புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பவளப்பாறைகளைக் காக்கலாம்!
பவளப்பாறைகளைக் காக்கும் முயற்சி!
மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, பெலிஸ். இங்கு கடல்பரப்பில் உள்ள பவளப்பாறைகள் சூழல் அமைப்பில் முக்கியமானவை. சூழலியலாளர் லிசா கார்ன், கடலில் பவளப் பாறைகளை ஆய்வு செய்து வருகிறார். இவர், காலநிலை மாற்றத்தில் அவை அழிந்துவருவதைக் கண்டார். இதைத் தடுக்க, 2013ஆம் ஆண்டு ஃபிராக்மென்டேஷன் ஆஃப் ஹோப் எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம், அழிந்த பவளப்பாறைகளை மீட்கும் செயல்பாடுகளை செய்து வருகிறார்.
லிசாவின் வீடருகே லாஃபிங் பேர்ட் கயே (Laughing Bird Caye) எனும் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள கடல்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை மீண்டும் வளர்க்க முயன்றுவருகிறார் லிசா. அறிவியலாளர்களின் ஆராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி, பவளப்பாறைத்துண்டுகளை வளர்த்து வருகிறார். சிமெண்டில் செய்த அடித்தட்டு கற்களில் பவளப்பாறைகளிலிருந்து சேகரித்த பகுதிகளை பொருத்தி வளர்க்கிறார். அழிந்துவரும் எல்க்ஹார்ன், பவளப்பாறைகளின் மரபணுக்களை சேகரித்து 28 மரபணு வங்கி நர்சரிகளை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த கடல் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர், டேவிட் வாகன். இவர், 45 ஆண்டுகளாக பவளப்பாறை சார்ந்த ஆராய்ச்சிகளை செய்துவருகிறார். மீன், சிப்பி இறால் ஆகியவற்றை வணிகரீதியாக வளர்த்து விற்றுவரும் தொழில்முனைவோரும் கூட. பவளப்பாறைகளை வணிக ரீதியாக தனியார் நிறுவனங்களும் வளர்க்க முன்வரவேண்டும் என்பது டேவிட் வாகனின் கருத்து. டிரை டோர்டுகாஸ் தீவில்(Dry Tortugas), மைக்ரோ ஃபிராக்மென்டிங் எனும் முறையில் பவளப்பாறைகளை வளர்க்கிறார். பிற முறைகளை விட புதிய முறையில் 40 சதவீதம் வேகமான வளர்ச்சி கிடைக்கிறது. 2015ஆம் ஆண்டு, இதுபற்றிய ஆய்வறிக்கையை ஹவாய் கடல் உயிரியல் துறையுடன் இணைந்து வெளியிட்டார். வாகன், லிசா கார்னேவின் குழுவினருக்கு பவளப்பாறைகளை பாதுகாப்பது பற்றிய பயிற்சியையும் ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.
A million little pieces
rowan moore gerety
wired may 2022
கருத்துகள்
கருத்துரையிடுக