பிரச்னையே சார்ஜர்தாங்க!- வீக்எண்ட் பிட்ஸ்
பிட்ஸ்!
ஜப்பான் சீக்ரெட்!
ஜப்பான் நாட்டைச்
சேர்ந்த மசாஸோ நோனகா உலகின் வயதான மனிதராக கின்னஸின் சாதனை மகுடம் சூடியிருக்கிறார். 1905 ஆம்
ஆண்டு பிறந்த நோனகாவின் வயது 112 ஆண்டுகள் 259 நாட்கள்."நோனகா எங்களுக்கு வாழ்வின் மதிப்பு குறித்து
கற்றுக்கொடுத்திருக்கிறார்" என்கிறார் கின்னஸ் ரெக்கார்ட்
நூலின் எடிட்டரான கிரைக் கிளெண்டாய்.
தவறிவிழுந்த தொகுப்பாளர்!
காமன்வெல்த் விளையாட்டில்
பங்கேற்ற நீச்சல் வீரர்களை பிபிசி செய்தியாளர் மைக் பசேல் சீரியசாக பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். லைவ் பேட்டியில்
திடீரென கால் ஸ்லிப்பாக, அப்படியே நீச்சல்குளத்தில் விழுந்துவிட்டார்.
பேட்டி கொடுத்த வீரர்கள் மட்டுமல்ல, படம் வெளியானவுடன்
இணையமே குலுங்கி சிரித்து மைக் பசேலின் படத்தை வைரலாக ஷேர் செய்திருக்கிறது.
பழரசத்தில் கலப்படம்!
பிரேசிலில் நடந்த
இசைத்திருவிழாவில் உற்சாகமாக இளைஞர்களும், பெண்களுமாக கலந்துகொண்டனர்.
அப்போது ஒரு பெண் ஜாலி செல்ஃபீ எடுக்க, அவரின்
கையிலிருந்த பழரசத்தில் இளைஞர் ஒருவர் ஏதோ கலப்பது தெரியவந்து ஷாக்காகியுள்ளது.
இணையத்தில் இப்படம் எச்சரிக்கை
கேப்ஷனுடன் வைரலாகிவருகிறது.
சார்ஜர் பிரச்னையல்ல!
சீனாவைச்சேர்ந்த
டேலியனுக்கு புராஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட தொற்றால் கடும் அரிப்பு. உடனே அருகிலிருந்து
செல்போன் சார்ஜரை எடுத்து படக்கென சிறுநீர் துவாரத்தை அடைத்தார். ஆனால் அரிப்பு அத்துமீறியதோடு, சார்ஜரையும் பிடுங்க முடியவில்லை.
பின் ஆம்புலன்சில் ஹாஸ்பிடல் சேர்த்து சார்ஜரை மீட்டிருக்கிறார்கள்.
அதாவது, டேனியல் உயிர்பிழைத்துவிட்டார்.