இடுகைகள்

பவளப்பாறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பவளப்பாறைகளைக் காக்கலாம்!

படம்
  பவளப்பாறைகளைக் காக்கும் முயற்சி!  மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, பெலிஸ். இங்கு கடல்பரப்பில் உள்ள பவளப்பாறைகள் சூழல் அமைப்பில் முக்கியமானவை. சூழலியலாளர் லிசா கார்ன், கடலில் பவளப் பாறைகளை ஆய்வு செய்து வருகிறார். இவர், காலநிலை மாற்றத்தில் அவை அழிந்துவருவதைக் கண்டார். இதைத் தடுக்க, 2013ஆம் ஆண்டு ஃபிராக்மென்டேஷன் ஆஃப் ஹோப் எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம், அழிந்த பவளப்பாறைகளை மீட்கும் செயல்பாடுகளை செய்து வருகிறார்.  லிசாவின் வீடருகே லாஃபிங் பேர்ட் கயே (Laughing Bird Caye) எனும் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள கடல்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை மீண்டும் வளர்க்க முயன்றுவருகிறார் லிசா. அறிவியலாளர்களின் ஆராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி, பவளப்பாறைத்துண்டுகளை வளர்த்து வருகிறார். சிமெண்டில் செய்த அடித்தட்டு கற்களில் பவளப்பாறைகளிலிருந்து சேகரித்த பகுதிகளை பொருத்தி வளர்க்கிறார்.  அழிந்துவரும் எல்க்ஹார்ன், பவளப்பாறைகளின் மரபணுக்களை சேகரித்து 28 மரபணு வங்கி  நர்சரிகளை உருவாக்கியுள்ளார்.  அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த கடல் உயிரினங்கள் ஆராய்ச்சிய...

வெப்பநிலையால் பாதிப்புக்கு உள்ளாகும் பவளப்பாறை!

படம்
வெப்பநிலையைத் தாங்கும் பவளப்பாறை! உலகில் உள்ள உயிரினங்களில் மூன்றில் ஒருபகுதி, பவளப் பாறைகளை வாழிடமாக கொண்டுள்ளன. 2100ஆம் ஆண்டு உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் என உயரும்போது பவளப்பாறைகள் முழுவதுமாக அழிந்துவிடும் வாய்ப்புள்ளது. இதிலிருந்து பவளப் பாறைகளை காக்கும் முயற்சிதான் சூப்பர் பவளப் பாறைகளை (super coral)வளர்ப்பது.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் மெடலின் வான் ஆப்பென், பவளப்பாறை வளர்ப்பு  முயற்சியை, சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டார். அப்போது இவரின் முயற்சிகளுக்கு உயிரியலாளர் ரூத் கேட்ஸ் துணையாக இருந்தார். 2018இல் ரூத் காலமாகிவிட, மெடலின் தனது ஐடியாவை  பிற ஆராய்ச்சிக் குழுவினரோடு பகிர்ந்துகொண்டு இயங்கி வருகிறார். பவளப்பாறைகளில் சிலவற்றை எடுத்து அதில் மரபணு மாற்றம் செய்கிறார்கள்.  மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சில பவளப்பாறை இனங்களைத் தேர்ந்தெடுத்து அதனை வெப்பநிலையை தாங்கிக்கொள்ளும்படி மாறுதல்களை செய்ய முயன்று வருகிறார்கள். இந்த வகையில் சில இனங்களை கலப்பின முறையில் உருவாக்குகிறார்கள். ”பத்தாண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சி செய்ய நமக்கு நேரம் கிடையாது என்பதால், பவளப்...

கடலின் தனித்துவம் அறிவோம்!

படம்
  கடலின் தனித்துவம்! கடலில் சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி உலக பொருளாதார கூட்டமைப்பு, தி ஓசன் எகானமி  2030 என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில அம்சங்கள் இதோ.. நிலப்பரப்பை விட கடற்பரப்பு பெரியது. சூழல் அமைப்பும், உயிரினங்களும் வேறுபட்டவை. கடல் பரப்பில் உள்ள எல்லைகளும் நாடுகளுக்கு நாடு மாறுபடும்.  கடலில் உள்ள நீரில்,  ஒளிபுகும் தன்மை குறைவாகவே இருக்கும். கடல்படுகைகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதும் பல்வேறு சவால்களைக் கொண்டது.  கடல் பரப்பில் சூழல் பாதுகாப்பு திட்டங்களை திட்டமிடுவது, அதனை வரைபடமாக்குவது, மேலாண்மை செய்வது கடினம்.  கடல் நீரில் மாசுபாடு எளிதாக பிற இடங்களுக்கு பரவும். வேறு இனங்களைச் சேர்ந்த தாவர இனங்கள் இதன் வழியாக எளிதாக பரவ வாய்ப்புள்ளது.  கடல்வாழ் உயிரினங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பு சவால்களைக் கொண்டது.  சட்டவிரோதமான செயல்பாடுகளை தடுப்பது கடினம். கடல் பரப்புக்கு உரிமை, பொறுப்பு என வரையறுப்பது சிக்கலானது.  புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வந்தால், மனிதர்கள் கடலில் வாழ்வது சாத்தியமாகலாம்.  ...

பவளப்பாறை, பருவ மழைக்காடு பற்றி அறிவோம்!

படம்
  தெரியுமா? பவளப்பாறை கடலின் ஆழ்கடலில் உள்ள முக்கியமான சூழல் அமைப்பு. ’கடலில் அமைந்துள்ள மழைக்காடுகள் ’என சூழலியலாளர்கள் இதனைக் கூறுகிறார்கள். பவளப்பாறைகளைப் பார்க்க பாறைகள் போல தோற்றமளிக்கும். ஆனால் அவை உண்மையில் விலங்குதான். இதன் மேல்பகுதி கால்சியம் கார்பனேட் வேதிப்பொருளால் ஆனது. இதுவே அதன் ஓடுபோல தோற்றமளிக்கிறது.  இதன் அடிப்பரப்பில் நண்டு, ஆமை, மீன் என ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறை, எளிதில் அழியக்கூடியவை. கடலில் ஏற்படும் மாசுபாடு இதனை எளிதாக பாதித்து அழிவை உருவாக்குகிறது.  பருவ மழைக்காடு இங்கு, வெப்பமும், ஈரப்பதமும் சரிபாதி அளவில் இருப்பதால், தாவரங்களும்  உயிரினங்களும் அதிகளவில் இங்கு வாழ்கின்றன.  உலகில் வாழும் தாவரம் மற்றும் விலங்கு இனங்களில்  பாதியளவு பருவ மழைக்காடுகளில் காணப்படுகின்றன.  தாவரம், விலங்கு, பூஞ்சை, நுண்ணுயிரிகள் என பல்லுயிர்த்தன்மை கொண்ட இடம் இது. மத்திய தெற்கு அமெரிக்கா, மேற்கு மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா தீவு ஆகியவற்றில் பருவ மழைக்காடுகள் அமைந்துள்ளன.  ...

இறந்தவர்களின் சாம்பலில் உருவாகும் பாறைப்பந்து- பவளப்பாறைக்கு மாற்று என மாறுகிறது டிரெண்ட்!

படம்
  ஆழ்கடலில் உருவாக்கப்படும் பாறைப்பந்து! கடலில் பவளப்பாறைகள் அழிவதைப் பற்றிய செய்திகளை நிறைய வாசித்திருப்போம். தற்போது, அமெரிக்காவில், புதிதாக பவளப்பாறைகளை உருவாக்குகிறோம் என சிலர் முயன்று வருகிறார்கள்.  இதன்படி, காலமானவரின் பிணத்தை எரித்து, சாம்பலை கான்க்ரீட் கலவையில்  கலக்குகிறார்கள். அதனை, பந்து வடிவில் (Reef ball) மாற்றுகிறார்கள். பிறகு, அப்பந்தை ஆழ்கடலில் கொண்டுபோய் வைக்கிறார்கள்.  250 கிலோ முதல் 1000 கிலோ வரை எடைகொண்டது பாறைப் பந்து. இதனைக் கடலின் தரைப்படுகையில் வைக்கின்றனர். பவளப் பாறை போன்ற இதன்  கரடு முரடான வடிவத்திற்குள் மீன்கள் வாழ்கின்றன. அதன்மேல் பாசிகள் படருகின்றன. இதனைத் தொழிலாகச் செய்யும் நிறுவனங்கள், பாறைப் பந்தை சூழல் காக்கும் முயற்சி என்கிறார்கள்.    கடல் உயிரினங்களை நேசிப்பவர்கள்தான், புதிய பாணியைத் தொடங்கி வைத்துள்ளனர்.  இது கடலுக்கடியில் ஒருவருக்கு அமைக்கப்பட்ட கல்லறை என்பதே உண்மை. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த எடர்னல் ரீஃப் என்ற நிறுவனம், கடல் படுகையில் பாறைப் பந்துகளை அமைத்துக் கொடுக்கிறது. பிஹெச் (pH) அளவு நடுநிலையுள்...

லட்சத்தீவை சுற்றுலாதலமாக மாற்றுவது சூழலை அழிக்கும் முயற்சி! - ரோகன் ஆர்தர், கடல் சூழலியலாளர்

படம்
                L-R(5th person rogan)     மாலத்தீவு வளர்ச்சி மாடல் லட்சத்தீவுகளை அழித்துவிடும் ரோகன் ஆர்தர் கடல் உயிரியலாளர் பருவச்சூழல் பாதுகாப்பு என வரும்போது லட்சத்தீவுகள் பற்றி ஏன் அதிகம் பேசுகிறார்கள் ? அப்படியென்றால் நான் உங்களுக்கு பவளப்பாறை எப்படி உருவாகிறது என விளக்கவேண்டும் . கடலுக்கு அடியில் வளர்ந்துள்ள காடுகள்தான் பல்வேறு புயல்களையும் , அலைகளையும் மட்டுப்படுத்துகின்றன . இங்குள்ள கடல்பகுதியில் பவளப்பாறைகள் தானே வளருகின்றன . இவை வட்டவடிவில் இங்கு உருவாகி வளருகின்றன . இங்கு தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளால் பவளப்பாறைகளின் வளர்ச்சி தடைபட்டு , தானே பாதிப்பை சரி செய்யும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது . இந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கி ஆழமாகி வருகிறது . ஆய்வுகள் மூலம் அங்கு ஏற்படும் பாதிப்புகளை அடையாளம் கண்டு வருகிறோம் . லட்சத்தீவுகளை சுற்றுலாவிற்கு ஏற்றபடி மாற்றினால் இயற்கைச்சூழல் பாதிப்பு பெரிய அளவில் நடைபெறும் . இங்குள்ள கலாசாரம் , சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான தொடர்பு எப்படியிருக்கிற...