அஸ்கார்ட் எனும் சபிக்கப்பட்ட வேட்டைக்காரன், கடவுளுடன் நடத்தும் போராட்டம்! - அசுரவேட்டை!
cc/ அசுரவேட்டை - காமிக் பிடிஎஃப் டைம்ஸ் |
ஜானியின் அசுரவேட்டை
காமிக் பிடிஎப் டைம்ஸ்
தமிழில் ஜானி
வைக்கிங் போராளிகளில் ஒருவராக போரிட்டவர் அஸ்கார்ட். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அங்கிருந்து விலகி, காசுக்காக விலங்குகளை வேட்டையாடி பிழைத்து வருகிறார். அவரிடம் யார்முன்காண்டர் என்ற வித்தியாசமான விலங்கை (க்ராக்கன்) வேட்டையாடும் பணி வருகிறது. அதனை எப்படி நிறைவேற்றினார், அதில் இழந்த து என்ன, பெற்றது என்ன என்பதுதான் காமிக்ஸின் கதை.
18 பிளஸ் காமிக்ஸ் என்பதால் நிர்வாண, உடலுறவு காட்சிகள் நூலில் உண்டு. கதையில் அவை துறுத்தலாக தெரியவில்லை. கதை முழுக்க சபிக்கப்பட்ட குழந்தையாக ஒற்றைக்காலுடன் பிறந்து கஷ்டப்படும் அஸ்கார்டின் வாழ்க்கையைப் பேசுகிறது. இதில் கார்லின் உள்ளிட்ட பலரும் பலவீனமான இனம் என்று பேசுவது அவர் தாழ்ந்த சாதியைச் சொல்லுகிறார்களா, ஒற்றைக் காலை இழந்த காரணத்தாலா என்று தெரியவில்லை.
காமிக்ஸின் ஒவியங்கள் பல்வேறு பருவ காலங்களையும் சண்டைக்காட்சிகளையும் துல்லியமாகவும் விவரங்கள் நிறைந்தவையாகவும் மாற்றிக்காட்டுகிறது.
புராணக்கதையை மையமாக கொண்ட காமிக்ஸ் கதை. எனவே, ஆத்திக நாத்திக பேச்சுகள் காமிக்ஸ் நூல் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது. இறைவன் எல்லையற்ற அருளாளன் என்ற நம்பிக்கையுடனே கதையை முடித்திருக்கிறார்கள்.
அஸ்கார்ட், விதியைப் பற்றி நம்பாமல் தன்னுடைய அறிவை வைத்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயலும் பாத்திரம். கடைசியில் மட்டும் அவரது மனநிலை மாறி அதன் காரணமாக அவரது வாழ்க்கை ஒட்டுமொத்தமாக அவரது தந்தையைப் போலவே மாறுகிறது. சிக்லாண்ட் அவரது மகளாகிறாள்.
சாகச காமிக்ஸை படிக்க நினைப்பவர்கள், இந்த வேட்டை இலக்கியத்தில் இடம்பெறும் காமிக்ஸை தாராளமாக படிக்கலாம்.
நூலில் வேட்டை ஆடும் பகுதிகள் சிறப்பாக வசனம் எழுதப்பட்டும் ஓவியங்கள் வரையப்பட்டும் உள்ளன.
வேட்டை!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக