ஜாதியை ஒழிக்க 7 மேரேஜ்!



Image result for marriage illustration



மதுத்தடை விபரீதம்!

மதுபானங்களும், போதைப்பொருட்களின் பயன்பாடும் புத்தியை எவ்வளவு தூரம் மழுங்கச்செய்யும் என்பதற்கு உத்தரப்பிரதேசத்தில் நடந்த சம்பவமே உதாரணம்.

உத்தரப்பிரதேசத்தின் சாஜன்பூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் குடிநோயாளி. தினந்தோறும் வேலை செய்வதும் காசை குடித்து அழிப்பதுமாக இருந்தால் எந்த மனைவி பொறுத்துக்கொள்வாள்? சங்கீதாவும் கணவரின் குடிப்பழக்கத்தை எதிர்த்து சண்டை போட்டார். சண்டையில் டர்னிங் பாய்ன்டாக திடீரென உஷ்ணமான ராஜேஷ், அருகிலிருந்து கத்தியை எடுத்து மனைவியின் மூக்கை வாழைக்காயை வெட்டுவது வெட்டி எறிந்துவிட்டார். வலியில் சங்கீதா அலறித்துடிக்க, அருகிலுள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்து மூக்கை காப்பாற்றியுள்ளனர். போலீஸ் புகார் பதிவு செய்து, ராஜேஷ்குமாரை லாக்அப்பில் தள்ளி பாதுகாத்து வருகின்றனர்.

2

டாய்லெட் டீ!

பருப்பு, கடுகு, பால் என கலப்படங்களை பார்த்திருப்பீர்கள். லைவ் காட்சியாக டீயில் ஒருவர் கலப்படம் செய்யும் வீடியோதான் இன்று இந்தியளவில் செம வைரல்.

கடந்தாண்டு டிசம்பரில் ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த உவ்வே சம்பவம் அது. டீயை கரம் சாயா சொல்லி சுடச்சுட விற்ற ரயில்வே பணியாளர், லாபத்திற்காக கிடைத்த கேப்பில்  டாய்லெட்டில் புகுந்து டீகேனில் நீரைக்கலந்து விற்றார். ஷாக்கான பயணிகளில் ஒருவர், டீவியாபாரிக்கு தெரியாமல் அவரின் ஆக்‌ஷனை வீடியோ எடுத்து  இணையத்தில் பதிவிட, ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் குவிந்து நெருக்கடியானது. "செகந்திராபாத் டூ காசிபேட் பகுதியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் மற்றும் டீ விற்ற பணியாளர் சிவக்குமார் ஆகியோரின் மீது என்கொயரி நடந்துவருகிறது. அவரின் லைசென்சிலிருந்து ஒரு லட்சரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்" என்று தடாலடியாக அறிவித்துள்ளார் ரயில்வே உயர் அதிகாரியான எம்.உமாசங்கர் குமார்

3
ஜாதியை ஒழிக்க 7 மேரேஜ்!

குஜராத்தைச் சேர்ந்த அம்ருத் தேசாய் ஜாதியை ஒழிக்க செய்த காரியத்தை ஜாதி ஒழிப்பு போராளிகள் கூட நினைத்து பார்க்க முடியாது.

குஜராத்திலுள்ள அஜிம்னா கிராமவாசியான அம்ருத் தேசாய், தன் மகளுக்கு திருமணத்தை பிளான் செய்தார். அதோடு தனக்கும் மேளம் கொட்ட ஏற்பாடு செய்தார். மருமகன், மகள் ஒருவித குழப்பத்தோடு தந்தையின் ஐடியாவுக்கு ஓகே சொன்னாலும் ஊர் கறாராக மறுத்துவிட்டது. அம்ருத் அப்படி என்ன முடிவெடுத்தார? ஜாதி ஒழிப்புக்காக ஏழு தலித் பெண்களை திருமணம் செய்வதுதான் அது. அம்ருத்தின் தில்லை வேடிக்கை பார்க்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்துவிட்டனர். தன் மகள் உட்பட அனைவருக்கும் பீரோ, கட்டில்களை சீர்வரிசையாக கொடுத்து மணம் செய்திருக்கிறார் அம்ருத். "நூற்றாண்டுகளாக சமூகத்தில் நிலவும் ஜாதிவெறியை களையவே இந்த ஏற்பாடு. ஊரார் முதலில் மறுத்தாலும் பின்னர் திருமணத்தில் பங்கேற்றனர்" என்று சொல்லி புன்னகைக்கிறார் அம்ருத். குழந்தை மனசு சார் உங்களுக்கு!

4
தள்ளுபடி பெட்ரோல்!

பெட்ரோல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் சுதந்திரமாக வைத்துக்கொள்ள இந்திய அரசு உத்தரவிட்டதிலிருந்து விலை ரூபாயில் ஏறி, பைசாவில் குறைந்து நம் பர்ஸை பதம் பார்க்கிறது. தற்போது வெனிசுலா இந்தியாவுக்கு ஆஃபர் விலையில் பெட்ரோல் வழங்க முன்வந்துள்ளது.

தற்போது வெனிசுலா இந்தியாவுக்கு 30 சதவிகித விலையில் கச்சா எண்ணெய்யை விற்க முன்வந்துள்ளது. ஆனால் பெட்ரோ எனும் கிரிப்டோகரன்சியில் பணத்தை தரவேண்டும் என்பதுதான் ஒரே கண்டிஷன். சவுதி அரேபியாவுக்கு அடுத்த 266 பில்லியன் மதிப்பிலான கச்சா எண்ணெய் வியாபாரம் செய்வது வெனிசுலா நாடு. "இந்தியா பெட்ரோ கரன்சியை ஏற்று வியாபாரம் செய்ய முன்வந்தால் இரு நாடுகளுக்கிடையே வணிகம் நடைபெறும்" என்று கூறியுள்ளார் காய்ன்செக்யூர் நிறுவனத்தின் இயக்குநரான மொகித் கல்ரா.