இடுகைகள்

டிராகுலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களின் உலகைப் புரிந்துகொள்ளும் டிராகுலா! - டிரான்சில்வேனியா 4

படம்
  டிரான்சில்வேனியா 4 டிரான்சில்வேனியா 4 சோனி அனிமேஷன் டிரேக் தனது ஹோட்டலை தனது மகள் மாவிஸ், மருமகன் ஜானியிடம் கொடுக்க நினைக்கிறார். ஆனால் மருமகன் மனிதன் என்பதால், அவனை டிரேக்கிற்கு பிடிப்பதில்லை. மேலும், ஜானி உற்சாகப்பட்டு செய்யும் பல்வேறு அட்டகாசங்களால் ஹோட்டலை அவனிடம் கொடுக்க மறுத்து டிராகுலா சட்டம் என ஒன்றை சொல்கிறார். இதனால் ஏற்படும் பின்விளைவுகள்தான் கதை.  படம் தொடங்கும் டைட்டில் கார்டு தொடங்கி அனிமேஷன் படத்திற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது. இந்த கொண்டாட்டமான மனநிலை படத்தின் இறுதி வரை தொடர்கிறது.  டிரேக் தனது ஹோட்டலில் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அங்கு வரும் ஜானி, விழாவை படு உற்சாகமாக மாற்றுகிறார். ஆனால் அது மாமனார் டிரேக்கிற்கு பிடிக்கவில்லை. ஜானி உற்சாக மிகுதியில் செய்யும் விஷயங்களை மாற்றி இயல்பாக நடக்க வைக்கிறார். தனது மனைவியிடம் ஹோட்டலை அவனிடம் ஒப்படைக்கப் போவதாக கூறுகிறார். ஆனால் இறுதியில் நிலைமை மாற தான் சொன்னதை மாற்றிக்கொள்கிறார். இதற்கு பதிலாக ஜானி, மான்ஸ்டர் கிடையாது என்பதை சொல்கிறார்.  டிரான்சில்வேனியா 4  இதனால், மனம் உடையும் ஜானி தன்னை மான்ஸ்டராக மாற்றிக்கொள்ள வ

கோடைக்கால டூரில் டிராகுலா குடும்பத்தை தீர்த்துக்கட்ட பிளான் போடும் வான்ஹெல்சிங் குடும்ப வாரிசு! - ஹோட்டல் டிரான்சில்வேனியா 3

படம்
              ஹோட்டல் டிரான்சில்வேனியா 3   Director: Genndy Tartakovsky Produced by: Michelle Murdocca Writer(s): Genndy Tartakovsky, Michael McCullers டிராகுலா இம்முறை பஸ்சில் மனிதர்களுடன் தன்னை மறைத்து சென்றுகொண்டிருக்கிறார் . அவரைத் தவிர்த்து பிற நண்பர்கள் எல்லோருமே வேறுபட்ட உடல் வடிவைக் கொண்டவர்கள் . இதனால் மக்கள் பயந்துவிடுவார்கள் என தங்களை மறைத்து பயணிக்கிறார்கள் . அப்போது அங்கு வரும் வான்ஹெல்சிங் குடும்பத்தின் தாத்தா , அவர்களை பழிகொண்டு குடும்பத்தின் பெருமையை நிலைநாட்ட நினைக்கிறார் . ஆனால் மனிதர்களால் டிராகுலாக்களை கொல்ல முடியாது என்பதை ஏற்காமல் அவர்களை வேட்டையாடத் துடிக்கிறார் . இதனால் டிராகுலா தன் நண்பர்களை பாதுகாப்பாக ஓரிடத்தில் தள்ளிவிட்டு அவரை எதிர்கொண்டு வெல்கிறார் . அதாவது அப்படி நினைத்துக்கொண்டு தனது ஹோட்டலுக்கு நண்பர்களுடன் செல்கிறார் .    பல நூறு ஆண்டுகளாக மனைவி இல்லாமல் வாழ்ந்துவிட்டதால் அவருக்கு தனிமை விரக்தியைத் தருகிறது . இதைக் கவனித்த அவரது மகள் அவருக்கு கோடை கால டூர் ஒன்றை ஏற்பாடு செய்கிறார் . அவர் என்றால் அவரது ஒட்டுமொத்த கூட்டுக் குடும்பத்