இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை விளையாட்டு மூலம் ஊக்குவிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் - ஷானாஸ் பர்வீன்

படம்
        விளையாட்டு மூலம் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும் விளையாட்டு ஆசிரியர்! காவல்துறையில் பணியாற்றிய அப்பா மறைந்துவிட, குடும்பம் பொருளாதாரத்திற்கு தடுமாறியது. அந்த நிலையிலும் ஷானாஸ் பர்வீனின் விளையாட்டு ஆர்வத்திற்கு அவரின் அம்மா தடை விதிக்கவில்லை. இதனால் தான் இன்று ஷானாஸ் கால்பந்து, ரக்பி, ஐஸ் ஸ்டாக், பென்கேக் சிலாட் என பல்வேறு விளையாட்டு அமைப்புகளை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். காஷ்மீர் இளைஞர், பெண்களை விளையாட்டு வழியாக ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தனி மனிதராக பெரும்பாடு பட்டிருக்கிறார் ஷானாஸ். அரசு ஆதரவு இல்லாத நிலையில் அப்பாவின் ஓய்வூதியம் மட்டுமே அம்மா, தாய் இருவரின் வயிறு காயாமல் காப்பாற்றியது. எந்த நிலையிலும் தனது விளையாட்டு கனவை கருகவிட்டதில்லை. அதற்கு, அவரைப் புரிந்துகொண்ட தாய் கிடைத்தது முக்கியமானது. இதனால் விளையாட்டு பயிற்சிக்கு போய்விட்டு வீட்டுக்கு தாமதமாக வரும்போது, வீட்டுக்கு தாமதமாக வருகிறாள் பாருங்கள், பையன்களுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறாள், விளையாடி காயம்பட்டால் இவளுக்கு எப்படி திருமணமாகும் என பல்வேறு சாடைகள் பேசப்பட்ட சூழலி

ஹாரி அரச குடும்பத்தை விட்டு விலகியதைப்பற்றி டயானா கவலைப்பட்டிருப்பார்! - டினா ப்ரௌன், பத்திரிகையாளர்

படம்
               டினா ப்ரௌன் ஆங்கில அமெரிக்க பத்திரிகையாளர் டினா, டாட்லர், வேனிடி ஃபேர், தி நியூயார்க்கர், நியூஸ்வீக், தி டெய்லி பீஸ்ட் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டவர். இவருக்கு வயது 68 ஆகிறது. இவரது கணவர், புகழ்பெற்ற பத்திரிகையாளரான சர் ஹெரால்ட் ஈவன்ஸ்.  2007ஆம் ஆண்டு தி டயானா க்ரானிக்கல்ஸ் என்ற நூலை எழுதினார். தற்போது அதன் தொடர்ச்சியாக தி பேலஸ் பேப்பர் என்ற நூலை எழுதியுள்ளார். அரசு குடும்பத்தைச் சேர்ந்த டயானா இறந்து இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவுகிறது. அவரிடம் பேசினோம். இப்போது டயானா உயிரோடு இருந்தால் அவர் எந்த மாதிரி செயல்பட்டிருப்பார்? அவர் அரசகுடும்பத்தில் இணைந்துதான் இருப்பார் என நினைக்கிறேன். ஹாரி, மேகன் போல பிரிந்திருக்க மாட்டார். அரச குடும்பத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருப்பார். பிரிந்துசெல்லாமல் ஒன்றாக இருக்க முயல்வார். தனது அடையாளத்தை கைவிட்டு கென்சிங்கன் மாளிகையை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். டயானாவுக்கு அவரது மருமகள் கேட்டிற்கும் நல்ல உறவு இருந்திருக்கும் என பலரும் சொல்லுகிறார்கள். ஆனால் இதில் நான் முரண்படுகிறேன். அவர் பிறரோடு போட்டிபோடு

கொலைக்கரத்தால் தடுமாறும் ஜானி நீரோ, ஸ்டெல்லா - முத்து காமிக்ஸ்

படம்
  கொலைக்கரம்  முத்து காமிக்ஸ்  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேசப்பற்றுக் கதை. கதையில், பெரிய நினைத்து வியப்படையும் சண்டைக்காட்சிகள் ஏதும் கிடையாது. கதையில் ஆச்சரியப்படுத்துவது ஜானி நீரோ அல்லது ஸ்டெல்லா அல்ல. வில்லனான மைக்கேல்தான். அவரின் திறமைதான் கொலைக்கரம் என தலைப்பு வரக்காரணம். இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றுபவரின் கைகள் எஃகு போன்றவை. ஆயுதமே இல்லாமல் ஜெர்மன் படை வீர ர்களை கழுத்தை உடைத்து புகழ்பெற்றவர். நாட்டிற்காக இப்படி உழைத்தாலும் அவரது குடும்பத்தை அயர்லாந்து நாட்டிற்கு சுதந்திரம் கேட்டதற்காக இங்கிலாந்து அரசு சுட்டுக்கொல்கிறது. அவர்களின் செயல்பாடுகளை தேசதுரோகி என்ற ஒற்றை வார்த்தையில் பேசி முற்றுப்புள்ளி வைக்கிறது., இதனால் மைக்கேல் விரக்தி கொள்வதோடு, இங்கிலாந்தை பழிவாங்க முடிவு செய்கிறார். இதற்காக தக்க சமயத்திற்காக காத்திருக்கிறார். அப்படி ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கிறது. அறிவியல் விஞ்ஞானி ஒருவர் மேக உடைப்பு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் கருவி ஒன்றை உரு வாக்கியிருக்கிறார். இந்த கருவி ஒரு நகரில் கூடும் அதிக மேகங்களை, மேக கூட்டங்களை கலைக்கும் திறன் கொண்டது. இதனால் நகரம

இரண்டாவது முறையாக கால வேட்டையர்களைத் தடுக்கும் பத்திரிகையாளர் குழு - கால வேட்டையர்கள் - 2

படம்
              கால வேட்டையர்கள் நூலில் உள்ள இரண்டாவது கதை....... இதில், புதுமையான பகுதிகளை சுற்றிப்பார்க்க ஆர்வமுடையவர்களை டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று வரவேற்கிறது. அவர்களின் பின்புலங்களை விசாரித்து முடிந்தளவு தனிநபர்களாக இருக்கும்படி பார்த்து சுற்றுலாவிற்கு கூட்டிச்செல்கிறது. இப்படி செல்பவர்கள் எவரும் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதில்லை. இதுபற்றி புலனாய்வு செய்ய பத்திரிகையாளர் மீண்டும் மாறுவேடத்தில் சுற்றுலா பயணியாக செல்கிறார். அப்படி செல்லும்போது, பயணத்தில் புதுமணத்தம்பதியாக முதல் கதையில் பார்த்தோமே ஆர்வக்கோளாறு லௌரியும் இருக்கிறாள். அவளுக்கு அந்த பயண பின்னணி தெரியாது. ஆனால் ஒருமுறை பத்திரிகையில் டிராவல்ஸ் விளம்பரத்தை பார்க்கிறாள். அது வினோதமான அறிவிப்பாக இருக்கிறது. மேலும், அதுபற்றி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு செ்ன்று விசாரிக்கிறாள். அங்கு வயதான பெண்மணி தன்னுடைய மருமகள் பயணத்திற்கு சென்றாள். ஆனால் திரும்ப வீடு திரும்பவில்லை என புகார் கொடுத்தபடி நிற்கிறாள். இதுபற்றி விசாரிக்க முற்படுகையில் அவளை குள்ளர்களின் ஆட்கள் சூட்களில் கடத்துவதற்கு நெருங்குகிறார்கள். இதை அடையாளம் கண்ட லௌரி சாமர்

மனிதர்களின் மூளையில் உள்ள நியூரான்களைத் திருடி அவர்களை பைத்தியமாக்கும் வேற்றுகிரக குள்ளர்கள்- கால வேட்டையர்கள் - முத்து காமிக்ஸ்

படம்
        கால வேட்டையர்கள் முத்து காமிக்ஸ் சிவகாசி மெக்சிகோவில் நடைபெறுகிற கதை. அங்கு ஒரு பத்திரிகையாளர் பணியாற்றுகிறார். அவர் தனது நாளிதழுக்காக வேடிக்கையான கட்டுரை ஒன்றை எழுதுகிறார். அதன் விளைவாக அவருக்கு நேரும் ஆபத்துகளும் அது பிறரை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. புதிதாக திருமணமான ஜோடி இருவர், கடற்கரையில் வந்து தேனிலவைக் கொண்டாடுகிறார்கள். அப்போது புகைப்படம் எடுக்க மணற்குன்று ஒன்றை நோக்கிச் செல்கிறார்கள். அங்குதான் வினோதமான குள்ளர்கள் ஒருவரை பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். கணவன், அவர்களிடமிருந்து அந்த மனிதனை மீட்க உதவுகிறான். மீட்கப்படும் மனிதன்தான், பத்திரிகையாளர். அடுத்த சம்பவம் தேனிலவு தம்பதிகளுக்கு நடைபெறுகிறது. அதில் கணவனைக் கொல்லும் முயற்சி தோல்வியில் முடிகிறது. மனைவியை பத்திரிகையாளரை கடத்த முயன்று தோல்வியுள்ள குள்ளர்கள் கூட்டிச்சென்று விடுகிறார்கள். அப்புறம் என்ன கதை தொடங்கிவிட்டது. அந்த குள்ளர்கள் யார், எதற்கு பத்திரிகையாளரை குறிவைத்து தாக்கி கடத்த முயன்றார்கள், இதில் புதுமணத் தம்பதிகளை ஏன் குள்ளர்கள் குறி வைக்கிறார்கள் என்பதற்கான விடையை காமிக்ஸ் விவரிக்கிறது. இந

வாழ்வின் அவலத்தை, துயரத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கதைகள் - பஷீர் - 40 கதைகள் - சுகுமாரன் - காலச்சுவடு

            பஷீர் - தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது சிறுகதைகள் தொகுப்பு - சுகுமாரன் காலச்சுவடு பதிப்பகம் மின்னூல் கேரளத்தின் புகழ்பெற்ற இலக்கியவாதியான பஷீர் எழுதிய கதைகளில் நாற்பது கதைகள் இந்த நூல் தொகுப்பில் உள்ளன. பஷீர் எழுதிய முக்கியமான படைப்புகளை நான்கு வெவ்வேறு படைப்புகளாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீரின் தரமான நூல்களை வாங்க நினைத்தால் வாசகர்கள் காலச்சுவட்டை அணுகலாம். பஷீரின் கதைகள் அனைத்துமே வாழ்க்கையின் பல்வேறு காலகட்ட அனுபவங்களைக் கொண்டவைதான். மகிழ்ச்சி, துயரம், லட்சியவாதம் துன்பங்கள், காதல், எழுத்தாளனின் எழுத்து அனுபவங்கள், அரசு பயங்கரவாதம், இந்து, முஸ்லீம் மத வேறுபாடுகள் என பலவற்றையும் நாற்பது கதைகளில் வாசகர்கள் படித்து உணர முடியும். திரு. இரா. முருகானந்தம் ஒருமுறை பேசும்போது சொன்னார். வாழ்க்கையில் எந்தளவு மோசமான நிலை வந்தாலும் கூட அதை எதிர்கொள்ளும் தைரியத்தை பஷீரின் எழுத்துகள் தருகின்றன என்றார். அதை வாசிக்கும்போது வாசகர்கள் எளிதாக உணரலாம். முதல் இரண்டு கதைகள் சற்று துன்பியல் நிகழ்வுகளைக் கொண்டவை. அதாவது ஜென்ம தினம், டைகர். தொகுப்பில் உள்ள இந்த இரு கதைகளில் டைகர் சற்

கடித நூலை பதிவேற்ற செய்யமுடியாமல் தடுத்த அமேஸானின் அல்காரிதம்! - அமேஸான் அக்கப்போர் -1

படம்
  அமேஸானுடன் ஒரு அக்கப்போர்! அமேஸானில் இதுவரை பத்து மின்னூல்களை வெளியிட்டுள்ளேன். ஆனால் இதுவரை பெரிய பிரச்னை ஏதும் வந்தது கிடையாது. நூலில் பயன்படுத்துவது அனைத்தும் யுனிகோட் எழுத்துரு என்பதால் பிழைகளும் இருக்காது. அதாவது படிக்கும்போது பெட்டிபெட்டியாக வரும் பிரச்னையைச் சொல்லுகிறேன்.  இதுவரை அப்படி புகார் வந்ததில்லை. ஆனால் இப்போது அமேஸான் அப்படிப்பட்ட பிரச்னைகள் வருவதாக பயனர்கள் புகார் கொடுத்துள்ளனர். என பல பக்கங்களுக்கு ஒரு கோப்பைக் காட்டி அதிலுள்ள தவறுகளை திருத்துங்கள். பிறகு நூலை பதிவேற்றம் செய்யலாம் என நிபந்தனை விதிக்கிறது. இந்த சவாலைத் தாண்டுவதே கடினம். அப்படித் தாண்டினால் அடுத்துதான் அட்டைப்பட அக்கப்போர்கள் வரும். இதற்கு அடுத்ததாக உள்ளது, நூலின் அட்டைப்படம். பொதுவாக அட்டைப்படத்தை நான் ஜிம்பில் அல்லது போட்டோஷாப்பில் எல்லாம் செய்வது கிடையாது. அதற்கென கன்வா வலைத்தளம் உள்ளதே என ஒரு அசட்டு துணிச்சல். அதே துணிச்சல் தான் இதற்கு முன்னர் பயன்பட்டது. ஆனால் இந்த முறை டோல்கேட்டில் பணத்தை கேட்டு மிரட்டுவது போலாகி விட்டது நிலைமை. பத்தாயிரம் பிக்சல்களுக்குள் அட்டைப்படம் அடங்கவில்லை என அமேஸானின் அல

இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

படம்
              இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு முடவன் குட்டி முகமது காலச்சுவடு மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ் நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு

வெளியே வெயில், உள்ளே புழுக்கம்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
        இயற்கை நேசனின் அற்புத காட்சி அனுபவம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? சில நாட்களுக்கு முன்னர் வெயில் குறைந்தது போல தெரிந்தது .. இப்போது வெயில் மீண்டும் தன் இயல்பான நிலையில் சுட்டெரித்தது . ஒருமுறை சட்டை போட்டு மதியம் சாப்பிட் அறைக்கு சென்றாலே எனக்கு வியர்வையால் குளித்தது போல ஆகிவிடுகிறது . குங்குமம் தோழியில் வேலை பார்த்த அன்னம் அரசு இப்போது ஜூனியர் விகடன் இதழுக்கு ப் போய்விட்டார் . இந்த தகவலை நான் தாமதமாகவே தெரிந்துகொண்டேன் . நான் இந்த வாரமும் குங்குமம் இதழை வாங்கவில்லை . முன்பு போல அதன் கட்டுரைகள் சிறப்பாக இல்லை . உள்ளடக்க விஷயங்களில் தடுமாறுவது போல தோன்றியது . எங்கள் நாளிதழ் வேலைகளை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டேன் . ஜூலை மாதம் வரை எழுதிவைத்தாயிற்று . ஆகஸ்ட் மாத கட்டுரைகளை இனிமேல்தான் எழுதி தயாரித்து வைக்க வேண்டும் . இன்ஃபோகிராபி வேலைதான் அதிக நாட்களை இழுத்துக்கொள்ளும் என நினைக்கிறேன் . அதையும் அவ்வப்போது தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் . வனவாசி - விபூதிபூஷன் பந்தோபாத்யாய நாவலைப் படித்தேன் . கோவையிலுள்ள விடியல் பதிப்பக வெளியீடு . கல்கத்

