கத்தியின்றி ரத்தமின்றி வங்கியில் நடைபெறும் பழிக்குப்பழி! - இன்சைட் மேன் - ஸ்பைக்லீ

 

 

 

 

 

'Inside Man 2': 2006's Heist Movie Follow Up Project In ...
இன்சைட் மேன்

 

 

இன்சைட் மேன்

ஸ்பைக்லீ

பேங்க் கொள்ளையிடப்படுகிறது. நான்கு பேர் வங்கியிலுள்ள 40 பேர்களை உள்ளேயே பிடித்து வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கோரிக்கை எதையும் வைக்கவில்லை. உண்மையில் பேங்கை எதற்காக அவர்கள் கொள்ளையிட வந்தார்கள்? அவர்கள் நோக்கம் என்ன என்பதுதன் படத்தின் மையக்கரு.

பொதுவாக வங்கிக்கொள்ளை படங்களில் என்ன காட்டியிருப்பார்கள்?

வங்கியை எப்படி சாமர்த்தியமாக கொள்ளையடிக்கிறார்கள். அத்தகவல் தெரிந்த காவல்துறையின் நடவடிக்கை, நடைபெறும் கொலை,கொள்கை ஆகியவற்றையும் எடுப்பார்கள். சிலர் எப்படி கொள்ளைக்கார ர்கள் சாதுரியமாக மாட்டிக்கொள்ளாமல் திருடினார்கள் என்று சொல்வார்கள்.

இந்தவகையில் இந்தப்படம் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்.

டென்ஷில் வாஷிங்கடன் பெயர் ஃபிரேசர். தன் மனைவியுடன் சில நாட்கள் டூர் போகலாம் என்று நினைக்கும்போது அவரது டேபிளுக்கு கேஸ் வருகிறது. பார்த்தால் சாதாரணமாக தெரிந்தாலும் வங்கியை முற்றுகையிட்டவன் எந்த கோரிக்கையும் வைக்காமல் சாப்பாடு மட்டும் வாங்கித் தர சொல்லுவது வித்தியாசமாக படுகிறது. சாமர்த்தியமாக காய் நகர்த்தும் கொள்ளையனின் சவால் பிரேசருக்கு ஒருவகையில் பிடித்திருக்கிறது. ஆனால் எந்த க்ளூவும் கிடைப்பதில்லை.

அந்த குற்றவாளியை பிடிக்க முடிந்ததா? பிரேசரின் திட்டங்கள்ன வேலைக்கு ஆனதா என்பதுதான் படம்.

படத்தின் கிளைமேக்சில் தெரியவரும் திருப்பம்தான் முக்கியமானது. படத்தில் தேவையில்லாத வன்முறை, மோசமான வசனங்கள் என ஏதுமில்லை. குற்றவாளிக்கும் காவல்துறை அதிகாரிக்கும் நடைபெறும் மூளை விளையாட்டுக்கள்தான் படம்.

மூளை விளையாட்டு!

கோமாளிமேடை டீம்

 

கருத்துகள்