வாசிக்க வேண்டிய நூல்கள்! இயற்கை சார்ந்தவை
வைல்டர்
மில்லி கெர்
ப்ளூம்ஸ்பரி
பத்திரிகையாளர், கானுயிர் பாதுகாப்பாளர் மில்லி கெர் எழுதிய நூல். காடுகளில் செயல்படுத்தும் திட்டங்கள், காடுகளை வளர்ப்பது ஆகியவை பற்றி நூலில் கூறியுள்ளார். அர்ஜென்டினா தேசியப் பூங்காக்களுக்கு ஜாகுவார்கள் கொண்டு வரப்பட்டதையும், தென் ஆப்பிரிக்காவில் எறும்பு தின்னிகள் கொண்டு வரப்பட்டதையும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் வில்லி கெர்.
இல்லுமினேட்டட் பை வாட்டர்
மலாச்சி தாலக்
டிரான்ஸ் வேர்ல்ட்
மீன் பிடிப்பது அனைவருக்கும் ஏற்றதல்ல. ஆனால் அதை செய்பவர்கள் அனுபவித்து செய்வார்கள். எழுத்தாளர் மலாச்சி தாலக்கும் ஆங்கில கணவாயில் தான் மீன் பிடித்த அயர்ச்சியான அனுபவத்தை நூலாக எழுதியிருக்கிறார். கலாசார வேறுபாடுகள் இந்த பணியில் எப்படி இருக்கின்றன என்பதையும் கூறியிருக்கிறார்.
வைல்ட்லிங்க்ஸ்
ஸ்டீவ் பேக்ஷால், ஹெலன்
குளோவர்
ஜான் முர்ரே
குழந்தைகளும் பெற்றோர்களும் சேர்ந்து செய்யவேண்டிய பல்வேறு ஆக்டிவிட்டிகள் நூலில் உள்ளன. அவற்றை வீட்டைவிட்டு வெளியில் தான் செய்யவேண்டும். இந்த நூல் அதுபோல நிறைய செயல்பாடுகளை பரிந்துரைக்கிறது. இதை செய்தால் குழந்தைகளுடன் பெற்றோருடன் பிணைப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தி ஃப்ளோ
ஆமி ஜேன் பீர்
ப்ளூம்ஸ்பரி
நீருடன் நமக்குள்ள தொடர்பை பற்றி எழுத்தாளர் ஆமி ஜேன் பீர் விரிவாக எழுதியிருக்கிறார். ஆமியின் நண்பர் கேட் ஆற்றில் தான் இறந்துபோகிறார். அதிலிருந்து நூலின் கதைகள் தொடங்குகின்றன.
நன்றி
பிபிசி வைல்ட்லைஃப்
கருத்துகள்
கருத்துரையிடுக