குமுதத்தை விற்பனை சிகரத்தில் ஏற்றிய எடிட்டர் எஸ்ஏபி! கடிதங்கள்- கதிரவன்

படம்
            மொழி எனும் தீராந்தி அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நேற்று அநதிமழை இதழ் படித்தேன் . அதில் உடல் எடை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தனர் . உடல் பருமன் என்பதை நாம் எப்படி பார்க்கவேண்டும் , பிறர் அதை எப்படி பார்க்கிறார்கள் என எழுதியிருந்தனர் . இதழை முழுமையாகப் பார்க்கும்போது சுமார்தான் . கழுதை மருத்துவர் ஒருவரின் பணி சார்ந்த அனுபவங்கள் வாசிக்க நன்றாக இருந்தது . நேற்று தீராநதி இதழைப் படிக்க நினைத்தேன் . அருகிலிருந்த கடைகள் எங்கிலும் இதழ் தீர்ந்துவிட்டது அல்லது இல்லை என்றே சொன்னார்கள் . பிறகு அலுவலக சகாவிடம் சொல்லி வாங்கினேன் . லாக்டௌனில் நின்றுபோன பத்திரிகை இப்போது மீண்டும் வருகிறது . இந்தியாவில் நிலவும் மொழிப்பிரச்னை பற்றி காந்தி பேசிய உரைகளைக் கொண்ட நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்து , முஸ்லீம் ஒற்றுமைக்காக தேவநாகரி லிபியில் இந்தி படிக்க வலியுறுத்துகிறார் காந்தி . 30 பக்கங்களை படித்திருக்கிறேன் . வெயில் தாக்கம் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது . உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் . நன்றி ! அன்பரசு 8.6.2022 மயிலாப்பூர் -------------

சதியின் இறுதி முடிவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
            தின்பண்ட நிர்பந்தம் ! அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . இன்றும் நான் அலுவலகம் சென்றேன் . சற்று ரிலாக்சாக வேலை செய்ய சனிக்கிழமை உதவுகிறது . ஆனால் என்ன நான் வாங்கும் சில தின்பண்டங்களை டெய்லி கதிர் செக்யூரிட்டிகளிடம் பகிர்ந்து சாப்பிடும் நிர்பந்தம் உள்ளது . அவ்வளவுதான் . வரும் வாரத்தில் தொடங்கும் நாளிதழ் வேலைகள் மெல்ல சுணங்குவது போல தோன்றுகிறது . எழுதும் ஆட்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது . நானே எழுதினால் அதுவெறும் செய்திக்கட்டுரை என்கிறார்கள் . பிறகு என்னதான் செய்வது என்றால் நம்மைப் பார்த்து கையை விரிக்கிறார்கள் . பிழைப்பு இப்படித்தான் ஓடுகிறது . வேர்ட் ஆப் ஹானர் என்ற வெப் தொடரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் . மாண்டரின் மொழி தொடர் . எம்எக்ஸ் பிளேயரின் தமிழ்மொழிபெயர்ப்பு . தொன்மையான தற்காப்புக்கலை வல்லுநர்கள் ஆயுதக்கிடங்கு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் . அதை பல்வேறு தனி மனிதர்கள் , தற்காப்புக்கலை மடங்கள் அடைய ஆசைப்படுகின்றன . அதை அடைந்தால் அவர்கள்தான் சீன நாட்டையே ஆளும் சக்தி பெறுவார்கள் . ஆயுதக்கிடங்கை அடையும் பேராசை மனிதர்களை எப்படி பாதிக