இந்தியாவின் மன்னர்கள்!
குடியாட்சி மன்னர்கள்!
நவீன் பட்நாயக்(71), ஒடிஷா முதல்வர்
விவசாயம் மற்றும் கல்வித் திட்டங்களின் மூலம் ஒடிஷாவின் முகத்தை மாற்றியவர்.
சாலைகள், பாலங்கள் அமைப்பதோடு ஸ்மார்ட் நகரங்கள், இ-ஹப் ஆகியவற்றை அமைப்பதாக வாக்குறுதி தந்தார்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக ஒடிஷாவை ஆண்டு வருகிறார் பட்நாயக்(2000
லிருந்து).
டாக்டர் ராமன்சிங்(65), சத்தீஸ்கர் முதல்வர்
மக்களை
நேரடியாக சந்திக்கும் லோக் சூரஜ் அபியான் திட்டம்
2005 ஆம் ஆண்டிலிருந்து அமலிலுள்ளது. அரசின் கொள்கை மக்களுக்கு உதவுகிறதா என
சரிபார்க்க இத்திட்டம் உதவுகிறது. அனைவருக்கும் உணவு உரிமை சட்டத்தின்படி, ஊட்டச்சத்துக்குறைவு 30 சதவிகிதமாக குறைந்துள்ளது. சத்தீஸ்கரின் அரியணையை பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கைப்பற்றி வைத்துள்ளார் ராமன்சிங்.
பவன் சாம்லிங்(67), சிக்கிம் முதல்வர்.
எழுபது
சதவிகித நிதி கிராம விவசாயத்திற்கு. சூழலை மாசுபடுத்தாத முறையில் மதுபானம்,மருந்து,விடுதிகள் இயங்குகின்றன. கல்வியறிவு 82 சதவிகிதம். ஆசிரியர்-மாணவர் விகிதமும்
10:1 என்ற விகிதத்தில் சிறப்பாக உள்ளது. 1994 ஆம் ஆண்டிலிருந்து பவன் சாம்லிங் சிக்கிமின் முதல்வராக செயல்பட்டுவருகிறார்.