மேஜிக் சீக்ரெட்ஸ்!
மாயாஜால
தந்திரங்கள்!
உடலை வெட்டுவது, ரிங்கை
தொலைத்து மீட்பது, கண்ணாடியைக் கடப்பது என டைனமோ உள்ளிட்ட பல
மேஜிக் மனிதர்களும் சுயமாக நிறைய நூல்கள், சிடி,டிவிடி, நிகழ்ச்சிகள் என இன்ஸடிடியூட் போகாமல் மேஜிக்கை
கற்றவர்கள்தான்.
அமெரிக்க மேஜிக்மனிதரான ஹேரி ஹூடினி தன் வீட்டில்
ஆன்மிகம்,
மேஜிக் குறித்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை
வைத்திருந்தார். இவர் மட்டுமல்ல முன்னணி மேஜிக் மனிதர்கள் அனைவரும்
நூலகம் வைத்து பராமரித்தவர்கள்தான்.
செலவு மட்டுமல்ல தங்களின் மேஜிக் ட்ரிக்குகளுக்கேற்ப
300- 2500 டாலர்கள் வரை பில்லும் வசூலிக்கின்றனர். சிக்னேச்சர் ட்ரிக்குகளை பல்லாயிரம் முறை சோதித்து பார்த்தே வல்லவராக மாறுகின்றனர்
என்பதால் அதன் ரகசியத்தை மேஜிக்காரர்களிடம் கேட்பது முறையான அணுகுமுறை அல்ல.
நிகழ்ச்சியின் பரபரப்புக்கு இடையே திடீரென ஒருவருடைய
செல்போன் மொச்சைக்கொட்டை பல்லழகி என முனகினால் பலருக்கும் அய்யோவெனதானே இருக்கும். போன் பேசி முடிந்தபிறகே மேஜிக் நிகழ்ச்சிகள் தொடரும் என கறாராக செயல்படுத்துகின்றனர்
சிலர்.