மூன்று நண்பர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் பிறந்தநாள் பார்ட்டி! - ப்ராஜெக்ட் எக்ஸ்

 

 

 

 

How do movies and Hollywood celebrities impact the way ...

 ப்ராஜெக்ட் எக்ஸ்


ப்ராஜெக்ட் எக்ஸ்

Directed byNima Nourizadeh

Screenplay byMatt Drake
Michael Bacall
Story byMichael Bacall

CinematographyKen Seng

படத்தின் கதை என்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. தாமசுக்கு பிறந்தநாள். அதற்காக வெங்கட்பிரபு போல கிராண்டாக ஒரு பார்ட்டியை வைக்கிறோம் என தாமசின் நண்பர்கள் காஸ்டா, ஜே.பி விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் செய்யும் ஏற்பாடும், செய்யும் விளம்பரமும் அவர்கள் வாழ்க்கையை மாற்றிப்போடுகிறது. என்னதான் ஆச்சு இந்த பசங்களுக்கு, என்னுடைய வீட்டுக்கு, என்னுடைய தெருவுக்கு என அங்கிருப்பவர்கள் அதிர்ச்சியடையும் சம்பவங்கள் அங்கு நடைபெறுகிறது. அத்தனைக்கும் காரணம் ஒரேயொரு பார்ட்டிதான்.

Project X Photos: HD Images, Pictures, Stills, First Look ...


மில்லினிய இளைஞர்களின் மனநிலையைப் பற்றி விசுவலாகவே எடுத்து காட்டிவிட்டார்கள். படத்தின் ஒளிப்பதிவு முக்கியமானது. தாமசின் பிறந்தநாள் பரிசாக இந்த வீடியோவை கொடுக்கிறோம்.எனவே அவனது பிறந்தநாள் நிகழ்ச்சி அத்தனையையும் அப்படியே படம் பிடியுங்கள் என்பதுதான் கேமரா நண்பனுக்கு சொல்லும் வார்த்தை. எனவே, ஹேண்டிகேம் கேமராவின் அத்தனை சிக்கல்களோடும் படம் பயணப்படுகிறது. உண்மையில் இந்த படம் ஒளிப்பதிவாளருக்கு கடினமான சவால்தான். படத்தின் பாதி காட்சிகள் தோளில் கேமராவைத் தூக்கிவைத்து ஒடுவது போல்தான் எடுத்திருக்கிறார்கள்.

படம் தொடங்கும்போதே எச்சரிக்கையை கொடுத்துவிடுகிறார்கள். படம் அப்படி இப்படியெல்லாம் இல்லை. எக்ஸ் என தொடங்கி எக்ஸ் எக்ஸ் என போய்க்கொண்டே இருக்கும் ரணகள கிளுகிளு பார்ட்டி காட்சிகள் ஏராளம் உண்டு. எனவே குடும்பாக பார்க்க நினைத்தால் தனிநபராக படத்தைப் பாருங்கள். அதுதான் உடலுக்கும் மனதிற்கும் நல்லது.

செக்ஸ், பிட்ச், ஸ்லட் என ஏகத்துக்கும் வசனங்களை அள்ளி தெளித்திருக்கிறார்கள். இயல்பான பேச்சாக நம்பகத்தன்மையுடன் படம் வந்திருக்கிறது என்றால் இது ஒரு முக்கியக் காரணம்.

படத்தில் இறுதிக் காட்சியில் காஸ்டாவிடம் டிவி சேனல் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார் நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்களா என்று அதற்கு அவர் சொல்லும் பதில் ஆசம்.

குடி சாப்பிடு பார்ட்டி பண்ணு! 


கோமாளிமேடை டீம் 



கருத்துகள்