ஸ்ட்ரீமிங் தளங்களில் புகழ்பெற்ற கொரியா சீரிஸ்கள்! - 2019-2020 காலகட்ட தொடர்கள்

 

 

 

 

கிராஸ் லேண்டிங் ஆன் யூ

 

 

 

ஹலோ கொரியா

படம், சீரியல் எதுவாக இருந்தாலும் அது நம் மனதோடு ஒன்றாக இணையவேண்டும். அப்போதுதான் அதனை ஆர்வமாக பார்க்கமுடியும். இன்று மக்கள் டிவி மட்டுமல்லாது, இணையத்தில்  உள்ள வீடியோ தளங்கள் பலவற்றையும் ஆராய்ந்து புகழ்பெற்ற சீரியல்களை, வெப் படங்கள், தொடர்களை பார்த்து வருகி்ன்றனர். இதில் ஆசிய கலாசாரத்தைக் கொண்ட கொரிய படங்கள், கதை, படமாக்கும்விதம், கிராபிக்ஸ் என பல்வேறு விஷயங்களுக்காக பாராட்டப்பட்டு வருகிறது.

அவற்றில் சில தொடர்களைப் பார்ப்போம்.

சீ்ப் ஆஃப் ஸ்டேட்

இது அரசியல் தொடர். அனைத்து விவகாரங்களுக்கும் பின்னணியில் இருந்து காய் நகர்த்தும் தாங் டே ஜூன் என்பவரைப் பற்றியது. உலக மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொடர். இரண்டு சீசன் வந்துவிட்டது. புதிய சீசன் வருமா என்று தெரியவில்லை. நெட்பிளிக்சில் 2019ஆம் ஆண்டு வந்த தொடர் இது.

கிராஸ் லேண்டிங் ஆன் யூ

நெட்பிளிக்ஸ்
வெளியீடு டிச. 14, 2019

காதலில் விழுந்தேன் என தமிழில் மொழிபெயர்க்கலாம். தென்கொரியா ஃபேஷன் தொழிலதிபர், வடகொரியாவைச் சேர்ந்தவர் என இருவருக்கும் இடையே பூக்கும் காதல்தான் தொடரை மகத்தான வெற்றி பெற வைத்திருக்கிறது. உலகமே அடுத்த சீசனுக்காக நகத்தைக் கடித்துக்கொண்டிருக்கிறது. விமர்சனரீதியாகவும், பார்வையாளர்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர் இது.

டு யூ லைக் பிராம்ஸ்

விக்கி

வெளியீடு ஆக. 31, 2020

இசைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கதை. பார்க் என் பின், கிம் மின் ஜே என இருவருக்கும் இடையே வரும் காதல்தான் தொடரின் முக்கியமான பகுதி. நாயகன், நாயகி என இருவரும் காட்சியில் காதல் மழை என சிலிர்க்கிறது ரசிகர்கள் கூட்டம்.

லைஸ் ஆஃப் லைஸ்

வியூ

வெளியீடு செப். 4, 2020

கொரியாவின் வலிமை வாய்ந்த குடும்பங்களில் ஒன்று. அக்குடும்பத்தில் மருமகளாக இருப்பவர், ஜீ என் சூ. இவர் மீது அவரது கணவரைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதனால் அவரால் தனது மகளை சந்திக்க முடியவில்லை. சிறைதண்டனை பெற்ற பிறகு வெளியே வரும் அம்மா, தன் மகளை தேடுகிறார். உணர்ச்சிகரமான கதையை பார்க்கத் தவறாதீர்கள்.

ஸ்வீட் ஹோம்

நெட்பிளிக்ஸ்


புதிய வீட்டை வாங்கி அங்கு குடிசெல்பவர், தாமதமாகவே உணர்கிறார். அங்கு வந்து தங்கிய மனிதர்கள் எல்லாம் அசுர ர்கள் ஆகிவிடுகிறார்கள் என அதனை எப்படி சமாளி்த்து உயிர் தப்புகிறார் என்பதே கதை. நெட்பிளிக்ஸ் தயாரித்த கே- தொடர்களில் இதற்குத்தான் காசு அதிகம் செலவழித்திருக்கிறார்கள். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
 

கருத்துகள்