தென்னிந்தியாவில் மனித உரிமை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகையாளர்! -தன்யா ராஜேந்திரன்
உஜ்யாயினி மித்ரா |
உஜ்யாயினி மித்ரா
தகவல்துறை தலைவர், ஜீ5
மித்ராவுக்கு சிறிய வயதில் கணித பிரச்னைகளை தீர்ப்பது பிடிக்கும். இதன் காரணமாகவே சென்னை கணித கழகத்தில் கணிதமும், கணினி அறிவியலும் படித்துமுடித்தார். இதற்காக ஐஐடி வாய்ப்பையும் கைவிட்டுவிட்டார். இந்திய புள்ளியல் கழகத்தில் க்வான்டிடேட்டிவ் எகனாமிக்ஸ் பட்டம் படித்துள்ளார். இவருக்கு மெக்கின்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக வேலை வழங்கப்பட்டது. வேலை பற்றி ஏதும் தெரியவில்லை என்றாலும், அங்குள்ளவர்கள் தகவல் அறிவியல் பற்றி அறிவைக் கற்றுக்கொடுத்தார்கள். நிறுவனம் சார்பாக உலகம் முழுக்க அலைந்து திருந்தி ஆறு ஆண்டுகள் பணி செய்தார். இதன் காரணமாக, பார்தி ஏர்டெல், பிளிப்கார்ட், வயகாம் 18 ஆகிய நிறுவனங்களில் மித்ராவால் முத்திரை பதிக்க முடிந்தது.
தற்போது தகவல் அறிவியல் சார்ந்து தான் பெற்ற அனுபவங்களை பல்வேறு கல்வி நிலையங்களில் பகிர்ந்து வருகிறார். தொழில் வாழ்க்கையைத் தாண்டி மித்ரா, ஹடயோகா ஆசிரியராகவும் உள்ளார். பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பயணம் செல்வதில் ஆர்வம் காட்டுபவர்.
தன்யா ராஜேந்திரன்
ஆசிரியர், தி நியூஸ்மினிட்
நியூஸ்மினிட் நிறுவனம், மாற்றுத்திறனாளிக்கு ஆதரவான பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக செய்திகளை சிறப்பாக வெளியிடுவதற்கான நம்பமான ஊடகம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் சிறிய குழுக்களை வைத்துக்கொண்டு தி இந்து, டெக்கான் ஹெரால்டு ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும்படி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள அதிகம் படிக்கப்பட்டு வரும் செய்திதளமாக நியூஸ்மினிட் உள்ளது.
தன்யா, இந்த நிறுவனத்தை தொடங்கும் முன்னர் டைம்ஸ் நவ் டிவியில் தென்னிந்தியாவுக்காக செய்தி ஆசிரியராக இருந்தவர். தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள செய்திகளை நியூஸமினிட் சாதாரண மனிதரின் பார்வையில் வெளியிடுவதுதான் அதன் வெற்றிக்கு காரணம். 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று ஆங்கில செய்தி வலைத்தளங்களுக்கு சிறந்த மாற்றாக உள்ளது. தரமான செய்திகளையும் மனித உரிமை மீறல்களையும் 18 ஆண்டு கால பணியில் அடையாளப்படுத்தியது தன்யா ராஜேந்திரனின் முக்கியமான பணி. அதற்கான சான்றை அவரது நியூஸ்மினிட் வலைத்தள செய்திகளிலும் பார்க்கலாம்.
நீனா தாஸ்குப்தா
சிர்கா டிஜிட்டல் சொல்யூஷன்ஸ், இயக்குநர் , தலைவர்
நீனா விற்பனைத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சிர்கா நிறுவனத்தின் துணை நிறுவனரும் இவரே. முக்கியமான ஊடக நிறுவனங்களாக மீடியா மேத, டியூப் மொகுல், ஆட்பார்ம் ஆகிய நிறுவனங்களை இந்தியாவுக்கு அழைத்து வந்த பெருமைக்குரியவர் இவர். ஆண்களின் ஆதிக்கம் அதிகமுள்ள துறையான இதில், நீனா தனது நிறுவனத்தின் வளர்ச்சியை பெருமளவு அதிகரித்துள்ளார். அதன் விளைவாக கடந்த ஆண்டும் இம்பேக்ட் 50 பட்டியலில் இடம்பெற்றார். இப்போது நடப்பு ஆண்டிலும் இடம்பிடித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக