மனிதர்களின் மூளையில் உள்ள நியூரான்களைத் திருடி அவர்களை பைத்தியமாக்கும் வேற்றுகிரக குள்ளர்கள்- கால வேட்டையர்கள் - முத்து காமிக்ஸ்
கால வேட்டையர்கள்
முத்து காமிக்ஸ்
சிவகாசி
மெக்சிகோவில் நடைபெறுகிற கதை. அங்கு ஒரு பத்திரிகையாளர் பணியாற்றுகிறார். அவர் தனது நாளிதழுக்காக வேடிக்கையான கட்டுரை ஒன்றை எழுதுகிறார். அதன் விளைவாக அவருக்கு நேரும் ஆபத்துகளும் அது பிறரை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை.
புதிதாக திருமணமான ஜோடி இருவர், கடற்கரையில் வந்து தேனிலவைக் கொண்டாடுகிறார்கள். அப்போது புகைப்படம் எடுக்க மணற்குன்று ஒன்றை நோக்கிச் செல்கிறார்கள். அங்குதான் வினோதமான குள்ளர்கள் ஒருவரை பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். கணவன், அவர்களிடமிருந்து அந்த மனிதனை மீட்க உதவுகிறான். மீட்கப்படும் மனிதன்தான், பத்திரிகையாளர்.
அடுத்த சம்பவம் தேனிலவு தம்பதிகளுக்கு நடைபெறுகிறது. அதில் கணவனைக் கொல்லும் முயற்சி தோல்வியில் முடிகிறது. மனைவியை பத்திரிகையாளரை கடத்த முயன்று தோல்வியுள்ள குள்ளர்கள் கூட்டிச்சென்று விடுகிறார்கள். அப்புறம் என்ன கதை தொடங்கிவிட்டது.
அந்த குள்ளர்கள் யார், எதற்கு பத்திரிகையாளரை குறிவைத்து தாக்கி கடத்த முயன்றார்கள், இதில் புதுமணத் தம்பதிகளை ஏன் குள்ளர்கள் குறி வைக்கிறார்கள் என்பதற்கான விடையை காமிக்ஸ் விவரிக்கிறது.
இந்த காமிக்ஸ் இருபகுதிகளைக் கொண்டது. இரண்டும் தனித்தனியாக வாசிக்கலாம். அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நேரத்தை எப்படி கொள்ளையடித்து மனிதர்களை ஜோம்பி போல வேற்றுகிரக குள்ளர்கள் ஆக்குகிறார்கள் என்பதைத்தான். இதை வெறும் புதிய கருத்து என்பது போல சொல்லாமல் அதை தீவிரமாக இன்போகிராபி போல போட்டு விளக்கியிருக்கிறார்கள். அதை படித்துவிட்டு, கதைக்குள் போகலாம். அல்லது கதையை அதன் போக்கிலேயே படித்துவிட்டு கடந்துசெல்லலாம், அறிந்து படித்தால் இன்னும் கதையை கிரிப்பாக புரிந்துகொள்ள முடியும்.
இதில் யுலா என்ற பிரபஞ்ச காவலர் கிளாமரான உடையில் வருகிறார் பார்த்து ரசித்து ஆக்சன் காட்சிகளை படித்து பார்த்து பிரமிக்கலாம். அவருக்கான கதைத்தோழர் வேறு யார் பத்திரிகையாளர்தான். எதிர்காலத்திலும் அவர்தான் சரியான ஜோடியாக இருக்க முடியும். இருவரும் செம பொருத்தம். யுலாவிற்கு நிறைய திறமைகள் உண்டு. வேற்றுகிரக குள்ளர்களை, அவர்களின் தலைவனை கட்டுப்படுத்துவது அதாவது கண்டுபிடித்து அழிக்கும் பணியை செய்யவே யுலா பூமிக்கு வருகிறார். பாதிக்கப்படும் நபர்களை டெலிபதி மூலமாக தொடர்புகொண்டு அவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். இப்படி பத்திரிகையாளரை ரயில் நிலையத்தில் காப்பாற்றும் காட்சி சிறப்பாக வரையப்பட்டுள்ளது.இன்னொரு இடமாக தொன்மை கோவில் ஒன்றில், நடக்கும் ஆக்சனில் யுலா தோன்றி கவர்ச்சியில் நம்மை மயக்குவதோடு திறமையாக துப்பாக்கியை கையாண்டு குள்ளர்களை அழிப்பார். அதுவும் பிரமாதமாக வரையப்பட்டுள்ள காட்சி.
முதல் கதையில், மனிதர்களை சிறைபிடித்து அவர்களின் நியூரான்களை கொள்ளையடித்து அவர்களை ஜோம்பிகள் போல அரைப்பைத்தியமாக்கும் குள்ளர்களின் முயற்சியை தடுக்கிறது யுலாவுடன் இணைந்த பத்திரிகையாளர், கிறிஸ், லௌரி கூட்டணி.
Komalimedai Team
Thanks -Murugu
கருத்துகள்
கருத்துரையிடுக