ஒரு படம் ஒரு ஆளுமை





 See the source image






ஒரு படம் ஒரு ஆளுமை- லிஜி

மான்செயூர் இப்ராஹிம்

பிரான்ஸில் பாலியல்தொழில் நடைபெறுமிடத்தில் தந்தையுடன் வசித்து வருகிறான் மோசஸ். தாயற்றவனுக்கு தந்தையும் வழிகாட்டாததால் பொய், களவு, சூது, மாது என மோசஸ் அலைபாய்கிறான். அப்போது மளிகை கடைக்காரர் இப்ராஹிம் அறிமுகமாகிறார். இப்ராஹிமின் கடையில் புகுந்து பொருட்களை திருடுவது மோசஸின் வழக்கம். மோசஸின் திருட்டை அறிந்தாலும் அவனை மகன் போல கருதி கண்டும் காணாமல் இருக்கிறார்.
இச்சூழலில் திடீரென மோசஸின் தந்தை தற்கொலை செய்துகொள்ள, அனாதையாகும் மோசஸிடம் அளவற்ற அன்பு காட்டுகிறார் இப்ராஹிம். புதிய கார் வாங்கி மோசஸூடன் அதில பயணிக்கிறார். வழியில் நேரும் விபத்தில் இப்ராஹிம் மரணிக்கிறார். உயிர்பிழைத்த மோசஸ் மளிகைக்கடையை எடுத்து நடத்துவதோடு படம் முடிகிறது. ஒரு சிறுவனுக்கும் முதியவருக்குமான ஆழமான நட்பை அழகாகச் செல்லுலாய்டில் சொன்ன இப்படத்தின் இயக்குநர் பிராங்காய்ஸ் டுபெய்ரான்.

சலிமா பேகம் (Salima Begum)

பள்ளிப்பருவத்தை கடந்து வந்த அனைத்து மாணவர்களின் வாழ்விலும் ரோல்மாடலாக சில தனித்துவமான ஆசிரியர்கள் இருப்பார்கள். அத்தகைய ஆசிரியர்களில் பத்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குகுளோபல் டீச்சர் பரிசுவழங்கப்படுகிறது. சான்றிதழுடன் பத்துலட்சரூபாயும் அளிக்கப்படுகிறது. 2017-ம் ஆண்டு இப்பரிசைப் பெற்றவர்களில் சலிமா பேகமும் ஒருவர். பாகிஸ்தான் உலகளவிலான விருதைப் பெறுவது அதுவே முதல்முறை. 
பாகிஸ்தானிலுள்ள குக்கிராமத்தில் பிறந்த சலிமா பேகம், பள்ளிப் படிப்பைக் கடக்கவே சிரமப்பட்டார். அக்கிராமத்தில் 10 வயது நிரம்பியவுடனே குழந்தை திருமணம் முடிவாகிவிடும். இச்சூழலில்தான் சலிமா பட்டப்படிப்பை முடித்தார். தான் படித்த படிப்பு தன்னைப்போன்ற பெண்களுக்கு தன் கலவி பயன்பட வேண்டும் என்று ஆசிரியரானார் சலிமா. லட்சிய ஆசிரியராக பணியாற்றி தன்னைப் போலவே 8000 ஆசிரியர்களை பாகிஸ்தானில் உருவாக்கி சாதித்தார். பரிசுத்தொகையை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப் போவதாக கூறியுள்ளார் சலிமா

-லிஜி

பிரபலமான இடுகைகள்