இணையத்தை நிறுத்துவது சாத்தியமா?


Related image


இணையத்தை நிறுத்தலாமா?

இன்டர்நெட்டால் பல பிரச்னைகள். உடல்பருமன், டெக் அடிமைத்தனம், ஆபாச வீடியோக்கள் என காரணம் தேடுபவர்கள் அதனை நிறுத்திவிட்டால் என்ன என்று கூட யோசிப்பார்கள். இணையத்தை ஸ்விட்ச் ஆப்செய்து பிளக்கை பிடுங்கி நிறுத்த முடியுமா?


முடியாது. பூமியிலுள்ள ஆறுகளை ஒரு நிமிடம் நிறுத்தி வைக்க முடியுமா? அதேபோல்தான் இன்டர்நெட்டும். அரசு மற்றும் தனியார் வசமுள்ள இணையம் என்பது விர்ச்சுவலாக தடுக்க முடியாத ஒன்று. தனிப்பட்ட இணைப்புகளை முடக்கலாம். மற்றபடி ஒருவழியை அடைத்தால் இன்னொருவழியாக வெளியேற முயற்சிக்கும் நீர் போலவே இணையமும். விதிவிலக்காக, 2011 ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்டபோது, அதை செயலிழக்க வைக்க எகிப்து அரசு, தன் நாட்டின் இணையக் கம்பெனிகளை DNS அமைப்பை நிறுத்த உத்தரவிட்டது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசும் நெருக்கடி நிலையில் இணையத்தை முடக்கும் சக்தி கொண்டுள்ளது