சிதையும் தாய்மாமன் வழி உறவு! - கடிதங்கள்- கதிரவன்
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? தேர்தலுக்கான இரைச்சல் சென்னையில் அதிகமாகிவிட்டது. 6 மணிக்கு மேல் சாலையில் தேர்தல் இரைச்சல் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.
இன்று தகைமை சான்ற கோ ஆர்டினேட்டர் வரவில்லை. எனவே, இதழ் வேலைகளைப் பார்க்கத் சொல்லிவிட்டார் பொறுப்பாசிரியர். எனவே, எழுத நினைத்த கட்டுரைகளை எழுத முடியவில்லை. சனி என்றால் அலுவலக சகாக்கள் நிறையப் பேர் விடுமுறை எடுத்துவிடுவார்கள். ஆறுநாட்கள் அலுவலகம் என்பது மிக நீண்டதுதானே? இன்று தாய்மாமா மகன் தனது திருமணத்திற்காக அழைத்தார். நான் அழைப்பை ஏற்கவில்லை. அவரது திருமணத்திற்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பினேன். அவரும் அதற்குமேல் வற்புறுத்தவில்லை. எல்லாமே சடங்கு, சாங்கியம் என ஆகிவிட்டது. நமக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதெல்லாம் கிடையாது. செய்யவேண்டும் அவ்வளவுதான். தாய்மாமன் வழி உறவு இதோடு முடிவுக்கு வருகிறது.
ரஷ்மி பன்சலின் தொழில் சம்பந்தமான நூலைப் படித்து வருகிறேன். இன்னும் 70 பக்கங்கள் மிச்சமிருக்கிறது. எம்பிஏ படிக்காத தொழில்முனைவோரைத் தேர்ந்தெடுத்து பேட்டிகளை எடுத்து நூலாக்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த நூலை வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்போது ஆட்சியிலுள்ள மத்திய அரசு மிரட்டுவதால், பதிப்பகத்தை மூடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நன்றி!
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக