எக்ஸிமாவுக்கு புதிய தீர்வு!
பாக்டீரியா மருத்துவம்!
தோலின் கை மூட்டு, முழங்காலின்
உட்பக்கம் என தோன்றும் அலர்ஜி பாதிப்புக்கு குறிப்பிட்ட காரணம் என எதுவும் மருத்துவர்களால்
கூறமுடியவில்லை. தோல் ஆரோக்கியமானவர்களிடமிருந்து பெறும் பாக்டீரியாவை
பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தி எக்ஸிமாவை தீர்க்கலாம் என அமெரிக்காவிலுள்ள
தொற்றுநோய் மற்றும் அலர்ஜி மைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தினசரி தோல் பிரச்னைக்கு ஆயின்மென்ட் தடவுவது அல்லது Dupixent எனும் விலைமதிப்பிலான சிகிச்சை மட்டுமே மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.
மனிதர்களின் தோலிலுள்ள
நோய் எதிர்ப்பு சக்தியை
R. mucosa பாக்டீரியா அதிகரிக்கிறது. தோலில் அலர்ஜி,
அரிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை இந்த நன்மை பாக்டீரியாக்கள் மூலம்
அகற்றினால் நோய் தீரும் என்பதுதான் ஆய்வாளர்களின் எண்ணம். தற்போது
எலிகளிடம் நடைபெற்றுள்ள ஆய்வு நம்பிக்கை தந்தாலும் மனிதர்களிடம் இந்த பாக்டீரியாவை
பயன்படுத்தி இன்னும் ஆய்வுகள் நடைபெறவில்லை. பாக்டீரியாவை நேரடியாக
எதிர்கொள்ளும் ஆய்வு என்ற அடிப்படையில இது முக்கியமானது.