உசைன் போல்டின் வேகத்தை எப்படி கணக்கிடுவது?

 



black and white running GIF




கணிதம் 

உசைன் போல்ட் தடகளத்தில் மின்னலாக பாய்வது எப்படி?

கலை என்பது பொய். அதுவே நம்மை உண்மையை உணர வைக்கிறது என்று சொன்னவர் ஓவியர் பாப்லோ பிகாசோ. நுண்கணிதம்(calculus) கூட அப்படித்தான்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பீஜிங்கில் உசேன் போல்ட், நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள ட்ராக்கில் நின்றுகொண்டிருந்தார். உண்மையில் 200 மீட்டரில் ஓடிக்கொண்டிருந்தவர் போல்ட். ஆனால் திடீரென பயிற்சியாளரிடம் நான் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறேன் என பிடிவாதம் பிடித்து பெற்றதுதான் இந்த வாய்ப்பு. 

அவரின் கூடவே நின்ற எட்டு தடகள வீரர்களும் நூறு மீட்டரில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. போல்ட் யாரையும் ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. என்ன காரணம், தன்மீதுள்ள நம்பிக்கைதான். கிரிக்கெட் மற்றும் கால்பந்தில் ஆர்வம் காட்டிய போல்டை, அவரது முன்னாள் பயிற்சியாளர் தடகளத்தில்  முயற்சிக்கலாமே என்ற வழிகாட்டினார். அன்றையை ஓட்டத்தில்  எட்டு வீரர்களில் ஏழாவதாக ஓடிக் கொண்டிருந்தவர், 30 மீட்டர் தூரத்தில் வித்தியாசத்தைக் காட்டினார். புல்லட் ரயிலாக பாய்ந்தவர் 9.69 நிமிடங்களில் நூறு மீட்டரைக் கடந்தார். 

இவர் நூறுமீட்டரை எப்படி கடந்தார் என்பதை கணிதம் மூலம் கண்டறிவது எப்படி? 100/9.69 = 10.32 என விடை கிடைக்கும். நொடிக்கு 10.32 மீட்டர் தொலைவைக் கடந்து சாதித்துள்ளார். மணிநேரத்திற்கு என கணக்கு போட்டால் 37 கி.மீ. வரும். இந்த விடையைக் கூட தோராயமான வேகம் எனவே கூறமுடியும். தொடக்கத்தில் மெதுவாகவும், இடையில் மத்திய வேகத்திலும் பாய்ந்தவர், இறுதியில் அதிவேகம் காட்டினார். முதல் பத்து மீட்டரை 1.83 நிமிடங்களிலும்(5.46 மீ.வேகம்), இறுதியாக 10 மீட்டரை தோராய வேகமான 11.1 மீட்டர் வேகத்தில் கடந்தார் போல்ட். 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்