்த படம் விரைவில் திரைவிழாக்களில் பார்க்கலாம். அடுத்து நடிக்கும் படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகும். இதோடு ஆஷிராம் சீசன் வேறு உள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
சர்மிஷ்தா கோஷல்
கருத்துகள்
கருத்துரையிடுக