உழைப்பு, தன்னம்பிக்கை, கவனம் ஆகியவை என்னை வெற்றி பெற வைத்துள்ளன! பிரதீப் சிங்.

 

 

 

Life & Journey Of Pradeep Singh Who Topped The UPSC 2019 Exam
பிரதீப் சிங்

 

 

 

இன்று குடிமைப்பணித் தேர்வுகளை எழுத நீங்கள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் கூட அட்மிஷன் போட வேண்டாம். எளிமையாக் உங்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை வைத்தே சிறப்பாக முயன்றால் குடிமைப்பணித்தேர்வில் வெல்ல முடியும் . அதற்கு ஆதாரமாக இந்த ஆண்டு ஐ.ஏ.எ்ஸ் தேர்வில் வென்றவர்களை கைகாட்டலாம். அதில் முக்கியமானவர், முதல் இடம் பிடித்த ஹரியாணாவைச் சேர்ந்த பிரதீப் சிங். அவரிடம் பேசினோம்.

நீங்கள் முதலிடம் வருவீர்கள் என்று நம்பினீர்களா?

வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நான் முதல் நூறு ரேங்குகளுக்குள் வருவேன் என்று நினைத்தேன். ஆனால் நெ.1 என்பது நான் எதிர்பார்க்காத பரிசு. என்னுடைய பெயரை தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் பார்த்துதான் எனக்கு நம்பிக்கை வந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட எனது அப்பா விவசாய வேலைகளை அப்படியே போட்டுவிட்டு வந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். ஒட்டுமொத்த ஊரும் எங்கள் வீடு தேடி வந்து வாழ்த்துகளை சொல்லியபடி இருந்தார்கள். அன்றிரவு எங்கள் முழு குடும்பமே தூங்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களது கல்வி பற்றி சொல்லுங்கள்?

நான் ஐந்தாவது வரை தனியார் பள்ளியில் படித்தேன். பிறகு சோனிபட்டில்  மேல்நிலைக்கல்வியை படித்தேன். பிடெக் பட்டத்தை தீன்பந்து சோட்டுராம் அறிவியல் தொழில்நுடப் கல்லூரியில் படித்து பெற்றேன்.

குடிமைப்பணித் தேர்வு்க்கு முன்னதாகவே பணியாளர் தேர்வாணையத் தேர்வு எழுதி வென்றிருந்தீர்கள் அல்லவா? என்ன செய்துகொண்டிருந்தீர்கள்.

நான் வருமானவரித்துறை அலுவலராக நான்கு ஆண்டுகள் வேலை செய்தேன். எங்கள் குடும்பத்தில் நான் ஒருவன்தான் அரசு வேலையில் இருக்கிறேன். வருமானவரித்துறை வேலையைப் பார்த்துக்கொண்டேதான் தேர்வு எழுதினேன். ஆனால் தொடக்க தேர்வு கூட தாண்ட முடியவில்லை. எங்களுக்கு வருமான ஆதாரமே எட்டு ஏக்கர் நிலம்தான். அடுத்த ஆண்டு தேர்வு எழுதி தோற்றால் அவ்வளவுதான் என்று பயமாக இருந்தது. வேலையில் இருந்துகொண்டு படிக்க முடியுமா என்று தயக்கமும் அச்சமும் இருந்தது. அப்போது சோனிபட்டில் அனு தாகியா என்ற பெண்மணி , நான்கு வயது குழந்தையை வைத்துக்கொண்டே படித்து குடிமைப்பணித் தேர்வில் இரண்டாவது இடம் பிடித்துவிட்டார் என்ற செய்தி எனக்கு மகிழ்வூட்டியது. 2017ஆம் ஆண்டு அனு தேர்வில் வென்றார். எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். உழைப்பு, தன்னம்பிக்கை, கவனம் ஆகியவை என்னை வெற்றி பெற வைத்துள்ளன. முதலிடம் பிடித்தது இப்படித்தான்.

எவ்வளவு மணிநேரம் படிப்பீர்கள்?

இதற்கென தனி டைம் டேபிள் ஏதும் கிடையாது. எந்த நேரத்திட்டமிடல் இன்றி படிப்பேன். நான்கு ஆண்டுகளில் எனது எழுதும் திறனை நன்கு மேம்படுத்திக்கொண்டேன்.

நேர்காணலில் கேட்ட கேள்விகளில் உங்களுக்கு பிடித்த கேள்வி என்ன?

2022இல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டது எனக்கு பிடித்தமான கேள்வி. நான் அதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் முடியாத காரியமல்ல. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம் என்று கூறினால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் அரசு தரும் குறைந்த பட்ச விலையை விட அதிகமாக கிடைக்கும் என்று பதில் கூறினேன்.

ஏதாவது தனி இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படித்தீர்களா?

இல்லை நான் பல்வேறு நூல்களிலிருந்து எடுத்த குறிப்புகளை எடுத்து வைத்து படித்தேன். நடப்பு செய்திகளை நீங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ளலாம். தொடர்ச்சியாக எழுதுவதற்குதான் அதிக பயிற்சி செய்தேன்.

அவுட்லுக்
ஹரிஷ் மானவ்

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்