இடுகைகள்

ஒலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாய் எழுப்பும் ஒலிக்கு என்ன அர்த்தம்?

படம்
  நாய் எழுப்பும் குரைப்பொலி பற்றிய விளக்கங்கள் இதோ….. தொந்தரவு செய்யாதே வீட்டுக்கு முன் செல்பவர், காலிங்பெல்லை அழுத்துபவர், சைக்கிளில் செல்பவர் என யார் சென்றாலும் ஒலி, ஒளி தென்பட்டாலும் நாய் உடனே குரைக்கத் தொடங்கும். குரைக்கும் தொனி, எதிராளி வீட்டின் கதவுக்கு அண்மையில் இருக்கிறாரா, தூரத்தில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடும். கதவை ஒருவர் தட்டி திறக்க முயல்கிறார் என்றால் நாயின் குரைப்பொலி கடுமையாக மாறும். உரிமையாளரை தீர்க்கமாக எச்சரிக்கும் ஒலி இதுவே. வேட்டை மன்னன் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார் அல்லது நாயின் சக நாயினங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்து ஒலி எழுப்புகின்றன என்றால் நாய் , இவ்வகையிலான ஒலியை எழுப்புகிறது. குரைப்புக்கும்,, ஊளைக்கும் இடையில் அமைந்த ஒலி. முனகல் ஒலி அப்பப்பா என முனகிக்கொண்டே வயதானவர்கள் கீழே உட்காருகிறார்கள் அல்லவா? அதுபோலவே அமைந்த முனகல் ஒலி. வயதான நாய், ஏதாவது இடத்திற்கு சென்றுவிட்டு வந்து சோபாவில் ஏறி உட்காரும்போது இப்படி முனகும். நீங்கள் நாய் தள்ளிவிட்ட பந்தை எடுக்காமல் கணினியைப் பார்க்கும்போது அல்லது அதற்கு போதிய கவனம் கொடுக்காதபோது சற்று வேறு

செவ்வாயில் கேட்ட ஒலியை பதிவு செய்யும் நாசாவின் முயற்சி

படம்
  செவ்வாயில் கேட்ட ஒலி! பல்லாண்டுகளாக செவ்வாய் கோளின் தரையில் என்ன ஒலி கேட்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு, இதை ஆராய மார்ஸ் போலார் லேண்டர், பீனிக்ஸ் ஆகிய திட்டங்களை உருவாக்கியது. ஆனால் இவை ஒலியை பதிவு செய்யமுடியாமல் தோல்வியுற்றன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாசாவின் பர்சீவரன்ஸ் ரோவர் (Perseverance Rover), செவ்வாயில் தரையிறங்கியது.  ரோவரில் உள்ள 2 மைக்ரோபோன்களின் மூலம் செவ்வாயின் தரைப்பரப்பு ஒலி, பதிவு செய்யப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் கூடுதலாக பதிவான ஒலிக்கோப்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதன்மூலம், செவ்வாய் கோளில் காற்றில் ஒலி எப்படி பரவுகிறது என்ற தகவல்களை அறிந்துகொண்டனர்.  செவ்வாயில் காற்றின் அழுத்தம் 0.6 கிலோ பாஸ்கல் ஆகும். பூமியை விட செவ்வாயில் காற்றின் அழுத்தம் 200 மடங்கு குறைவு. கரியமில வாயு நிறைந்துள்ள சூழலில் வெப்பநிலை - 63 டிகிரி செல்சியஸாக உள்ளது. செவ்வாயில் குளிர் அதிகம் என்பதால், ஒலி நொடிக்கு 240 மீட்டர் வேகத்தில் செல்கிறது.  பூமியில், ஒலி நொடிக்கு 340 மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. செவ்வாயில் கேட்கும் ஒலி பற்றி

பயிர்களை அழிக்கும் அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்! ஃபார்ம் சென்ஸ்

படம்
  அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பம்! இயற்கைச்சூழலில் பூச்சிகளின் பங்கு முக்கியவை. விவசாயப் பயிர்களை தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமானதாக மாறிவருகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரோமோன் வேதிப்பொருள் கொண்ட பசை அட்டைகளை விவசாயிகள் பயன்படுத்தினர். ஆனால் இதன் மூலம் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையை, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஃபார்ம்சென்ஸ் (Farmsense) நிறுவனம் மாற்றியுள்ளது. இந்த நிறுவனம் பூச்சிகளை கண்காணிக்கும் சென்சார் கருவிகளை உருவாக்கி வருகிறது.   2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபார்ம்சென்ஸ் நிறுவனம், பூச்சிகளைக் கண்காணித்து அதற்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை வகுக்க உதவுகிறது. இந்த நிறுவனத்தின்,  ஃபிளைட்சென்சார் கருவி, 2020ஆம் ஆண்டு முதலாக வயல்வெளிகளில் நிறுவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்தக்கருவி, பூச்சியை கவர்ந்து இழுக்கும் கொல்லும்பொறி அல்ல. அந்திபூச்சிகளின் வடிவம், இறக்கை எழுப்பும் ஒலி என பல்வேறு அம்சங்களை பதிவு செய்து உரிமையாளருக்கு தானியங்கியாக அனுப்பிவிடும்.  கருவி தரும் தகவல்களின் அடிப்படையில், பூச்

விலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகள்!

படம்
  விலங்குகளை அச்சுறுத்தும் ஒலி! 2021ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு, பிற மாநிலங்கள் உருவாக்காத சூழல் திட்டத்தை உருவாக்கியது. காலநிலை மாற்றத்திற்கான மும்பை கிளைமேட் ஆக்சன் பிளான் (MCAP) எனும் திட்டம் தான் அது. ஆனால் இந்த திட்டத்திலும் கூட ஒலி மாசுபாடு குறிப்பிடப்படவில்லை.  மேலும், மும்பை பெருநகரில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள் சூழல் நிலைத்தன்மை விதிகளுக்கு உட்படாதவை.  கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஜெஸ்வின்,  கிங்ஸ்லி களிறு எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இப்படத்தில், விலங்குகள் எப்படி பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டப்படுகின்றன என்பதை விவரித்தது. இப்படி விலங்குகளை இரைச்சலிட்டு விரட்டுவது புதிதல்ல என்றாலும் நவீன காலத்தில் சக்தி வாய்ந்த பட்டாசுகளைப் பயன்படுத்துவது விலங்குகளை அச்சுறுத்துவதோடு அவற்றை உடல் அளவில் காயப்படுத்தவும் செய்கிறது.  "தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக உருவாகி வரும் இரைச்சல், விலங்குகளின் நுட்பமான ஒலிகளை உணரும் திறனை பாதிக்கிறது. அதன் வாழிடத்தில் திடீரென உருவாகும் ஒலி அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என 2013ஆம் ஆண்டு ஆய்வாளர் கிளிண்டன் டி ஃபிரான்சிஸ் ,

பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்?

படம்
              பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் ? மனிதர்களை பழக்கங்களால் உருவானவர்கள் என்று கூறலாம் . இங்கு நடந்துள்ள பல்வேறு மாற்றங்கள் மனிதர்களின் தொடர்ச்சியான பழக்கங்களால் உருவானதுதான் . விமானத்தில் உள்ளது போல ஆட்டோபைலட் முறையில் தினசரி செய்யும் பழக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது . பரிணாம வளர்ச்சியுப் இப்படிப்பட்டதே . இதன்மூலம் ஒன்றை நாம் புதிதாக தொடங்குவது பற்றி யோசிக்காமல் முக்கியமான செயல்களின் மீது எளிதாக கவனம் செலுத்தலாம் . முடிவுகளை முன்னரே யோசித்தல் பாலூட்டி உயிரினமாக மனிதர்கள் உயிருடன் இருக்க முக்கியமான காரணம் , இறந்த காலத்திலிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வதுதான் . இதனால்தான் நெருப்பைக் கண்டால் சுடும் என விலகுவதும் , பாம்பைக் கண்டால் நடுங்குவதும் ஏற்படுகிறது . இந்த உணர்வுகள் பல நூற்றாண்டுகளாக நமது மரபணுவில் பதிந்து கடத்தப்பட்டுள்ளது . ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதன் விளைவுகளை யோசிப்பதும் இப்படி உருவாகி வந்ததுதான் . சில சமயங்களில் இது தப்பானாலும் பெரும்பாலான நேரம் முடிவு எடுத்த வழியில்தான் செயல்

விமானத்தில் ஜன்னல்கள் வட்டமாக இருப்பது ஏன்?

படம்
            சாகச விளையாட்டு பற்றி சொல்லுங்கள் ? விங் சூட் என்ற ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இந்த வகை உடைகள் 1930 இல் உருவாக்கப்படத் தொடங்கிவிட்டன . ஹெல்மெட் , பறவைகளின் இறக்கை போன்ற அமைப்புகளுடன் ஹெலிகாப்டரிலிருந்து எட்டி குதித்தால் போதும் . இதில் ஒருவரின் வேகம் மணிக்கு 165 கி . மீ . ஆகும் . உடலை சரியானபடி அமைத்துக்கொண்டால் மணிக்கு 250 கி . மீ வேகத்தில் பறந்து நிலத்தை அடையலாம் . இன்றைய விங் சூட்டை பின்லாந்து நா்ட்டைச் சேர்ந்த ஜாரி குவாஸ்மா என்பவர்தான் உருவாக்கினார் . பாய்ண்ட்பிரேக் என்ற படத்தில் விங் சூட்டில் குழுவாக பறக்கும் காட்சி வரும் . அதைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் உடலை எப்படி கட்டுப்படுத்தி வேகத்தை குறைக்கவும் அதிகரிக்கவும் செய்கிறார்கள் என்பதை அறியலாம் . பறவைகள் காற்றில் பறப்பதற்கும் , அந்த திறமை இல்லாத மனிதர்கள் காற்றில் பறப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு . விங் சூட்டின் வடிவத்தை ஏரோபில் என்று கூறு்வார்கள் . ஒலி வெவ்வேறு ஊடகங்களில் செல்லும்போது வேகம் மாறுபடுவது ஏன் ? ஊடகங்களில் அடர்த்தி மாறுபடும்போது ஒலியின் தன்மை மாறுபடுகிறது . ஒ

சவுண்ட் பாரில் 3டி சவுண்ட் எப்படி உருவாகிறது?

படம்
      பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ ஆம்பிளிஃபையர் எப்படி வேலை செய்கிறது? லேப்டாப் அல்லது நேரடியான மைக்ரோபோன் ஆகியவற்றிலிருந்து ஒலியைப் பெற்று அதனை பெரிதாக்கி நகல் போல எடுத்து ஸ்பீக்கர்களுக்கு அனுப்புகிறது. ஒலியின் அளவு என்பது கிடைக்கும் அசல் ஒலியைப் பொறுத்து மாறுபாடுகள் ஏற்படும். ஆனால் மின்சாரத்தின் சக்தியைப் பெற்று ஒலியின் அளவை பெரிதாக்கும் பணியை செய்கிறது. இப்படி மாற்றப்படும் ஒலி ஸ்பீக்கரில் சரியாக கேட்கவும் மின்சாரம் அதற்கு செல்லும் அளவு முக்கியமானது. ப்ளூடூத், குரோம்காஸ்ட், ஏர்பிளே, எது பெஸ்ட்? ப்ளூடூத்தை நீங்கள் வயர்லெஸ் ஸ்பீக்கர்களில் இணைத்து பாடல்களை எளிதாக கேட்கலாம். ஆனால் குரோம்காஸ்ட் ஆப்பிள் ஏர்பிளே என்பது இயங்குவதற்கு வைஃப் இணைப்பு அவசியம். இதன்மூலமும் நீங்கள் பாடல்களை கேட்கலாம். இடைமுகமாக வைஃபை இருக்கும். தரமான இசையைக் கேட்க ப்ளூடுத் முறை சரிபட்டு வராது. இதற்கு நீங்கள் குரோம்காஸ்ட் உடன் இணைந்த வைஃபை ஸ்பீக்கர்களே சிறப்பாக இருக்கும். ப்ளூடூத்தை விட வைஃப் முறையில் ஸ்பீக்கர்களை வாங்கினால் பாடல்களை வெவ்வேறு ஸ்பீக்கர்களில் துள்ளலுடன் கேட்க முடியும். சவுண்ட் பாரில் 3டி சவு

அதிக இரைச்சலுக்கு நாய்கள் பயப்பட்டு பதுங்குவது ஏன்?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி திடீரென தரை அதிரும் சத்தம் கேட்டால் நாய்கள் நடுங்கி பெட்டின் அடியில் பதுங்குவது ஏன்? நாய்கள் மட்டுமல்ல ஆறறிவு படைத்த மனிதர்கள் கூட இடிக்கு, பட்டாசுக்கு, வெடிகுண்டுக்கு பயந்து பதுங்குவது உண்டு. நாய்கள் பயப்படுவது அதிகமாக இருபதற்கு காரணம், அவற்றின் கேட்கும் திறன் மிக கூர்மையாக இருப்பதுதான். காரணம், திருவிழாவில் போடும் வேட்டுச்சத்தம் கேட்டால் கூட எங்கள் வீட்டு நாய் பெட்டுக்கு அடியில் போய் பதுங்கிவிடும். இதற்கு ஒலி பற்றிய பயம்தான் காரணம். 2015ஆம் ஆண்டு ஆஸ்லோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வுப்படி, வயதான நாய்கள் அதிக ஒலிக்கு பயந்து நடுங்குவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மகிழ்ச்சியோ துக்கமோ அதற்கு ஏற்றபடி நாயை பழக்கப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர். அது சாத்தியமா என்று நாயை வளர்ப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். நன்றி - பிபிசி 
படம்
மிஸ்டர் ரோனி நாய்கள் எப்படி மனிதர்களை விட அதிகளவிலான ஒலியை கேட்கும் விதமாக உருவாகிறது? நாய்கள் அப்படி திறன்களைப் பெற்றிருப்பதால்தான் நாம் அதனை காவல் வைத்துவிட்டது நிம்மதியாக தூங்க முடிகிறது. பயன் இல்லாத எந்த விஷயத்தையும் மனிதர்கள் வைத்திருப்பது இல்லை. அப்போது பூனை என்கிறீர்களா? பூனை எஜமானன் போல. தனிமையை யார் வைத்து நிரப்பினால் என்ன? பெண்களுக்கு பூனை பிடிக்கும். அதனால் வளர்க்கிறார்கள். மனிதர்களால் 20 கிலோஹெர்ட்ஸ் ஒலியைக் கேட்க முடியும் என்றால், நாய்களால் 45 கிலோ ஹெர்ட்ஸ் அளவிலான ஒலியைக் கேட்க முடியும். பொதுவாக விலங்குகளால் மனிதர்களை விட அதிக திறன் கொண்ட செறிவான ஒலியைக் கேட்க முடியும். என்ன காரணம்? உலகில் பிழைத்திருக்க வேண்டுமே? அதற்காகத்தான். இயல்பாகவே நாய்களுக்கு அமைந்துள்ள தலை அமைப்பு மனிதர்களை விட சிறியது. மேலும் இதன் காது அமைப்புகளும் நம்மிலிருந்து மாறுபட்டவை. இதனால் இவற்றின் ஒலி கேட்கும் சக்தியும் அதற்கேற்ப அமைந்துள்ளது. நன்றி - பிபிசி

ஒலியின் பயணம்!- அன்றிலிருந்து இன்றுவரை

படம்
3400 ஆண்டுகள் ஆகின்றன. நாம் தகவல் தொடர்பு விஷயங்களை கண்டறியத் தொடங்கி. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என புகைப்படங்களை விட ஒலி மக்களை கவனிக்க வைக்கிற ஒன்றாகவே இருக்கிறது. ஒளி பாதிவேலையை செய்தால், ஒலி மீதி வேலையைச் செய்கிறது. மெசபடோமியர்கள் செய்திகளை எழுதி அதனை சத்தமாக பேசி பிறருக்கு செய்தியை கடத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட மிகத்தரமான ஒலியை நம்மால் கேட்கமுடியவில்லை என்றே சொல்லவேண்டும். இன்று நாம் ஸ்மார்ட்போன் அல்லது யூடிபில் 8டி ஒலியை கேட்டு மகிழ்ந்து வருகிறோம். அந்த ஒலியின் பயணத்தை நாம் பார்ப்போம். 1860 போன் ஆட்டோகிராப் 1853 ஆம் ஆண்டு எட்வர்ட் மரியன்வில்லே என்ற கண்டுபிடிப்பாளர் மனிதர்களின் குரலை பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதில் பல்வேறு விஷயங்களை மேம்பாடு செய்ய முடியவில்லை. குறிப்பாக திரும்ப போட்டு பார்த்தால்தானே அதில் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும். 1886 வேக்ஸ் சிலிண்டர் - போனோகிராப் இதனை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கினார். பின்னர், அலெக்சாண்டர் கிரகாம் பெல், மேம்படுத்தி கிராம போன் கருவியைக் கண்டுபிடித்தார். இதில்தான் பதிவு செய்த குரல்களை தி

ஒலி என்ன செய்யும் தெரியுமா?

படம்
giphy.com சத்தம் என்ன செய்யும் என்பீர்கள். ஆனால் ஸ்லேட்டில் சாக்பீஸ் எழுதும் ஓசை, குழந்தை அழும் ஓசை ஆகியவை காது கூதும் ஓசைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரயிலில் கால் சிக்கும்போதும், குழந்தைகள் பசியில் அழும்போது வீறிட்டு அழுவதையும் நாம் குறை சொல்லப் போவதில்லை. இந்த ஒலிகள் ஏன் நமக்கு காது கூசுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி மட்டுமே நான் பேச வருகிறேன். கரண்டியால் பீங்கான் டம்ளர்களில் மோதுவது மோசமான ஒலிகளில் ஒன்று. நம் காதுகளின் அமைப்பு குறிப்பிட்ட ஒழுங்கமைந்த ஒலிகளுக்கு பழகிவிடுகிறது. ஆனால் திடீரென ஒழுங்கற்ற ஏற்படும் விபத்து, கட்டிட உடைப்பு போன்ற ஒலிகளுக்கு காதுகள் இன்னும் பழக்கப்படவில்லை. காதுகளின் ஒலிஅளவுத் திறன் 2000 ஹெர்ட்ஸ் முதல் 4000 ஹெர்ட்ஸ்கள் வரை. பொதுவாக ஒலிகளை நீங்கள் கண்டுகொண்டாலும், பரவாயில்லை என சகித்துக்கொண்டாலும் அவை உளநிலையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. பதற்றம், எரிச்சல், நிதானமிழப்பு, தூக்கமின்மை ஆகியவற்றை ஒளியை விட ஒலி எளிதில் ஏற்படுத்திவிடும். 2012 ஆம் ஆண்டு இதுபற்றி செய்த ஆய்வில் 74பேர் பங்கேற்றனர். இதில் பல்வேற

டாஸ்மாக் விற்பனை சரிவு, மாசுபாட்டில் சௌகார்பேட்டை டாப் 1!

படம்
நடந்து முடிந்த ஒளி உற்சவத் திருவிழாவில் மார்வாடி, சேட்டுகள் கொண்ட சௌகார் பேட்டை மாசுபாட்டை அதிகம் நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை விட மாசுபாட்டின் அளவு குறைவு என்பது மகிழ்ச்சி. காற்றில் உள்ள அனுமதிக்கப்பட்ட மாசுக்களின் அளவு 100 எனும்போது, சௌகார்பேட்டையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதில் 128  மைக்ரோகிராம் எனும் அளவில் மாசுத்துகள்கள் அதிகரித்துள்ளன. பட்டாசுகளின் ஒலி அளவு 55 டெசிபல் பாதுகாப்பான அளவு என அரசு கூறியது. 73 டெசிபலில் பட்டாசு வெடித்து தீபாவளியை டரியல் ஆக்கி உள்ளனர் சென்னை குடிமகன்கள். அரசுக்கு அவசர உதவியை நாடி 27 போன் அழைப்புகள் வந்துள்ளன. தீபாவளி ராக்கெட்டை மூடிய வீட்டுக்குள் விட்டு தீப்பற்றியது, பைக்கில் தீப்பற்றியது, ராக்கெட் எல்பிஜி கேஸில் தாக்கி தீப்பற்றியது என புகார்களின் பட்டியல் செல்கிறது. அரசு மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு தொடர்பான பிரச்சனைகளுக்காக 75 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். டாஸ்மாக்கில் தீபாவளி வருமானம் 355 கோடியாக உள்ளது. சாதாரண நாட்களில் வருமானம் 330 கோடி என்றால் விற்பனை வளர்ச்சியை புரிந்துகொள்ளலாம். மதுரை, சிவகங்கையில் குருபூஜை காரண

பட்டாசுக் குப்பைகளை என்ன செய்வது?

பங்குனித்தேர் விழாவின் போது மயிலாப்பூரில் சோறு எப்படி மூலைக்கு மூலை சிதறிக் கிடக்குமோ, அதைவிட அதிகமாக பட்டாசு குப்பைகள் இன்று தமிழகம் முழுக்க கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களின் பணி முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது. சென்னை நகரம் இந்த தீபாவளிக்கு 82 டன் குப்பைகளை உற்பத்தி செய்திருக்கிறது. இதிலும் அடையாறு, ராயபுரம் பகுதி பட்டாசு குப்பைகளை உற்பத்தி செய்த தில் முன்னிலை வகிக்கும் பகுதிகள். இதனை தூய்மை செய்யும் பணியில் 19 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடையே மழை வேறு பெய்வதால், பணியாளர்களுக்கு பதிலாக குப்பைகளை அதுவே ஓரங்கட்டி விடுகிறது. பட்டாசுக் குப்பைகளில் வேதிப்பொருட்கள் இருக்கின்றன என்பதால், அதனை திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டியிலுள்ள திடக்கழிவு நிலையத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். இங்கு ஆபத்தான திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர். கடந்த ஆண்டு உருவான பட்டாசு குப்பைகளின் அளவு 90 டன்கள். தூய்மை பணியாளர்கள் வேலைக்கு முன்னதாகவே வந்து பணிகளை செய்துள்ளனர். சாதாரண நாளில் சென்னையில் 5250 டன்கள் குப்பை உருவாகிறது. மாநகராட்சி வீட்டுக்கழிவுகள் மற்றும் ப

