இடுகைகள்

குடிமைப்பணித் தேர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கவனம் குவித்து பத்து மணிநேரம் தினசரி படித்து வந்தேன்!-பிரதீபா வர்மா

படம்
    பிரதீபா வர்மா உ.பியைச் சேர்ந்த பிரதீபா வர்மா குடிமைப்பணித் தேர்வில் 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். அவரின் வெற்றிப்பயணம் பற்றி பேசினோம். ஒரு பெண்ணாக உங்களுக்கு இந்த பயணம் எப்படி இருந்தது? நான் ஒன்பதாவது படிக்கும்போது எனக்கு ரத்தசோகை பிரச்னை இருந்தது. நான் தனியாக எங்கேயும் போகவே மாட்டேன். பிறகு பதினொன்றாவது படிக்கும்போது ஈவ்டீசிங் பிரச்னை ஏற்பட்டது. இதனால் நான் பள்ளிக்குப் போகும்போது எனது அப்பா, எனது பின்னாலேயே வந்து பாதுகாப்பாக பள்ளிக்கு கொண்டு வந்துவிட்டுவிட்டு திரும்புவார். கிண்டல் செய்வது தொடர்பாக கா்வல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி நிலைமை சென்றது. எனது அப்பா, இதற்கு பயந்துகொண்டு படிப்பை கைவிடுவது தவறு என்று சொன்னார். அவர் வார்த்தைகள்தான் எனக்கு தைரியத்தைக் கொடுத்தன. குடிமைப் பணித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்லவிரும்புகிறீர்கள்? தனி அகாடமிகளில் சென்று படிப்பது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்காது. பாடநூல்களை நன்றாக படியுங்கள். தினசரி நாளிதழ்களை தீர்க்கமாக வாசியுங்கள். அதுவே போதுமானது. தேர்வுக்கு படிக்கு்ம்போது எந்த இடத்திலாவது நம்பிக்கையை இழந்திருக்கிறீர்கள

உழைப்பு, தன்னம்பிக்கை, கவனம் ஆகியவை என்னை வெற்றி பெற வைத்துள்ளன! பிரதீப் சிங்.

படம்
      பிரதீப் சிங்       இன்று குடிமைப்பணித் தேர்வுகளை எழுத நீங்கள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் கூட அட்மிஷன் போட வேண்டாம். எளிமையாக் உங்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை வைத்தே சிறப்பாக முயன்றால் குடிமைப்பணித்தேர்வில் வெல்ல முடியும் . அதற்கு ஆதாரமாக இந்த ஆண்டு ஐ.ஏ.எ்ஸ் தேர்வில் வென்றவர்களை கைகாட்டலாம். அதில் முக்கியமானவர், முதல் இடம் பிடித்த ஹரியாணாவைச் சேர்ந்த பிரதீப் சிங். அவரிடம் பேசினோம். நீங்கள் முதலிடம் வருவீர்கள் என்று நம்பினீர்களா? வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நான் முதல் நூறு ரேங்குகளுக்குள் வருவேன் என்று நினைத்தேன். ஆனால் நெ.1 என்பது நான் எதிர்பார்க்காத பரிசு. என்னுடைய பெயரை தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் பார்த்துதான் எனக்கு நம்பிக்கை வந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட எனது அப்பா விவசாய வேலைகளை அப்படியே போட்டுவிட்டு வந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். ஒட்டுமொத்த ஊரும் எங்கள் வீடு தேடி வந்து வாழ்த்துகளை சொல்லியபடி இருந்தார்கள். அன்றிரவு எங்கள் முழு குடும்பமே தூங்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களத