இடுகைகள்

கழிவறை ! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கழிவறைகளுக்கு அதிக மானியம்!

படம்
கழிவறைக்கு மானியம்! ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் கழிவறைகளுக்கு 65% அதிக மானியம் தேவைப்படுகிறது என குஜராத்தின் செப்ட் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2015-2016 ஆம் ஆண்டு வெளியான தேசிய குடும்பநல ஆய்வில் 10.5% நகரவாசிகள் திறந்தவெளி கழிப்பறையையும், 14.9% பேர் வீட்டில் அமைந்துள்ள கழிவறையைப் பயன்படுத்துகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. திறந்தவெளி கழிவறையால் காலரா, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணமாக வயிற்றுப்போக்கு உள்ளது. கழிவறை கட்ட ரூ.35 ஆயிரம் என திட்டமிட்ட மகாராஷ்டிரா அரசு மத்திய அரசு மானியமான ரூ.4 ஆயிரத்தோடு மாநில அரசு மானியமாக ரூ.8 ஆயிரம் வழங்குகிறது. அரசு ரூ.35 ஆயிரம் என திட்டமிட்டாலும் கழிவறைக்கான செலவு ரூ. 45 ஆயிரத்திற்கு மேல் எகிறுவது யதார்த்த நிலைமை. ஒரே தவணையில் இவ்வளவு தொகையை புரட்டி கழிவறை கட்டமுடியாதவர்கள் வேறுவழியின்றி வாடகை வீட்டுக்கு மாறுவதும் அதிகரித்து வருகிறது.