தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் படிக்கவேண்டிய நாவல்கள்! - சோம வள்ளியப்பன், திருப்பூர் கிருஷ்ணன், இந்துமதி, முகில் சிவா

 

 

 

 

 

Routemybook - Buy Miss Janaki [மிஸ் ஜானகி] by Devan [தேவன்] Online at ...

 

 

சென்னை புத்தக திருவிழா பக்கத்தில் வந்துவிட்டது. இந்த நிலையில் எழுத்தாளர்கள் சொல்லும் பல்வேறு நூல்பட்டியல் கவனம் பெறும். ஆனால் இதனையே முழுக்க பின்பற்றுவது என்பது சரியானதாக இருக்கும் என்று கூறமுடியாது.எழுத்தாளர்களுக்கு அவர்களது கண்ணோட்டத்தில் சில நூல்கள் சரியான அரசியல் பார்வை கொண்டிருக்கும். சிலருக்கு அது பிடிக்காமலும் இருக்கலாம். இங்கு கூறப்படும் நூல்களையும் அப்படியே பார்ப்பது நல்லது.



மிஸ் ஜானகி அண்ட் கல்யாணி


எனக்கு தேவனோட நாவல்கள் தெய்வ வார்த்தைகள் போல. எழுத்து என்பதை யாராவது தொழிலாக எடுத்து செய்ய நினைத்தால் அவர்களுக்கு இந்த இரு நூல்கள் உதவும். எனக்கு எழுத வராது வாசிக்க மட்டும்தான் என்றாலும் கூட அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தேவன் எழுத்துகள் தரும்.


வி. திவாகர், பத்திரிகையாளர், வரலாற்று புதின எழுத்தாளர்.


ரங்கநாயகி - பாரதி


1955 தொடங்கி நடைபெறும் கதையில் முக்கிய பாத்திரம் மணலூர் மணியம்மாள். வரலாற்று பின்னணியில் சமூக பிரச்னைகளை பேசியிருக்கிறார்கள். இந்த நூல் எனக்கு பிடித்துள்ளது. வரலாற்று நாவல்களில் இந்த நூல் முக்கிய இடம் பெறும் என நினைக்கிறேன்.


திருப்பூர் கிருஷ்ணன்.


திருக்கார்த்தியல்


ராம் தங்கம்


நான் இப்போது ராம் தங்கம் எழுதிய ராஜாவனம் என்ற நாவலைப் படித்து வருகிறேன். இவரின் எழுத்தில் இடங்கள்,மனிதர்கள், சம்பவங்கள் என அனைத்துமே சிறப்பாக உள்ளன. நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளரின் எழுத்தில் நம்பிக்கை தெரிகிறது. வரலாறு தொடர்பான விஷயங்களை சிறப்பாக எழுதியுள்ளார்.


முகில் சிவா


ரப்பர் வளையல்கள்

சிவசங்கர் ஜெகதீசன்


நமது வாழ்க்கையில் உள்ள நம்பிக்கை, துரோகம், நினைவுகள் என பல்வேறு உணர்வுநிலைகளைக் கொண்டுள்ள சிறுகதை தொகு்தி இது. இதனை நீங்கள் படித்தால் ஒரு எளிமையான மனிதன் வாழ்க்கை மீது கொண்டுள்ள பார்வையை உணர முடியும்.


சோம வள்ளியப்பன்


சிறிய எங்கள் உறங்கும் அறை, கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்


போகன் சங்கர்


போகன் முன்னர் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வந்தார். அவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் உண்டு. எரிவதும் அணைவதும் ஒன்றே நூல் கவனிக்கத்தக்க படைப்பு. மேற்சொன்ன இரண்டு நூல்களும்ஐ அமேசானில் கிடைக்கின்றன. பேஸ்புக்கிலும் சுவாரசியமான பதிவுகளை போகன் சங்கர் எழுதி வருகிறார்.


மணிபல்லவம், குறிஞ்சி மலர்(நா. பார்த்தசாரதி)

செம்பருத்தி, மோகமுள் - தி.ஜானகிராமன்


எனக்கு தி.ஜானகிராமன் வாழ்க்கையை அழகுணர்வுடன் அணுகி எழுதுவது மிகவும் பிடிக்கும். அதுபோலவே, நா.பார்த்தசாரதி எழுதிய மேற்சொன்ன இரு நூல்களும் வெவ்வேறு காலநிலையில் வாழ்வது போன்ற உணர்வை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்தும்.


இந்துமதி.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


ரோஷ்னி பாலசுப்ரமணியன், வைஷாலி விஜயகுமார்



கருத்துகள்