பெண்களின் பிரச்னைகளைப் பேசும் புத்தகங்கள்!



Image result for bad feminist




BAD FEMINIST // ROXANE GAY

 

நியூயார்க் டைம் பத்திரிகையில் சிறந்த எழுத்தாளராக புகழப்பட்ட ரோக்ஸனா கே, பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகளை அங்கதமாகவும், திருத்தமாகவும், கவனிக்கவேண்டிய விஷயங்களை தீவிரமாகவும் எழுதியுள்ளார்.
MEN WE REAPED // JESMYN WARD

எஜெஸ்மின் வார்ட் 2013 ஆம் ஆண்டு எழுதிய நூல் இது. மிசிசிபியில் போதைப்பொருட்கள், விபத்துகள், தற்கொலை அலைவுறும் கருப்பினத்தவர்களில் 5 நபர்களின் வாழ்க்கைக் கதையைக் கூறுகிறார். ஜெஸ்மின் பால்யத்தில் தொடங்கும் வாழ்க்கை சகோதரரின் இறப்பைச் சொல்லி நெஞ்சை வேதனையில் தவிக்கச் செய்து நிறைவடைகிறது.

TEXT ME WHEN YOU GET HOME: THE EVOLUTION AND TRIUMPH OF MODERN FEMALE FRIENDSHIP // KAYLEEN SCHAEFER

 

பெண்களின் நட்பு நிலைக்குமா, உண்மையானதா, மகிழ்ச்சியோடு துன்பத்தையும் பகிரும் தன்மை கொண்டதா, பெண்கள் நட்பாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் வெறுப்பவர்களா என பொதுவெளியில் அனைவரின் மனதிலும் உள்ள கேட்கமுடியாத கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார் ஆசிரியர் கெய்லீன் ஸ்காஃபெர்.



பிரபலமான இடுகைகள்