விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் ஏமாற்றத்தை தருகின்றன! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

 

 

 

 

Budget targets $5-tn economy - The Statesman
the statesman

 

 

 

 நேர்காணல்

நிர்மலா சீதாராமன்

விவசாய மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறதா?

நான் ஆச்சரியப்படவில்லை. எனக்கு ஏமாற்றமாகவே உள்ளது. எம்பிகள் பலரிடமும் கருத்துகளைக் கேட்டுத்தான் மசோதா உருவானது. இதற்கு விவசாயத்துறை நரேந்திரசிங் தோமர்தான் பொறுப்பு. மசோதாவை நான் ஆத்மா நிர்பார் திட்டத்தின் கீழ் அறிவித்தேன். ஆனால் அப்போது எந்த எதிர்வினைகளும் இந்தளவு தீவிரமாக எழவில்லை.

பொதுமுடக்கம் தொடங்கி ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. என்ன மாற்றங்களை எதிர்கொண்டீர்கள் என தெரிந்துகொள்ளலாமா?

பல தலைமுறைகள் பார்க்க சூழலை நாம் பார்த்துள்ளோம், முதலில் நாம் இச்சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றி்க்கொள்ளவேண்டும். ஆறுமாதங்களுக்கு அப்புறமும் கூட நாம் சவால்களுக்கு இன்னும் பழகவில்லை. இப்போது அமைச்சகங்கள் செயல்படவேண்டிய நேரம். எனவே, வேகமாக செயல்பட்டு வருகிறார்கள்.

கார்ப்பரேட் துறைகள் என்ன சொல்லுகிறார்கள்?

ஸ்டீல் துறை மெல்ல நிமிர்ந்து வருகிறது. சீனாவில் இரும்புகளுக்கு அதிக தேவை உள்ளது. இதேபோலவே ஜவுளித்துறையில் வேலையாட்களுக்கு அதிக தேவை உள்ளது. தொழிற்சாலைகள் மெல்ல இயங்கத் தொடங்கி வருகின்றன. இதனால் தொழிலாளர்களும் வேலைக்கு சென்று வந்துகொண்டுள்ளனர். கொரானோ நோய்த்தொற்றுக்கு முன்னர் இருந்த நிலையை நாம் அடைய அதிக காலம் ஆகாது.

ஆனால் சேவைத்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனவே...

அது உண்மைதான். வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வரவில்லை. ஆனால் உள்ளூர் சுற்றுலா பயணிகள் இப்போது சுற்றுலா தலங்களுக்கு வருகை தருகிறார்கள். ஹோட்டல்துறை ,உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான். இப்போது மக்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளனர்.விரைவில் மாற்றம் வரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஜன்தன் கணக்குகளுக்கு சென்றுள்ள அரசின் பணம் செலவழிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?

அப்புறம் எப்படி கிராமத்தில் விவசாயிகள் பொருட்களை வாங்க முடிகிறது, விவசாய வேலைகளை செய்யமுடிகிறது என்ற கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். கிராம புறங்களில் தங்களின் வியாபாரம் நன்றாக நடப்பதாக நிறுவனங்களே ஒப்புக்கொண்டுள்ளன. அரசு பணத்தை விவசாயிகளுக்கு தராமல் எப்படி இந்த சூழல் சாத்தியமாகும்?

மத்திய அரசின் அமலாக்கத்துறை பல்வேறு வழக்கில் சிபிஐ போல செயல்படுகிறதே?

குறிப்பிட்ட எந்த வழக்கு பற்றியும் நான் கருத்து சொல்லமுடியாது. ஆனால் இன்று உலகம் முழுவதும் வரி ஏய்ப்பு அதிகம் நடைபெறுகிறது. அமலாக்கத்துறை பிஎம்எல்ஏ சட்டம் மூலம் வரிஏய்ப்பு சிக்கல் உள்ள வழக்குகளை மட்டுமே விசாரிக்கிறது. அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதில்லை. சிபிஐ விசாரிக்கும் வழக்குகளில் வரி ஏய்ப்பு விவகாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை தலையிடும். சுசாந்த வழக்கிலும் அப்படித்தான் நடந்தது. அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடைபெறுகிறது. இன்று அமலாக்கத்துறைக்கு ஏராளமான சவால்கள் உள்ளன.

மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமான தீவிரவாதிகளுக்கு உடனே நாம் மரணதண்டனை விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கருணை மனு வசதியையும் வழங்கினோம். இன்று அமலாக்கத்துறை சிபிஐ போல நடந்துகொள்கிறது என்று கூறியவர்கள், அன்று மாநில முதல்வர் அமெரிக்காவுக்கு செல்வது தடுக்கப்பட்டபோது ஏதாவது கூறினார்களா, போராடினார்களா?  அப்போது அவர்கள் நீதிமன்றத்தை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளை நம்பினார்கள் என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இப்போது அரசு அமைப்புகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள். பிரதமருக்கு எதிராக பேசும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த புகார்களையும் அளித்திருக்கிறதா? இல்லவே இல்லை. ஆனால் ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடக்கும் பல்வேறு அநீதிகளை சிந்தனைவாதிகள் வசதியாக மறந்துபோய் விடுகிறார்கள்.

அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் என்று அடையாளப்படுத்துகிறீர்களே?

முதலில் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை சொல்வது வெளியிலுள்ள மக்கள்தான். நாங்கள்அப்படி எதையும் கூறுவதில்லை. ஒருவரை தேசவிரோதி என்று சொல்லுவது தவறா? தவறுவதான். ஆனால் அரசு அமைப்புகளை நம்பிக்கை இல்லாமல் செயல்படுபவர்களை என்ன செய்வது? நாட்டை விட்டு சிலர் வெளியேற நினைக்கிறார்கள். இங்கு வாழ பயமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். கடிதம் எழுதுகிறார்கள். குறிப்பிட்ட ஒருவர் அரசு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இனி இங்கே வாழமுடியாது. வேறு நாட்டுக்கு செல்கிறோம் என்று சொல்லுகிறார்கள். தேசவிரோதி என்ற சொல்லை நாங்கள் நாட்டை அமைதிக்குள் வைத்திருக்கவே கூறுகிறோம். நாட்டை விட்டு வெளியே செல்கிறோம் என்று சொல்லுபவர்கள் இளைஞர்களை கவரும் ஐகான்களாக உள்ளனர்.

இன்று இந்தியாவில் எவரொருவரும் தான் நினைக்கும் கருத்தை சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள்தான் ராஜா. அவர்களுக்கு அவர்களது கருத்து முக்கியம். முதலில் இந்த குரல்கள் அமைதியாகத்தான் இருந்தன. ஆனால் இன்று அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் எனும் சக்தி வாய்ந்த கரு வி உள்ளது. அவர்கள், அதில் உனக்கு திறமையில்லை உடனே ராஜினாமா செய் என்று கூறிவிட முடிகிறது. அனைத்து அமைச்சர்களையும் இந்த முறையில் கையாளுகிறீர்கள். இதனால் எங்கள் மீது வெறுப்பு உருவாகிவிடுகிறது. நாங்கள் இதை ஏற்று்க்கொள்ளும் பக்குவத்தை அடைந்துவிட்டோம்.

பக்குவம், முதிர்ச்சி என எதனைக் குறிப்பிடுகிறீர்கள்

பொறுப்பை ஏற்றுக்கொண்டு நிறைய பேசுவது, நிறைய கேட்பது ஆகியவற்றைத்தான்.  

இந்தியன் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்