பழங்குடிகளை முன்னேற்றிய காடுகள் வளர்ப்பு!

 



Woman, Africa, Village, Togo, Portrait, Ethnic Group


பழங்குடிகளை முன்னேற்றிய காடுகள் வளர்ப்பு


கர்நாடக மாநிலம் உடுப்பியில் கொரகா பழங்குடி இனத்தினர், காடுகள் வளர்த்து தம் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டுள்ளனர். 


கர்நாடகத்திலுள்ள பழங்குடி இனங்களில் மிகவும் பிற்பட்டவர்கள் கொரகா பழங்குடியினர். இவர்கள் தற்போது ஆக்சன் எய்டு இந்தியா, கொரகா பௌண்டேஷன் ஆகிய அமைப்புகள் மூலம் நிதியுதவி பெற்று பழமரங்களை வளர்த்து வருகின்றனர். முதலில் குத்தகை முறையில் பழமரங்கள், நெல் ஆகியவற்றை வளர்த்தவர்கள் இன்று சொந்தமாக நிலங்களை வாங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.


 கர்நாடகத்தின் வனச்சட்டம் 1963, 1972 ஆகியவற்றால் காட்டில் வாழ்ந்த கொரகா பழங்குடிகள் அங்கிருந்து வெளியேற நேரிட்டது. நகருக்குள் வந்தவர்கள் பிரம்பு பொருட்களை செய்தும், மனிதக்கழிவுகளை அகற்றியும் வாழ்ந்து வந்தனர்.  இவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் செய்த உதவியால் பல்வேறு நிலப்பரப்புகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தனர்.  இதன் விளைவாக, 49  ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதில் 47 ஆயிரம் ஏக்கர் கொரகா உள்ளிட்ட பழங்குடி இனக்குழுவினர் உருவாக்கியதாகும். 


இச்சாதனையைப் பாராட்டி இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் ஹேபிடட் என்ற தன்னார்வ நிறுவனம் 2019ஆம் ஆண்டிற்கான கோல்டு விருதை வழங்கியுள்ளது. உலகில் சூழல் கவனத்துடன் சிறந்த வாழிடங்களை உருவாக்கும் மக்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 


கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் பழங்குடியினர்,  117 ஏக்கர்களில் மரக்கன்றுகளை நட்டு காடுகளை பராமரித்து வருகின்றனர். குத்தகைக்கு நிலங்களைப் பெற்று வேலை செய்தாலும், அவர்களுக்கென நிலங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே! 2003ஆம்ஆண்டு தன்னார்வ நிறுவனங்களின் முயற்சியால், டோகு என்பவர் பயன் பெற்றார்.  கிடைத்த நிலப்பரப்பில் பாடுபட்டு மல்லிகை, வாழைப்பழம், தென்னைமரம் என பயிரிட்டு வருகிறார். ”டோகு மட்டுமல்ல ஷீனா, அவரின் மனைவியான மம்தா ஆகியோருக்கும் நாங்கள் நிலங்களைப் பெற்றுக்கொடுத்தோம். இன்று இவர்களின் கொரகா இன மக்களுக்கு முன்னுதாரணமாக சொல்லும்படி இம்மூவரும் தங்களின் நிலங்களில் உழைத்து வருகின்றனர்” என்கிறார் சமக்ரா கிராமீனா ஆஷ்ரமா அமைப்பைச் சேர்ந்த அசோக் ஷெட்டி.  சாதி தீண்டாமையால் மோசமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இன்று கௌரவமான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளனர். 

தகவல்: The pioneer










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்