சி்ம்பயோட்டிக் மிருகத்தை வைத்துக்கொண்டு வாழ நினைக்கும் விண்வெளி வீரனின் பரிதாப கதை! - ஸ்புட்னிக்
ஸ்புட்னிக் |
ஸ்புட்னிக்
ரஷ்யாக்காரர்கள் எடுத்த ஏலியன் பற்றிய படம்
வெனோம் படம் பார்த்திருப்பீர்கள். அதே கான்செப்ட்தான்.
விண்வெளிக்குச் சென்று பூமிக்கு திரும்புகிற வழியில் சிம்பயாட்டிக் உயிரி விண்கலனில் புட்போர்ட் அடித்து ஏறிவிடுகிறது. அது நாயகன் உடலில் புகுந்துகொள்கிறது. அவனது நண்பனைக் கொன்று தின்றுவிடுகிறது. பூமியில் தரையிறங்குபவர்களில் நாயகனுக்கும் கூட படுகாயம் ஏற்படுகிறது. ஆனால் மருத்துவமனையில் அவரை சிகிச்சையளிக்கும்போது, இரண்டே நாட்களில் உடலின் காயங்கள் ஆறுகின்றன. எப்படி என அவரை சோதிக்கின்றனர். அவருக்குள் உள்ள வேற்று உயிரியை கண்டுபிடித்துவிடுகின்றனர. அதனை எப்படி சோதிக்கின்றனர், நாயகன் இப்பிரச்னையிலிருந்து மீண்டாரா என்பதுதான் கதை.
இதில் முக்கியமான பாத்திரம் உளவியலாளராக நடித்துள்ள நாயகிக்குத்தான்(Oksana Akinshina) அதிக முக்கியத்துவம் உள்ளது. ராணுவ ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் விஷயங்களை மெல்ல புரிந்துகொண்டு அதிர்ச்சியாவது, நாயகனை காப்பாற்ற பிரம்ம பிரயத்தன முயற்சிகளை செய்வது, இறுதியில் நாயகன் எடுக்கும் முடிவால் விரக்தி அடைவது என நிறைய காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
ஏலியன் எப்படியிருக்கவேண்டுமென கிராபிக்சில் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கடுமையான உழைப்பை இதற்காக போட்டிருக்கிறார்கள். ஏலியன் எப்படி செயல்படுகிறது என நாயகி அறியும் இடம் முக்கியமான காட்சி.
பீதி ஏற்பட்டாலும் பயப்படாதீர்கள்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக