இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடனால் தவிக்கும் உலகநாடுகள்! எச்சரிக்கும் ஐஎம்எஃப்

படம்
உலகம் சந்திக்கும் நிதிநெருக்கடி ! தனி நாடுகளின் ஏற்றுமதி , இறக்குமதிகளால் நேரும் பணவீக்கம் என்பதைத் தாண்டு உலகநாடுகள் பெற்றுள்ள கடன் 164 ட்ரில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளதை உலக நிதிக்கழகம் (IMF) எச்சரித்துள்ளது . தற்போது உலகிலுள்ள உள்நாட்டு உற்பத்திக்கு எதிராக அரசு மற்றும் தனியாரின் கடன் அளவு விகிதம் 225 சதவிகிதம் (2016) என்பதை தன் அறிக்கையில் நிதிக்கழகம் வலுவாக கூறியுள்ளது . " இது மிக அதிக அளவு . எல்லை மீறும்போது நாடுகளின் வணிகத்தில் நிதிப்பேரழிவு நிகழும் " என்கிறார் உலக நிதிக்கழகத்தின் பணவீக்கத்துறையைச் சேர்ந்த விட்டர் காஸ்பர் . அமெரிக்காவின் நிதிச்சீரழிவுகளிலிருந்து வணிகம் மெல்ல இப்போதுதான் மீண்டுவரும் நிலையில் இப்படியொரு வார்னிங்கை உலக நிதிக்கழகம் கொடுத்துள்ளது . தற்போது மூன்று காலாண்டுகளாக செய்துவரும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக தனியார் கடன்களின் அளவு சுனாமியாய் அதிகரித்து வருவதை குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளது உலக நிதிக்கழகம் .   ��ாக பேசுகிறார் கரன் ஆச்சார்யா. le='font-size:20.0pt;font-family:TAUN_Elango_Valluvan'>  

வீக்எண்ட் கொண்டாட்டம்! -உள்ளாடையில் காதல் செய்தி!

படம்
கோவில் கட்ட உதவிய பாகிஸ்தான் ! பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் அரசு ராவல்பிண்டி நகரில் கோவில் கட்ட 2 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து ஆனந்த அதிர்ச்சி தந்துள்ளது . ராவல்பிண்டி மற்றும் இஸ்லமாபாத் ஆகிய இருநகரங்களுக்கும் பொதுவான கிருஷ்ணர் கோவில் இது . இருவேளை பூஜை நடைபெறும் இக்கோவிலுக்கு வரும் பக்தர் கூட்டத்தை சமாளிக்க அதனை விரிவுபடுத்திக் கட்ட பாகிஸ்தான் அரசு இந்நிதியை வழங்கியுள்ளது .  " மறுபுனரமைத்து கட்டப்படும் பணி நிறைவுபெறும் வரையில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட ஏற்பாடு செய்துள்ளோம் . புனரமைக்கப்பட்ட கோயிலில் இனி அதிக பக்தர்கள் இறைவனை தரிசிப்பதோடு அங்கு தங்கமுடியும் " என கோயில் அறக்கட்டளை வாரிய (ETPB) அதிகாரி முகமது ஆசிஃப் கூறியுள்ளார் . 1970 ஆம் ஆண்டிலிருந்து இக்கோயிலை இவ்வாரியம் பராமரித்து வருகிறது . 2 பிச்சையெடுக்க விடுங்கள் ! சம்பளம் மாதம் ஐந்தாம் தேதிக்குள் வரவில்லையென்றால் அதையே செலவுகளுக்கு நம்பியுள்ள குடும்பஸ்தர்களின் நிலை என்னவாகும் ? மும்பை கான்ஸ்டபிள் கடிதத்தில் எழுதிய சிச்சுவேஷன்தான் ஏற்படும் . மும்பையைச் சேர்ந்த கான்ஸடபிள்

கழிவறை செல்ல நான்கு கி.மீ நடக்கிறோம்! - ம.பி குமுறல்

 கழிவறை 4 கி . மீ ! ஸ்வட்ச் பாரத்தை கடைபிடிக்க அனைவருக்கும் ஆசைதான் . தூய்மை பேண தண்ணீர் வேண்டுமே என உதவிகேட்டு குரல் வருவது மத்தியப்பிரதேசத்தின் தமோ மாவட்டத்திலிருந்து . மத்தியப்பிரதேசத்திலுள்ள தமோ மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் . இங்குள்ள அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் நீர் இல்லாத காரணத்தால் நான்கு கி . மீ பயணித்து கழிவறையைப் பயன்படுத்திவருகிற அவலம் நடந்துள்ளது . " நீர்ப்பற்றாக்குறையால் , காலையில் வாளிகளை எடுத்துக்கொண்டு எங்கள் பள்ளி ஆசிரியரோடு கிளம்பிச் சென்று கழிவறையைப் பயன்படுத்தி வருகிறோம் " என்கிறார் பள்ளி மாணவி ஒருவர் . அப்பகுதியிலுள்ள இரு போர்வெல் கிணறுகளும் கோடையில் வற்றிவிடுவதால்தான் மாணவிகளுக்கு இந்த நெருக்கடி . நீர்பற்றாக்குறை பற்றி அரசுக்கு தெரிவித்துள்ளோம் விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் " என்கிறார் தமோ மாவட்ட ஆட்சியர் .

எலக்ட்ரிக் காருக்கு மாறுங்க!

படம்
மின்சார காருக்கு அரசு உதவி ! பெட்ரோல் - டீசல் கார்களின் சூழல்பாதிப்பைக் குறைக்க இந்திய அரசு எலக்ட்ரிக் கார் தொழில்துறைக்கு 2.5 லட்சம் கோடி ரூபாயை அளிக்கவிருக்கிறது . இதில் இருசக்கர மின்வாகனத்தை ஒருவர் வாங்கினால் அவருக்கு அரசு மானியமாக 30 ஆயிரம் அளிக்கிறது . பஸ் மற்றும் டாக்சிகளுக்கு 1.5-2.5 லட்சம் வரை அரசின் மானிய உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . கனரகபோக்குவரத்துறை (DHI) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , ஒவ்வொரு 9 கி . மீ தூரத்திலும் ஒரு மின்வாகன சார்ஜிங் ஸ்டேஷன் அமையவேண்டும் என கூறப்பட்டுள்ளது . டெல்லி - ஜெய்ப்பூர் , டெல்லி - சண்டிகர் , சென்னை - பெங்களூரு , மும்பை - புனே ஆகிய இடங்களில் முதல்கட்டமாக சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவிருக்கின்றன . " அரசு மின்வாகனங்களுக்கு அளிக்கும் நிதி என்பது இத்துறையில் 0.5% தான் . கார்பன் வாயுக்களை குறைக்க அரசு பொதுப்போக்குவரத்தில் கவனம் செலுத்தவேண்டும் " என்கிறார் எலக்ட்ரிக்துறை ஆலோசகர் ஒருவர் . மின் மற்றும் கலப்பு வாகனங்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக 9 ஆயிரத்து 400 கோடி ரூபாயை அளிக்கவிருக்கிறது

சூறையாடப்படும் மக்களின் பணம்!

படம்
ஏமாறுவது யார் ? கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 23 ஆயிரம் வங்கி மோசடி வழக்குகளில் ஒரு லட்சம் கோடி மக்கள் பணம் வங்கிகளில் சூறையாடப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது . 2016-17 ஆண்டுகளில் 5 ஆயிரமாக இருந்த வங்கி மோசடிகளின் எண்ணிக்கை ஏப் . 2017- மார்ச் ,18 வரையிலான காலத்தில் 5,152 ஆக அதிகரித்துள்ளது கவலைப்படவேண்டிய விஷயம் . மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் (2017-18) காலகட்டத்தில் 28 ஆயிரத்து 459 கோடி பணமானது சிக்கலில் உள்ளது என்கிறது சென்ட்ரல் வங்கி . மேலே சொன்ன ஆண்டுகள் மட்டுமல்ல 2014 ஆம் ஆண்டிலிருந்தே வங்கி மோசடிகளும் வாராக்கடன்களின் சுமையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன . 2014-15 ஆண்டுகளில் 19 ஆயிரத்து 455 கோடி ரூபாயும் , 2015-16 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 698 கோடி ரூபாயும் கடன் லேபிளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது . நீரவ்மோடி , மெகுல் சோக்ஸி , சிவசங்கரன் மற்றும் கடனை அங்கீகரித்த வங்கி அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது . 

நானி பாட்டி என்ன சொல்கிறார்?

படம்
அறிவுசார்சொத்துரிமைக்கு உதவும் ஐபி நானி பாட்டி ! மேற்கு வங்காள இயக்குநர் சத்யஜித்ரேயின் அயல்கிரகவாசி ஐடியாவை லபக்கித்தான் ஏலியன் படங்களை ஸ்பீல்பெர்க் எடுத்தார் என இன்றளவும் குற்றச்சாட்டு உண்டு . நிஜமோ , பொய்யோ அறிவுசார்சொத்துரிமை இருந்தால் மூளையில் கணநேரத்தில் உதித்த ஐடியாவை கறாராக காப்பாற்றியிருக்கலாம் அல்லவா ? இதற்காகத்தான் வணிகத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு ஐபி நானிபாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார் . " ஒருவரின் ஐடியாவை திருடுவது மோசமான குற்றச்செயல் . அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐபி நானி பாட்டி மற்றும் அவரின் பேரன் ஆதித்யாவை ( சோட்டு ) அறிமுகப்படுத்தியுள்ளோம் " என்று டெல்லியில் நடந்த அறிவுசார்சொத்துரிமை மாநாட்டில் பேசியுள்ளார் வணிக அமைச்சர் சுரேஷ்பிரபு . உலக அறிவுசார்சொத்துரிமை இயக்கத்தின் விளம்பரங்களிலும் பயன்படுத்தப்படவிருக்கிறது . நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான ஐபிஆர் மசோதாவும் கடந்தாண்டே அமுலுக்கு வந்துவிட்டது . " பள்ளிக்குழந்தைகள் தங்கள் சிந்தனைகளை சுதந்திரமாக வளர்க்க இவ்விதிகள் உதவும் " என்கிறார் அமைச்சர் சுரேஷ்பிரபு . 

கல்விசெயல்பாட்டை வாழ்க்கையாக்கிக் கொண்ட பெண்மணி!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி கெஸ் சிறுவன் பில்லியும் , அவனது அண்ணனும் வீட்டில் சந்தித்தாலே தீராத லடாய்தான் . பில்லியின் அப்பா வீட்டைவிட்டு வெளியேறிவிட , அம்மா கிடைத்த வேலையை செய்துகொண்டு குடும்பத்தை நடத்துகிறாள் . பார்ட்வேலை  செய்துகொண்டே பள்ளியில் படிக்கும் பில்லி ஒருநாள் காட்டுக்குள் பயணிக்கும்போது சிறிய பருந்து உறவாகிறது . நட்பாகும் பருந்தைக் மறைவான இடத்தில் வைத்து பாதுகாப்பதோடு , பருந்து வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான் . இந்த விஷயம் அவனைச் சுற்றியிருப்பவர்களும் தெரிய வர , எல்லோரும் அவனை மெச்சுகிறார்கள் .  அச்சமயம் பில்லிக்கும் அவனது சகோதரனுக்கும் இடையே வாக்குவாதம் எழ , பருந்தைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசி பழிவாங்குகிறான் பில்லியின் அண்ணன் . செல்லப்பருந்து இறந்த சோகத்தில் பில்லி தவிப்பதோடு திரை இருள்கிறது . தொழிலாளர் வர்க்க ஏழைச்சிறுவர்களின் வாழ்க்கையை , அவர்களின் மென்மையான உணர்வுகளை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கென் லோச் . தன் செல்லப் பருந்துக்கு பில்லி சூட்டும் பெயர்தான் படத்தின் தலைப்பும் கூட .

"குழந்தைகள் எதையும் தூக்கி எறிவதில்லை"

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி ‘ சூடானி ஃப்ரம் நைஜீரியா ’ வறுமையில் தடுமாறும் நைஜீரிய அகதி கால்பந்து வீரர் சாமுவேலுக்கு  கேரளாவின் மலப்புரத்தில் பிரபல கால்பந்து அணியில் விளையாட சாமுவேலுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கிறது . போலி பாஸ்போர்ட்டுடன் கேரளத்துக்கு வந்து தனது கால்பந்தாட்ட திறமையின் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து சூடானி என செல்லப்பெயரைப் பெறுகிறார் . சாமுவேல் அணியின் மேனேஜர் மஜீத் . திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அலைபாய்கிறார் . தாயின் இரண்டாவது மணத்தில் கிடைக்கும் தந்தைக்கும் மஜீத்துக்கும் சுமூக சூழல் இல்லை . இச்சூழலில் எதிர்பாராத விபத்தில் சாமுவேலின் கால் உடைந்துவிடுகிறது .  சாமுவேலைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மஜீத்தின் தலையில் விழுகிறது . மஜீத் என்ன செய்தார் ? என்பதை நகைச்சுவையான திரைக்கதையோடு மனித நேயம் மிளிர கவித்துவமாகச் சொல்கிறது இந்த மலையாளப் படம் . இயக்கம் சக்காரியா . அரவிந்த் குப்தா கான்பூர் ஐ . ஐ . டியில் பொறியியல் பட்டதாரி அரவிந்த் குப்தா , குழந்தைகளிடம் அறிவியலைக் கொண்டு செல்ல உயர்பதவிகளைத் த

நார்னியாவின் கதவைத் திறந்த எழுத்தாளர்!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! லிஜி Ready Player one புதிய உலகத்தில் வாழ்ந்த அற்புத அனுபவத்தை அள்ளித் தருகிறது ‘ ரெடி பிளேயர் ஒன் ’. 2045 ம் ஆண்டு . நிஜ உலகின் சலிப்பிலிருந்து விடுபட , மக்கள் தேர்ந்தேடுக்கும் மாய உலகம் ஒயாசிஸ் . விர்ச்சுவல் ரியாலிட்டி கேமின் மூலமாக இதனுள் நுழையலாம் . ஓயாசிஸை உருவாக்கிய ஹேலிடே மூன்று புதிர்களை இந்த விளையாட்டில் வைத்திருக்கிறார் . ‘ புதிர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஓயாசிஸ் சொந்தம் ’ என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார் . பல்லாண்டுகளாக விடுவிக்கமுடியாத புதிரை கண்டுபிடுத்து டெக் உலகின் கவனத்தை ஈர்க்கிறது ஹீரோவின் அணி . ஹீரோவுக்குப் போட்டியாக  ஐஒஐ நிறுவனம் ஆயிரக்கணக்கான நபர்களைக் களத்தில் இறக்குகிறது . யாருக்கு ஓயாசிஸ் கிடைத்தது என்பதே மீதிக்கதை   . எர்னஸ்ட் கிளைனின் நாவலைத் தழுவிய இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தி , உச்சம் . தான் நேசிக்கின்ற படங்களின் காட்சிகளை ஆங்காங்கே கோர்த்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் . சி . எஸ் . லீவிஸ் குழந்தைகளுக்கான கதை எழுதுவதில் தனித்துவம் கொண்

லிங்கம் ஜான்டிஸ் வந்தால் என்ன செய்வீர்கள்? - குட்டு கீ கன்

படம்
Guddu Ki Gun Directed by Shantanu Ray Chhibber Sheershak Anand Produced by Emenox Media Pvt. Ltd Written by Shantanu Ray ji Chhibber Sheershak Anand Starring Payel Sarkar Kunal Khemu Aparna Sharma Music by Gajendra Verma, Vikram Singh, Raju Sarkar & Saqi Cinematography Keiko Nakahara பீகாரிலிருந்து கொல்கத்தாவில் தங்கி வாஷிங்பவுடர் விற்று வாழ்க்கை ஓட்டும் கோவர்தன் என்கிற குட்டு ஆல்டைம் ரோமியோ. வாஷிங்பவுடர் என்பதெல்லாம் ஒரு சாக்குதான். அங்கிள்கள் ஆபீஸ் போன பின் வாஷிங்பவுடர் சாக்கில் ஆன்டிகளை வளைத்துப்போட்டு ஜாலி பண்ணுவதுதான் குட்டுவின் மெயின் ஜாப். இந்த இடத்தில் உங்களுக்கு டோன்ட் மெஸ் வித் தி ஜோகன் எனும் ஆடம் சாண்டலர் படம் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல. ஆன்டிக் கடை வைத்திருப்பவரின் மனைவி காஜல், டான் ஒருவரின் மனைவி வளைத்து வளைத்து சோப் போடும் குட்டுவின் காதல் லீலைகளை காதல் என பூசாரி ஒருவரின் பேத்தி போலி மூலம் முடிவுக்கு வருகிறது. காதலி போலிக்காக கோயிலில் காத்திருக்கும்போது அங்கு வரும் ஆன்டியை அயர்ன் செய்ய குட்டு கிளம்புவது போலியை அதிரவைக்க காளிக்கு கதிக

காதுகளுக்கு உப்பு தேவை!

படம்
காதுகளுக்கு உப்பு தேவை ! திரைப்படங்களில் யாரேனும் காமெடியனை அறைந்து காதில் ஒலி கேட்காமல் காது செவிடு ஆவதைப் பார்த்து ரசித்திருப்பீர்கள் . ஆனால் ஒலிமாசினால் அமெரிக்காவில் 15 சதவிகிதப்பேருக்கு செவித்திறன் குறைபாடு (NIHL) உள்ளதை ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன . இதற்கு சர்க்கரை மற்றும் உப்புக்கரைசல் உதவுகிறது என தெற்கு கலிஃபோர்னியா மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .  காதின் உள்ளே உள்ள கோக்லியா எனும் உட்புறப்பகுதி ஒலியை மூளைக்கு அனுப்புகிறது . எலியிடம் இதுகுறித்த ஆராய்ச்சி நடைபெற்றது . ஒலி எழுப்பும் முன்பும் பின்பும் கோக்லியா பகுதியை புகைப்படம் எடுத்தனர் . இப்பகுதியிலுள்ள சிறு ரோமங்கள் இறந்துபோகின்றன . அடுத்து சுரக்கும் திரவத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது . நியூரானை அழிக்கும் இந்த திரவத்தை உப்பு மற்றும் சர்க்கரை நீர்க்க வைத்து நியூரான் பாதிப்புகளை 64% தடுக்கிறது . ராணுவத்தில் அல்லது அதிக ஒலி கொண்ட சூழலில் வேலை செய்பவர்கள் செவித்திறன் இழப்பைத் தடுக்க உப்புக்கரைசல் பயன்படக்கூடும் .

மேஜிக் சீக்ரெட்ஸ்!

படம்
மாயாஜால தந்திரங்கள் ! உடலை வெட்டுவது , ரிங்கை தொலைத்து மீட்பது , கண்ணாடியைக் கடப்பது என டைனமோ உள்ளிட்ட பல மேஜிக் மனிதர்களும் சுயமாக நிறைய நூல்கள் , சிடி , டிவிடி , நிகழ்ச்சிகள் என இன்ஸடிடியூட் போகாமல் மேஜிக்கை கற்றவர்கள்தான் . அமெரிக்க மேஜிக்மனிதரான ஹேரி ஹூடினி தன் வீட்டில் ஆன்மிகம் , மேஜிக் குறித்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வைத்திருந்தார் . இவர் மட்டுமல்ல முன்னணி மேஜிக் மனிதர்கள் அனைவரும் நூலகம் வைத்து பராமரித்தவர்கள்தான் . செலவு மட்டுமல்ல தங்களின் மேஜிக் ட்ரிக்குகளுக்கேற்ப 300- 2500 டாலர்கள் வரை பில்லும் வசூலிக்கின்றனர் . சிக்னேச்சர் ட்ரிக்குகளை பல்லாயிரம் முறை சோதித்து பார்த்தே வல்லவராக மாறுகின்றனர் என்பதால் அதன் ரகசியத்தை மேஜிக்காரர்களிடம் கேட்பது முறையான அணுகுமுறை அல்ல . நிகழ்ச்சியின் பரபரப்புக்கு இடையே திடீரென ஒருவருடைய செல்போன் மொச்சைக்கொட்டை பல்லழகி என முனகினால் பலருக்கும் அய்யோவெனதானே இருக்கும் . போன் பேசி முடிந்தபிறகே மேஜிக் நிகழ்ச்சிகள் தொடரும் என கறாராக செயல்படுத்துகின்றனர் சிலர் .    

ஆப்பிள் நகர்!

