இன்றைய உலகில் டிரெண்டாகும் காதல் வார்த்தைகள், டேட்டிங் டிரெண்டுகள்! - காதலே ஜெயம்
காதல் டிரெண்டுகள்
ஸ்லோ டேட்டிங்
நிதானமாக ஆழமாக ஒருவரைப் புரிந்துகொண்டு காதலிப்பது. ஒருவரின் மீது இயல்பாக உணர்வுரீதியாக ஆர்வம் பிறக்க இதில் வாய்ப்புள்ளது.
அட்வோ டேட்டிங்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்றுகூடிய சிலர் காதலாகி கசிந்துருகி கல்யாணம் செய்துகொண்டார்களே அந்த வகை. சமூகம், அரசியல் தொடர்பான பிரச்னைகள் இரு மனங்களை் ஒன்றாக இணைத்து மூன்று முடிச்சு போடுவது.
துன்பெர்க்கிங்
சூழலுக்காக போராடி வரும் கிரேட்டா துன்பெர்க் எப்போது காதலுக்கு உதவினார் என்று உதவக்கூடாது. அவரால் உந்துதல் பெறு சூழல் தொடர்பாக இருபாலினத்தவருக்கும் ஆக்ரோஷம் பொங்கி போராடி காதலாகி பிறகு ஒரே அறையில் மல்லுக்கட்டி காதலின் பொருளை அறிவது….
ஸ்பீடு ரூமிங்
பெருந்தொற்று காலத்தில் பல காதல் ஜோடிகள் முடிந்தவரை ஒன்றாக இருக்க நினைத்தார்கள். அதைச்சொல்லுகிறார்கள்.
காதலுக்கு எல்லை கிடையாது
இன்று ஆபீஸ் வேலை கூட கணினியில் தான் நடக்கிறது. இந்த நேரத்தில் காதல், கல்யாணமும் விரைவில் அதற்கு நகர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் மும்பையைச் சேர்ந்த சூசன் ஜேம்ஸ், டெல்லியைச் சேர்ந்த இளைஞரை டேட்டிங் சைட்டில் பார்த்தார். இருவருக்கும் பிடித்துப்போக வீடியோகாலில் பேசினர். இதுவரை சந்திக்கவில்லை என்றாலும் இருவருக்கும் டேட்டிங் தளம் மூலமே காதல் கோலா போல பொங்கி பெருகிவருகிறது. இவரது காதலர் அமெரிக்காவில் உள்ளார்.
பாக கனெக்ட்டாய்டுனெட்டு
ரேஸ் குர்ரம் படத்தில் டீக்குடிக்க எம்.எஸ். நாராயணா கடைக்கு அல்லு அர்ஜூன் செல்வார். அடுத்து இரண்டாவது நாளும் செல்வார். எதார்த்தமாக கடைக்காரர், சாப்பிட்டியாப்பா என்று கேட்டதும் அர்ஜூன் நாக்கு தழுதழுக்க அண்ணா என அவரை கட்டியணைப்பார். அந்த உணர்ச்சிரீதியான கனெக்ஷன்தான் இப்போதைய காதல்களுக்கு தேவைப்படுகிறது. முன்னர் முகத்தைப் பார்த்து அழகைப் பார்த்து ஒகே சொன்னவர்கள் இப்போது உணர்வுரீதியாக எப்படி ஒருவர் இருக்கிறார் என்று விர்ச்சுவல் முறையில் தெரிந்துகொண்டுதான் காதலில் இறங்குகிறார்கள். வீழ்கிறார்கள் என்று சொன்னால் கவித்துவமாக இருக்குமே?
கருத்துகள்
கருத்துரையிடுக