சர்க்கரையால் சத்தம் குறையுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சர்க்கரை கலக்கும்போது, ஸ்பூனில் எழும் சத்தம் குறைவாக இருக்கிறதே ஏன்? அநேகமாக நீங்கள் தனியாக காபி சாப்பிடும் பேச்சிலராக இருப்பீர்கள என டவுட்டாகிறது எனக்கு. இதையெல்லாம் கவனித்து கேள்வி கேட்கத்தோன்றுகிறதே ப்பா. பிரமிப்பாக இருக்கிறது. காபியில் ஏதும் கலக்காதபோது அங்கு ஒலிக்கு தடை ஏற்படுத்தும் பொருட்கள் ஏதுமில்லை. ஆனால் சர்க்கரை இதற்கு முதல் தடையாக வருகிறது. எனவே, சர்க்கரையற்ற டம்ளரில் ஸ்பூனால் கலக்கும்போது சத்தம் அதிகமாகவும், சர்க்கரை கலந்த கலக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஸ்பூன் டம்ளரில் மோதினால் ஒலி குறைவாக எழுகிறது. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

ASMR வீடியோக்கள் பெருகி வருகின்றன!

படம்
ஆம் அப்படித்தான் கூகுள் ட்ரெண்ட்ஸ் கூறுகிறது. ஏஸ்எம்ஆர் என்றால் அட்டானமஸ் மெரிடியன் சென்சரி  ரெஸ்பான்ஸ் என்று கூறலாம். சாதாரணமாக ஓரிகாமி, சமையல்  உள்ளிட்ட வீடியோக்களை நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா அந்த வீடியோக்களைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்கள். இந்த வீடியோக்களில் இன்று நூறு என கூகுள் டிரெண் ட்ஸ் குறிப்பிடுகிறது. எந்த மாநிலங்களைத் தெரியுமா? மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநில மக்கள்தான் இந்த வீடியோக்களை ஆர்வமாக அதிகமாக பார்த்திருக்கிறார்கள். இந்த வீடியோக்களின் டிரெண்டு அமெரிக்காவில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. இன்றும் இந்த ஏஎஸ்எம்ஆர் வீடியோக்களுக்கான நிகழ்ச்சிகளை தயாரிப்பவர்களுக்கு பத்தாயிரம் டாலர்கள் வரை வருமானம் கிடைக்கிறது. என்ன வீடியோக்களை பதிவிடுவது? ஐபோன் விமர்சனம் முதல் படுக்கும்போது குழந்தைகளுக்கு சொல்லும் கதை வரை எதை வேண்டுமானானாலும் சொல்லுங்கள். வீடியோ வடிவில் இதனை தயாரித்தால் சோலி முடிந்தது. இதற்கான வீடியோ தயாரிப்பவர்கள் ஒலியைப் பதிவு செய்வதற்காக தனி மைக்ரோபோன்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பாத்திரம் தேய்க்கும் ஒலி, சாப்பிடும் ப

விண்வெளியில் ஒலியை அறிய முடியுமா?

படம்
thought.co விண்வெளியில் ஒலியை அறிய முடியுமா? சுருக்கமாக சொன்னால் முடியாது. டிவி, சினிமாக்களில் ஒலி அமைப்போடு பார்த்து பழகியதால் விண்வெளியில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கலாம், சிவந்து போச்சு நெஞ்சு பிஜிஎம் கேட்கலாம் என நிறையப் பேர் நினைக்கலாம். ஆனால் இயற்பியல் இதனை சாத்தியம் இல்லை என்றே கூறுகிறது. விண்வெளியின் கதிர்வீச்சுகளை இயற்பியல் உபகரணங்கள் மூலம் உள்வாங்கி அதனை ஒலியாக்கும் முயற்சிகள் வானியலில் நடைபெற்று வருகின்றன. இவை சரியானவையா? பலனளிக்குமா? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஒலி பரவ காற்று எனும் ஊடகம் அவசியம். காற்று மூலக்கூறுகளால் நாம் பேசுவது பிறருக்கு கேட்கிறது. அதனை மனிதரின் மூளை புரிந்துகொள்கிறது.  காற்று மூலக்கூறுகள் அழுத்தப்படும் அளவு அதிகரித்தால் நம் காதில் விசில் சத்தம் அல்லது பொறி கலங்கி பூமி அதிரும் ஒலி கேட்கக்கூடும். நன்றி: Thought.co