இடுகைகள்

கிறிஸ்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களைக் கொன்று தோட்டத்திலும், வீட்டிலும் புதைத்து வைத்த கொலைகாரர்!

படம்
  கிறிஸ்டி - ஜான் ரெஜினால்டு ஹாலிடே 1898ஆம் ஆண்டு யார்க்‌ஷையரில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே பெற்றோரின் அன்பு கிடைக்காதவர். வீட்டில் பெற்றோரால் தண்டனை மட்டுமே அளிக்கப்பட்டவர். இதனால் அடிக்கடி குற்றங்கள் செய்து சிறை சென்று வர தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போது, போலீஸ்துறையில் கிளர்க் ஆவதுதான் கனவு. ஆனால், அங்கு செய்த திருட்டு காரணமாக பள்ளியை விட்டு விலக்கப்பட்டார். பிறகு அப்பாவின் கார்பெட் தொழிற்சாலையில் வேலைசெய்தார். ஆனால் அங்கும் திருட்டை தொடர்ந்த காரணத்தால், வீட்டை விட்டே அடித்து விரட்டப்பட்டார். பிறகு ராணுவத்தில் சேர்ந்தவர், முதல் உலகப்போரில் பங்கேற்று காயம்பட்டு   ஐந்து மாதங்கள் கண் பார்வையை இழந்திருந்தார். பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு சரியாக வரவில்லை. 1920ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பிறகு ஒரு விபத்தில் சிக்கி தலையில் கடுமையாக அடிபட்டது. தற்காலிக பணியாக அஞ்சலகத்தில் வேலை செய்தார். அங்கும் மனிதர் சும்மாயிருக்கவில்லை. ஏராளமான பணவிடைகளை திருடினார். இதற்காக குற்றம்சாட்டி புகார் கொடுக்கப்பட, ஏழு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.ஜானின்   வாழ்க்கை முழுக்க துக்க

விவாகரத்தான ஆசிரியையைக் காதலிக்கும் மாணவன்! - கிறிஸ்டி - மேத்யூ, மாளவிகா மோகனன்

படம்
  கிறிஸ்டி 2023 மலையாளம் கிறிஸ்டி இயக்கம் ஆல்வின் ஹென்றி திரைக்கதை – பென்யாமின், ஜிஆர் இந்துகோபன் மாணவன் தன் ட்யூசன் ஆசிரியையைக் காதலிக்கும் கதை. பூவார் எனும் கடற்கரை கிராமத்தில் நடக்கிறது. கதை, ராய் என்ற மாணவனின் பார்வையில் நடைபெறுகிறது. இதனால் அவனது பார்வையில்தான் ட்யூஷன் ஆசிரியையை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.   சுமாரான படிப்பு, அதிக நேரம் நண்பர்களுடன் விளையாட்டு, நடனம் ஆடுவது என சுற்றுவதுதான் ராயிற்கு விருப்பம். ஆனால் தேர்வில் வெல்ல கொஞ்சமேனும் படிக்கவேண்டுமே? ஜாலி, கேலி மட்டுமே போதாது அல்லலவா? எனவே, பெற்றோர் அவனுக்கு ட்யூஷன் சொல்லித்தர கிறிஸ்டி என்ற ஆசிரியையை ஏற்பாடு செய்கிறார்கள். ராய்க்கு முதலில் கிறிஸ்டி ஜோசப்புக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக தோன்றுகிறது. பிறகு மெல்ல அவள் சொல்வதைக் கேட்டு படிக்கிறான். பரீட்சையிலும் படித்து வெல்கிறான். அதேசமயம் கிறிஸ்டி சேச்சியுடன் அவன் பழக்கமும் தொடர்கிறது. அவன், அவள் தேர்வுக்குச் செல்ல, உறவினர் திருமணத்திற்கு செல்லவென பல்வேறு உதவிகளைச் செய்கிறான். அவள் சிரிப்பதை, நட்பாக பேசுவதை காதலென நினைத்துக்கொள்கிறான். கிறிஸ்டிக்கு மாலத்தீவில் ஆசிர