எதிர்கால உலகம் எப்படியிருக்கும்!
cc |
எதிர்கால உலகம் எப்படியிருக்கும்!
மனிதர்களின் மனம் மாறுகிறதோ இல்லையோ தொழில்நுட்பம் 5ஏராளமான மாற்றங்களைப் பெற்று வருகிறது. அப்படி மாற்றம் பெறவிருக்கிற சில விஷயங்களைப் பார்ப்போம்
அலுவலகம்
கலந்துரையாடல் சந்திப்பு
சாதாரணமாகவே அலுவலக மேனேஜர் ஒன்றரை மணி நேரங்களுக்கு மீட்டிங் போட்டு தன்னுடைய பெண் படிக்கும் படிப்பு, அவளின் ஆர்வமான விஷயங்களையெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். இதே டெம்பிளேட் இப்போது ஜூம் மீட்டிங்கிற்கு மாறியுள்ளது. மற்றபடி வேறு மாற்றம் ஏதுமில்லை. ஆனால் எதிர்காலத்தில் இப்போது நாம் ஹாலிவுட் படங்களில் பார்க்கும் ஹோலோகிராம் மீட்டிங்குகள் நடைபெறும். இதில் நாம் வீட்டிலிருந்து பேசினால் போதும். திரையில் பலருடனும் பேசுவது நம்முடைய ஹோலோகிராம் உருவமாக இருக்கும். இப்போது பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ரோபோவை வைத்து சந்திப்புகளை திறம்பட நடத்த முயன்றுவருகின்றன. நமது உருவங்கள் 3டி முறையில் இனி புராஜெக்டுகளை விளக்கிப் பேசும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
வைஃபை
பொதுமுடக்க காலத்தில் புத்தகம் இருந்தவர்கள் எப்படியோ சமாளித்து விட்டார்கள். ஆனால் வைஃபை இல்லாதவர்கள் மனச்சோர்வுக்கு ஆட்பட்டார்கள். அந்தளவு வாழ்க்கையில் அடிப்படை உரிமை என்று கூட அதனை கருதலாம் எனும்படி முக்கிய அந்தஸ்து பெற்றுவிட்டது வைஃபை. இப்போது 2. 5 ஜிகா ஹெர்ட்ஸ் என்றால் அடுத்து 5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கவிருக்கிறது. கைகளில் ஸ்மார்ட்வாட்ச், கண்களில் கூகுள் கிளாஸ் போன்றவற்றை அணிந்தால்தான் இனி எளிதாக அனைத்து விஷயங்களையும் இணைக்க முடியும். இதற்கான மின்சாரத்தை கூட பல்வேறு பொருட்களிலிருந்து பெறும்படி தொழில்நுட்பம் முன்னேறலாம். ப்ளூடூத் போலத்தான் ஆனால் சக்தி அதிகம்.
புராஜெக்ட்
இன்னும் மைக்ரோசாப்ட் பவர்பாயிண்டை யாரும் நம்பியிருக்க தேவையில்லை. எனவே, சாம்சங்களை நம்புவோம். அதில் ஹலோ என்ற 55 இன்ச் வெள்ளை போர்ட் ஒன்று இருக்கிறது. அதில் நாம் ஸ்மார்ட்போனை இணைத்து அப்படியே வரையலாம், சார்ட் போடலாம். குஷியான மனத்துடன் இருந்தால் பல விஷயங்களை அதில் செய்யமுடியும். பிரிண்டிங்கைப் பொறுத்தரை 3டி பிரிண்டர் எதிர்காலதில் கோலோச்சும்.
கருத்துகள்
கருத்துரையிடுக