ஐன்ஸ்டீன் கணிதப்பாடத்தில் தோற்றுப்போனவரா?

 




Astronaut, Zero Gravity, Gravity-Less, Space-Walk

சரியா? தவறா?

இயற்பியல் உலகில் ஆய்வுரீதியான நிறைய  உண்மைகள் உண்டு. அதேயளவில் நிரூபிக்கப்படாத பொய்களும் உண்டு. அவற்றில் சிலவற்றைக் காண்போம். 

ஐன்ஸ்டீன்

 ஃபெயில்!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழும்போதே வந்த வதந்திச்செய்தி இது. ஐன்ஸ்டீன் கணிதத்தில் கெட்டியாக இல்லாமல் இயற்பியலில் எப்படி சாதித்திருப்பார்? இப்படிக்கூட  யோசிக்காமல் நாளிதழ் பிரசுரம் கூட செய்துவிட்டது. பல்கலையில் இயற்பியல் படிப்பில் சேர முயற்சித்தபோது கணித தேர்வை ஐன்ஸ்டீன் எழுதினார். ஆனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை விட குறைவாக பெற்றார். அதற்கு மறுதேர்வு எழுதினார். இதைத்தான் ஃபெயில் என கதைகட்டிவிட்டனர். 

தலையில் விழுந்த ஆப்பிள்! 

ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த ஆய்வாளர். இவரது கண்டுபிடிப்பைச் சொல்லும்போது, ஆப்பிள் தலைமீது விழுந்துதான் ஈர்ப்புவிசை குறித்து அறிந்தார் என கூறுவார்கள். தன் அம்மாவின் தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது, ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுந்தது. தலைமீது விழவில்லை. ஆப்பிள் கீழே விழ என்ன காரணம் என யோசித்த நொடிதான் நியூட்டனை சாதனையாளராக்கியது. பூமி மற்றும் நிலவின் ஈர்ப்புவிசை வரை நாம் பயணிக்க நியூட்டனே காரணம். 

விண்வெளியில் ஒலி!

படங்களில் விண்வெளியில் தவிக்கும் குழு அபயக்குரல் எழுப்ப, நாயகர் ஒற்றைக்கையால் அவர்களைக் காப்பாற்றுவார். ஆனால் இது சாத்தியமற்ற பொய். ஒலி பரவ நீர், காற்று, திடப்பொருள் உள்ளிட்ட ஏதாவது ஊடகம் தேவை. வெற்றிடமான விண்வெளியில் விண்கலமே வெடித்தாலும் காட்சி தெரியுமே தவிர ஒலி காதுகளுக்கு கேட்காது. 



 

கருத்துகள்