படம்
ஆப்பிள் நகர் ! அமெரிக்காவின் நியூயார்க்கை பிக் ஆப்பிள் என செல்லமாக குறிப்பிடுகின்றனர் . உறங்கா நகரம் , கோதம் என வேறு சில பெயர்களும் உண்டு என்றாலும் பிக் ஆப்பிள் என்ற பெயருக்குள்ள வசீகரம் இன்றும் குறையாதுள்ளது . 1920 ஆம் ஆண்டு தி மார்னிங் டெலிகிராப் பத்திரிகையில் விளையாட்டு பத்தி எழுத்தாளர் ஜான் ஜே ஃபிட்ஸ்ஜெரால்ட் குதிரை பந்தய விளையாட்டைக் குறிப்பிடும்போது நியூயார்க் நகரை பிக் ஆப்பிள் என குறிப்பிட்டு எழுதி பிரபலப்படுத்தினார் . 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று மீண்டும் தன் பத்தியில் நியூயார்க்கை ஆப்பிள் என குறிப்பிட்டு எழுதினார் . அப்போது குதிரைப்பந்தயங்களுக்கான பணப்பரிசுகள் பெரும் தொகையாக உயர்ந்துவிட்டதை குறிப்பிட்ட இந்த வார்த்தையை ஜான் பயன்படுத்தினார் . பின் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் இந்த வார்த்தை ஜான் அடித்துவிட சமூகத்தில் மறக்கமுடியாத ஒன்றாக மாறியது . பின் இரவு கிளப்புகளில் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் 1930 ஆம் ஆண்டு ஜாஸ் இசைக்குழுக்களிலும் ஆப்பிள் வார்த்தை பயன்படுத்தப்பட்டது . நகரமேயர் அறிவிப்பினால் பத்திரிகையாளர் ஜான் வாழ்ந்த 54 ஆவது தெரு (1934-63) பிக்

கருப்பினத்தவர்களுக்கான ஸ்பெஷல் செய்தி நிறுவனம்!

படம்
கருப்பு செய்திகள் ! " எங்கள் எதிர்காலம் சிறப்பாக உள்ளது " என கூகுள் ஹேங்அவுட் வழியாக பேசும் மோர்கன் டிபான் கருப்பினத்தவர்களுக்கான செய்தி தளங்களை (Blavity) உருவாக்கி இயங்கி வருகிறார் . செயின் லூயிஸ் நகரில் பிறந்தவரான மோர்கனுக்கு முகமது அலி , மார்ட்டின் லூதர் கிங் ஜூர் ஆகியோரே முன்னோடிகள் . மாதம் 30 லட்சம் பேர் மோர்கனின் இணையதளங்களை வாசித்து வருகின்றனர் . இத்தளத்தில் வெளியாகும் 40 சதவிகித செய்திகள் தன்னார்வலர்கள் உழைப்பில் உருவாகிறது . பிளாக் வடிவில் பிஸினஸ் மாடலாக பிளாவிட்டி உருவாகியுள்ளது . " நாங்கள் பிற முன்னணி வணிக மாடல்களைப் போல செயல்பட விரும்பவில்லை . நாங்கள் இத்துறையில் பத்து ஆண்டுகளாக உழைத்து வருகிறோம் " என்கிறார் மோர்கன் டிபான் . செஸ் , ஹாக்கி என பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றவர் , சிலிக்கன்வேலியில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார் . போலீஸ் , மைக்கேல் ப்ரௌன் என்பவரை சுட்டுக்கொன்றபின் பிளாவிட்டி நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து மோர்கன் தொடங்கினார் . " தன்னார்வலர்கள் மூலம் கிடைக்கும் செய்திகள் வெரைட்டியாக இருப்பதோடு , அவர்கள் மனத

ஆல் ஸ்க்ரீன் போன்- லெனோவா மாயாஜாலம்

படம்
லெனோவாவின் புதுமை ! லெனோவாவின் துணைத்தலைவர் சாங்செங் , சமூகவலைதளத்தில் பகிர்ந்த புதிய போன் ஏறத்தாழ ஐபோன் எக்ஸின் ஆல் ஸ்க்ரீன் என்பதை அடியொற்றி உருவாகியுள்ளது . இப்போனில் 95 சதவிகிதம் திரைதான் . லெனோவா இசட் 5, பற்றிய டீசரைத்தான் சாங்செங் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் . இதில் பதினெட்டு காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன . சீனாவைச் சேர்ந்த லெனோவா , 2.91 பில்லியன் டாலர்கள் செலவில் மோட்டரோலாவை கூகுளிடமிருந்து வாங்கி ஹூவாய் , ஜியோமி , விவோ , ஆப்போ ஆகிய போன் நிறுவனங்களை முந்தி நின்றாலும் ஹிட் போன்கள் லிஸ்டில் இன்னும் தடுமாறியே வருகிறது . இசட் 5 போனில் செல்ஃபி கேமரா எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பது முக்கிய கேள்வி . ஜியோமியின் மி மிக்ஸில் கேமராவை இயக்க கீழுள்ள பட்டனை அழுத்தலாம் .