ரோஹிங்கயாக்களை ஆதரிக்கும் தொழில்நுட்ப போராளி!



Image result for rohingya help mohammad noor


அகதிகளின் நாயகன்!

மியான்மரிலிருந்து இடம்பெயர்ந்த ரோஹிங்கயா முஸ்லீம்களுக்கு மலேசியா புகலிடம் அளித்துள்ளது. பலர் கோலாலம்பூருக்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் சூழலில் அவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார் முகமது நூர். சவுதி அரேபியாவை பூர்விகமாக கொண்ட நூர், தகவல்தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றியவர். தற்போது ரோஹிங்கயா விஷன்(2010) என்ற பெயரில் செய்தி நிறுவனத்தை தொடங்கி அரபி, ஆங்கிலம் மொழியில் செய்திகளை வெளியிட்டு முஸ்லீம் மக்களை ஒன்றிணைத்து பிரச்னைகளை களைய முயற்சித்து வருகிறார்.

பிளாக்செயின் முறையில் ரோஹிங்கயா மக்கள் பணத்தை பரிமாறிக்கொள்ளும் நிறுவனத்தை நூர் தொடங்கியுள்ளார். தற்போது இந்நிறுவனத்தில் 3 லட்சம் ரோஹிங்கயா மக்கள் இணைந்துள்ளனர். "தாய்மண்ணை இழந்தவர்கள் சந்தித்துகொள்ளும் ஜங்க்‌ஷன் இது" என்கிறார் நூர். மலேசியா, முஸ்லீம் நாடு என்றாலும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிக குறைந்த வாய்ப்புகளே அகதிகளுக்கு உண்டு."சுயலாபங்களுக்காக  டிவியில் ரோஹிங்கயாக்களைப் பற்றிப்பேசும் பிரதமர் பற்றி கருத்து கூற ஏதுமில்லை. ரோஹிங்கயா மக்கள் வாழ்வது மட்டுமே இப்போது முக்கியம்" என்கிறார் நூர்.

பிரபலமான இடுகைகள்