இடுகைகள்

வங்கிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கியல்லாத நிதி நிறுவனங்களை ஆதரிக்கும் ஆர்பிஐ! - மெல்ல தேயுமா வங்கிகள்?

படம்
              இனி வரும் காலத்தில் வங்கிகளை நம்பி நாம் இருக்கவேண்டியதில்லை . வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மெல்ல காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளன . இதில கணக்கு தொடங்கி பணத்தை பிறருக்கு அனுப்புவது பெறுவது , வணிகத்திற்கு பயன்படுத்துவது ஆகியவை இனி மெல்ல அதிகரிக்கும் . சாதாரணமாகவே யூனியன்பேங்க் வகை செயலியை விட கூகுள் பே போன்ற வங்கியல்லாத நிறுவனங்களின் செயலிகளை எளிதாக பயன்படுத்த முடிகிறது . இதற்கு காரணம் , அவர்கள் பயனர்களை வங்கிகளை விட எளிதாக புரிந்துகொள்வதுதான் . யூனியன்பேங்க் ஆப் இந்தியா , சிட்டியூனியன் பேங்க் போன்ற நிறுவனங்கள் செயலிகளின் வசதியில் காட்டும் அக்கறையின்மை கூகுள் பே , பேடிஎம் , போன் பே போன்ற நிறுவனங்களின் செயலிகளுக்கு ஆதரவாக அமைகிறது . தற்போது ஆர்பிஐ வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் பயனருக்கு வழங்கும் நிதியின் அளவை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தியுள்ளது . மேலும் ஆன்லைனில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கும் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது . மத்திய நிதி திட்ட அமைப்பில் தற்போது பொதுத்துறை வங்கிகளும் , தனியார் வங்கிகளும் குறிப்பிட்ட வங்கியல்லாத நி

வாராக்கடன் வசூலிப்பில் பேட் பேங்க் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது!

படம்
        பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வருகிறது . இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி தற்போது பேட் பேங்க் என்ற கான்செப்டை கையில் எடுத்துள்ளது . இத்தனை ஆண்டுகளாக இதனை பலர் கூறியபோதும் மறுத்து வந்த ரிசர்வ் வங்கி தற்போது இதனை செயல்படுத்த என்ன காரணம் என்று பார்ப்போம் . பேட் பேங்க் என்பது வணிக வங்கிகள் வழங்கிய வாராக்கடன்களை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை செய்வதற்காக அமைக்கப்படும் வங்கி . இந்த வங்கி யாருக்கும் கடன்களை வழங்காது . யாரிடமும் டெபாசிட்களைப் பெறாது . கடன்களை குறிப்பிட்ட கால அளவில் திரும்ப பெறும் நடவடிக்கைகளை செய்யக்கூடியது . வணிக வங்கிகளின் இருப்பில் உள்ள வாராக்கடன்களை திரும்பப் பெற்றுத்தர பேட் பேங்க் உதவுகிறது . வாராக்கடன்களை வாங்கிய அளவுக்கு குறைந்தாலும் முடிந்தவரை வேகமாக மீட்க முயல்கிறது . முன்னார் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் , பேட் பேங்க் முறைக்கு தனது நூலில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வாராக்கடன்களை இன்னுமொரு நிறுவனம் அமைத்து அதற்கு மாற்றிவிட்டால் எப்படி நிலைமை முன்னேறும் என்று எழுதியிருந்தார் . அமெரிக

வங்கிகள் இணைப்பு - அரசைக் காப்பாற்றுமா சீர்திருத்தங்கள்?

படம்
வங்கிகள் இணைப்பு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை அறிவித்துள்ளார். ஊழியர்கள் சங்கம் பயத்தையும் திகைப்பையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதனால் பயன்கள் அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 2017 ஆம் ஆண்டு 21 வங்கிகளை 12 ஆக மாற்றும் யோசனையை தேசிய ஜனநாயக கூட்டணி கூறியது. பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த இணைப்புக்கான முதலீடாக 55 ஆயிரத்து 200 கோடி ரூபாயைக் கொடுப்பதமாக அரசு கூறியுள்ளது. பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகிய வங்கிகள் இணைகின்றன. இவற்றின் மதிப்பு 18 லட்சம் கோடி. கனரா வங்கி , சிண்டிகேட் வங்கி இணைப்பு மதிப்பு 15.2 லட்சம் கோடி. யூனியன் வங்கி , ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி இணைப்பு - 14.6 லட்சம் கோடி, இந்தியன் வங்கி , அலகாபாத் வங்கி இணைப்பு 8.08 லட்சம் கோடி கடன் கொடுப்பதை வழங்க தனி ஏஜன்சி, 250 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கண்காணிப்பு, தன்னாட்சி அதிகாரம் என பல்வேறு விஷயங்களை அறிவித்துள்ளார். கடந்தவாரம் அறிவித்த 70 ஆயிரம் கோடி ஊக்கத் தொகையும் இதில் இணையும். 8 சதவீதமாக இருந்த ஜிடிபி 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அரசின் மோச