5 ஜியால் முன்னேறும் துறைகள்! - போக்குவரத்து, சூப்பர் ஆப், விற்பனைத்துறை
5 ஜி பயன்கள்
ஸ்மார்ட்போன் பயனாளர்கள்
டேட்டா வேகம் பத்து மடங்கு அதிகரிக்கும். தரவிறக்க வேகத்திற்கு வட்டவடிவில் சுத்துவதை நீங்கள் பார்க்கும் துரதிர்ஷ்டம் நேராது. ஓடிடி தளத்தில் நிகழ்ச்சிகளை பார்ப்பது வேகமாகும்.
வீடு
வீஆர் விளையாட்டுகளை எளிதாக விளையாடலாம். 8கே அளவிலான டிவிகளைப் பயன்படுத்தலாம்.
கல்வி
பெருந்தொற்றில் அறிமுகமான டிஜிட்டல் கல்வி இன்னும் வேகமாகும். நெடுந்தொலைவில் இருந்தாலும் கூட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கற்றுத் தரமுடியும்.
விற்பனை
விரல் முனையில் தட்டினால் பொருட்கள் வாசலில் வந்து நிற்கும். குரல் வழி ஆணை, உடல்மொழி மூலம் நீங்கள் எளிதாக பொருட்களை வாங்கலாம். பணத்தை வேகமாக செலுத்தலாம். அமேசான் கோ போல கேஷியர் இல்லாத சூப்பர் மார்க்கெட்டுகள் உருவாக வாய்ப்புள்ளது.
வங்கி
மொபைலில் இருந்தே வங்கியில் செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்யலாம். வங்கிக்கு செல்வது என்பது மிக அரிதான நிகழ்வாக மாறும்.
விவசாயம்
பயிர் விதைப்பது தொடங்கி சாகுபடி வரையிலான அனைத்து விஷயங்களும் தொழில்நுட்ப ரீதியாக ஒழுங்குபடுத்தப்படும்.
உற்பத்தித்துறை
இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் முறையில் சென்சார், கருவிகள் உருவாகும், அல்காரிதம் மூலம் மாசுபாடு குறைக்கும் பல்வேறு செயல்பாடுகள் உருவாகும்.
சூப்பர் ஆப்
டாடா நியூ, ஜியோமார்ட்,பேடிஎம் போன்ற சூப்பர் ஆப்கள் அதிகரிக்கும். இவற்றை இயக்குவதற்கான செலவும் குறையும்.
போக்குவரத்துத்துறை
பாஸ்டேக் தொழில்நுட்பம் இன்னும் மேம்படும். மின் வாகனத்துறை வளர்ச்சிபெறும். மேலும், சார்ஜிங் நிலையங்கள் அதிகளவில் உருவாக்கப்படும்.
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக