இடுகைகள்

கிளப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊருக்கு நல்லது செய்யும் மோட்டார் சைக்கிள் கிளப்புகள்!

படம்
  யமஹா, கவாசாகி நின்ஜா, ஹீரோ இம்பல்ஸ், பல்சர் என பைக்குகளை ஓட்டும் இளைஞர்கள் எப்போதும் சமூகத்தில் ஆபத்தான ஆட்களாகவே பொறுப்பற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் நடந்துகொள்ளும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற அவசரமான மனநிலையும் முக்கியமான காரணம்.   ராபர்ட் எம் பிர்சிக் என்பவர், ஸென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டார்சைக்கிள் மெயின்டனன்ஸ்   என்ற நூலை எழுதியிருக்கிறார். ‘’மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வது என்பது தெரபி போலத்தான். பைக் பயணம் மூலம் ஒருவர் உலகத்தின் மீதும் சமூகத்தின் மீதும் கவனம் கொள்கிறார்’’ என்று பேசுகிறார். இங்கு நீங்கள் படிக்கப்போவது மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு பீச்சில் பந்தயத்திற்கு போய் வாக்கிங் வரும் தொப்பை அங்கிள்கள் மீது மோதுபவர்கள் அல்ல. சமூகத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் நன்மை செய்யும் ஆட்களைப் பற்றித்தான். ஊர்வதி பத்தோலுக்கு இப்போது வயது 35 ஆகிறது. அவர் முதன்முதலில் தனது அக்காவின் தோழி ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்தார். அதனால், பின்னாளில் ராயல் என்பீல்ட் பைக் ஒன்றை வாங்கி ஓட்டத் தொடங்கினார். முதன்முதலில் பைக் ஓட்டத் தொடங்கியபோது அவருக்கு வயது