இடுகைகள்

திருப்பூர் கிருஷ்ணன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் படிக்கவேண்டிய நாவல்கள்! - சோம வள்ளியப்பன், திருப்பூர் கிருஷ்ணன், இந்துமதி, முகில் சிவா

படம்
              சென்னை புத்தக திருவிழா பக்கத்தில் வந்துவிட்டது . இந்த நிலையில் எழுத்தாளர்கள் சொல்லும் பல்வேறு நூல்பட்டியல் கவனம் பெறும் . ஆனால் இதனையே முழுக்க பின்பற்றுவது என்பது சரியானதாக இருக்கும் என்று கூறமுடியாது . எழுத்தாளர்களுக்கு அவர்களது கண்ணோட்டத்தில் சில நூல்கள் சரியான அரசியல் பார்வை கொண்டிருக்கும் . சிலருக்கு அது பிடிக்காமலும் இருக்கலாம் . இங்கு கூறப்படும் நூல்களையும் அப்படியே பார்ப்பது நல்லது . மிஸ் ஜானகி அண்ட் கல்யாணி எனக்கு தேவனோட நாவல்கள் தெய்வ வார்த்தைகள் போல . எழுத்து என்பதை யாராவது தொழிலாக எடுத்து செய்ய நினைத்தால் அவர்களுக்கு இந்த இரு நூல்கள் உதவும் . எனக்கு எழுத வராது வாசிக்க மட்டும்தான் என்றாலும் கூட அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தேவன் எழுத்துகள் தரும் . வி . திவாகர் , பத்திரிகையாளர் , வரலாற்று புதின எழுத்தாளர் . ரங்கநாயகி - பாரதி 1955 தொடங்கி நடைபெறும் கதையில் முக்கிய பாத்திரம் மணலூர் மணியம்மாள் . வரலாற்று பின்னணியில் சமூக பிரச்னைகளை பேசியிருக்கிறார்கள் . இந்த நூல் எனக்கு பிடித்துள்ளது . வரலாற்று நாவல்களில் இந்த நூல் முக்கிய இடம்