அமேஸான் கூகுளுக்கு போட்டியாக ஃபேஸ்புக்கின் புதிய வரவு!







 Image result for facebook speaker





ஃபேஸ்புக்கின் ஸ்மார்ட் ்ஸ்பீக்கர்!

ஃபேஸ்புக் விரைவில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்பதுதான் டெக் கிசுகிசு. Portal என பெயரிடப்பட்டுள்ள லேப்டாப் சைசில் 15.6 இன்ச் அளவில் உருவாகியுள்ளது. அமேஸானின் எகோ போல என புரிந்துகொள்ளுங்கள். ஃபேஸ்புக் பிரைவசி சார்ந்த விசாரணைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் ஸ்பீக்கர்களை பலரும் வாங்குவார்களா என்ற டவுட்டும் உள்ளது.

கூகுளின் ஹோம், அமேஸானின் எகோ ஆகியவை இன்று மார்க்கெட்டை கலக்கினாலும் இதற்கான ஆராய்ச்சியை முன்னதாக அவர்கள் தொடங்கிவிட்டனர். குரல் வழியாக தகவல் சொல்லும் இந்த உதவியாளர்களுக்கு ஃபேஸ்புக்கின் ஏஐ புரோகிராமான எம் உதவி புரியவிருக்கிறது. ஸ்மார்ட் ஸ்பீக்கரிலுள்ள மெசஞ்சர் மூலம் நண்பர்களிடம் அளவில்லாத அரட்டை அடிக்கலாம். அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளில் இந்த ஸ்பீக்கர் உதவியாளர்கள் விரைவில் விற்பனைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.