விண்வெளி பொறியியல் துறையில் வேலை கிடைப்பது எப்படி?

 




work job GIF by Girls on HBO


விண்வெளி பொறியியல் துறை

அறிவியல்துறையில் இன்று பெரும் வரவேற்பு பெற்று வருவது, விண்வெளி பொறியியல் துறை. விமானம் மற்றும் விண்கலத்தின் வடிவமைப்பு, மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கும் துறை இதுவே. இன்று உணவுகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் டிரோன்கள் முதல் ராக்கெட்டுகள் வரையிலான தயாரிப்புகளை மேற்கொள்வது இத்துறையினர்தான். 

இதற்கு அடிப்படையானது, இயற்பியலில் ஆற்றல், விசை, இயக்கம் குறித்த அறிவுதான். கூடவே கணிதத்தின் உதவியும் தேவை. இதில் ஏற்படும் சிறிய தவறும் கூட விமானம் மற்றும் விண்கலத்தின் இயக்கத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். விண்வெளி பொறியியல்துறையினர், செயற்கைக்கோள், விமானம், விண்கலங்கள் ஆகியற்றைத் தயாரிக்கின்றனர். அதோடு அதன் வடிவமைப்பு, சோதனை, பராமரிப்பு என அனைத்து விஷயங்களையும் மேற்கொள்வார்கள்.

 கல்வியை பிரமாதமாக கற்றுவிட்டீர்கள். ஆனால், இதற்கான வேலை எங்கு கிடைக்கும்? போயிங், நாசா, ஸ்பேஸ் எக்ஸ், லோக்கீது மார்ட்டின், ஜேபிஎல், ஜெனரல் எலக்ட்ரிக் என ஏராளமான நிறுவனங்கள் விண்வெளி பொறியியலாளர்களை வரவேற்க காத்துக் கிடக்கின்றன.

இதில் வேலைவாய்ப்புகள் என்பது நிறைய மாறுபடும். சில பொறியாளர்களுக்கு விமான, விண்கல மாதிரிகளை கணினியில் உருவாக்கும் பணி வழங்கப்படும். இதில் சிலர், விமான, விண்கலத்தின் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.  இயற்பியல் மற்றும் பொருள் குறித்த திட்டமான அறிவு இருந்தால் மட்டுமே இத்துறையில் சாதிக்க முடியும் என்பதை மறக்காதீர்கள்.  இதில் ஏரோடைனமிக்ஸ், ஸ்பேஸ் ஃபிளைட் டைனமிக்ஸ், புரோபல்ஷன், ஸ்ட்ரக்சுரல் அனாலிசிஸ், கன்ட்ரோல் சிஸ்டம் அனாலிசிஸ் அண்ட் டிசைன், ஃப்ளூய்ட் டைனமிக்ஸ் ஆகிய துணை படிப்புகளையும் படித்தால் பிற்கால வாழ்க்கை சிறப்பாக அமையும். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்