பழங்குடிகளின் வாழ்வாதாரங்களை சட்டம் மூலமாக பறிக்கும் தரகு கும்பல்கள்!
உலக நாணய நிதியம், உலக வர்த்தக கழகம் ஆகிய அமைப்புகள் உலக நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டும் பெருநிறுவனங்களுக்கு தரகர்கள் போலவே செயல்படுகின்றன. இயற்கையை சுரண்டுவதோடு, பழங்குடிகளை வாழ்வாதார நிலத்திலிருந்து வெளியேற்றும் வகையில் சட்டங்களை திருத்த அரசுகளை வற்புறுத்துகின்றன. அப்படி சொல்லித்தான் நிதியுதவிகளை தாராளமாக தருகின்றன. நவ தாராளவாத நிறுவனங்களான இத்தகைய அமைப்புகளே இயற்கை அழிக்கும் ஆபத்தான சக்திகள். நவ தாராளவாத நிறுவனங்களோடு அமைப்புகளோடு போராடுவது எளிதல்ல. சமூக வலைத்தள ஆப்களை விலைக்கு வாங்கும் அரசுகள், அதன் வழியாக போராட்டம் பற்றி, போராட்டக்காரர்கள் பற்றிய மோசமான அவதூறுகளை பரப்புகின்றன. மக்களை சாதி, மதம், இனம் வாரியாக பிரிக்கின்றனர். பிறகு எளிதாக இயற்கை வளங்களை வேட்டையாடுகின்றனர். அரச பயங்கரவாதம் சட்டப்பூர்வமாக இயங்கத் தொடங்கிவிட்டது. சோசலிசவாதிகள், சூழலியலாளர்கள், சூழல் சோசலிசவாதிகள் பழங்குடிகளுக்கு ஆதரவாக நிற்பது அவசியம். அப்போதுதான், காடுகளை பறிக்க முயலும் கொள்ளையர்களை தடுத்து மக்களுக்கு உதவ முடியும். சுரங்கம், கச்சா எண்ணெய், உயிரி எரிபொருள் ஆகியவை இயற்கை வளங்களை சுரண்டி மாசுபடுத...