இடுகைகள்

அரசியல்வாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிம்பன்சிகள் அரசியல்வாதிகளாக முடியுமா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி  தாவரங்கள் இசையைக் கேட்கின்றனவா? 1973ஆம் ஆண்டு வெளியான சீக்ரெட் லைஃப்  ஆப் பிளான்ட்ஸ் நூலில் தாவரங்கள் இசையைக் கேட்கின்றன என்ற தகவல் கூறப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அப்படி கேட்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். தற்போது, தாவரங்கள் ஹிப்ஹாப், ராப் இசையைக் கேட்பதில்லை. ஆனால் பூச்சிகளின் ஓசையை கிரெஸ், ஸ்வீட் பீஸ் ஆகிய தாவரங்கள் கேட்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதிர்வுகளை அறியும் தன்மை தாவரங்களில் இருக்கின்றன. எனவே இசை மூலமாக அதிர்வுகளை தாவரங்கள் சரியாக உள்வாங்கிக்கொள்கின்றன என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. ஈக்கள் பாடுகின்றனவா? பழ ஈக்கள் தம் இணையை ஈர்க்க பாடுகின்றன. இவை மூன்று வித பாடல்களை குரல் மாற்றங்களுடன் பாடுகின்றன. முக்கியமாக பாடுவது, பெண் இணையை ஈர்க்கத்தான். கொசுக்கள் பறக்கும்போது வரும் ஒலி, அதன் இறக்கையை வேகமாக வீசுவதால் ஏற்படுகிறது. மீன்கள் தம் கழிவை எப்படி வெளியேற்றுகின்றன? சிறுநீரில் நைட்ரஜன் பொருட்கள் நிரம்பியிருக்கும். இது நீரில் கரையக்கூடியது. ஏரி, ஆறு போன்ற இடங்களிலுள்ள மீன்களின் கழிவு சற்று திடமாக இருக்கும். ஆனால் கடலில் உள்ள மீன்கள் உப்ப