எதிர்கால வேலைவாய்ப்பு முதல் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான உரிமைப்போராட்டங்கள் வரை- புதிய புத்தகங்கள் அறிமுகம்
cc |
தி
விக்டரி புராஜெக்ட்
சௌரப் முகர்ஜி, அனுபம் குப்தா
ப.304 ரூ.544
இன்று இந்தியா வரலாறு காணாத பொருளாதார தேக்கத்தில் உள்ளது. அதேசமயம் நாம் வேலை செய்யும் முறைகளும், பணிகளும் மாறியுள்ளன. இந்த சூழ்நிலையில் நம் எதிர்காலம் எப்படி இருக்கும்? புதிய தலைமுறையினர் எப்படி இதனை எதிர்கொள்வது என விளக்கியுள்ளனர்.
ஹோப் இன் ஹெல்
ஜொனாதன் போரிட்
ப.384 ரூ.699
சூழல் மாறுபாடு என்பது இன்று முக்கியமான பிரச்னையாகி உள்ளது. இதனை அறிவியல் முறையில் எப்படி அணுகி பிரச்னையைத் தீர்ப்பது, இதனை எப்படி ஆழமாக புரிந்துகொள்வது, அதன் தீவிரத்தன்மை ஆகியவற்றை இந்த நூல் ஆராய்கிறது.
டெட்லி அவுட்பிரேக்
அலெக்ஸாண்ட்ரா லெவிட்
ப.256 ரூ. 699
நுண்ணுயிரிகள் மனிதர்களை தாக்குவது வரலாறெங்கும் நிகழ்ந்து வருகிற ஒன்றுதான். இதன் வளர்ச்சி, வெளிப்பாடு, தாக்கம் ஆகியவற்றை பற்றி இந்த நூல் ஆராய்கிறது.
தி ஆர்எஸ்எஸ் அண்ட் தி மேக்கிங் ஆப் தி டீப் நேஷன்
தினேஷ் நாராயணன்
ப. 344 ரூ.699
ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாறு, அதன் உள்கட்டமைப்பு, அதன் பதவிகள், செயல்பாட்டு முறைகள் என அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளா ர் ஆசிரியர். இன்று இந்தியாவை ஆளும் அரசு, ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தியலைப் பின்பற்றுகிறது என்ற வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த அமைப்பில் உள்ளவர்களை நேர்காணல் செய்து தகவல்களைப் பெற்றுள்ளார் ஆசிரியர்.
தி பிங்க் லைன்
மார்க் ஜெவிஸ்ஸர்
ப. 568 ரூ. 699
தென் ஆப்பிரிக்காவில் அகதியாக இருப்பவர் முதல் எகிப்தில் செயல்பாட்டாளராக இருப்பவர் வரை மொத்தம் ஒன்பது நாடுகளில் எல்ஜிபிடியினர் செய்த போராட்டங்கள், அவர்களின் வேதனை நிரம்பிய வாழ்க்கை பற்றி பேசுகிற நூல் இது.
financial express
கருத்துகள்
கருத்துரையிடுக