அமெரிக்காவின் புதிய ஆயுதம்! - மக்களை விரட்ட புதிய ஆயுதம் உருவாக்கப்பட்டுவிட்டது
sample image |
அமெரிக்காவின் புதிய ஆயுதம்!
அமெரிக்க கடற்படையினர் தற்போது புதிய ஆயுதம் ஒன்றைச் சோதித்துவருகின்றனர்.
கொலராடோ நகரைச் சேர்ந்த ஹர்கைண்ட் டைனமிக்ஸ் என்ற நிறுவனம், மின் அதிர்ச்சி துப்பாக்கிகளை உருவாக்கி வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்கா அரசின் பாதுகாப்புத்துறை நிதியுதவி அளிக்கிறது. இக்கருவியின் பெயர் ஸ்பெக்டர் (Small arms pulsed electronization tetanisation at extended range). இதனை நூறு மீட்டருக்கும் அதிகமாக தூரத்திலிருந்தும் மனிதர்கள் மீது இயக்கி தாக்க முடியும் என்று கூறுகிறது தயாரிப்பு நிறுவனம். இத்தாக்குதல்களுக்கு உள்ளாகுபவர், மின் அதிர்ச்சியால் தாக்கப்பட்டு மயங்கி விழுவர்.
தற்போது வரை அமெரிக்காவில் பயன்படுத்தி வரும் டாஸர் என்ற கருவி வயர் மூலம் மனிதர்களுக்கு மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது எட்டு மீட்டர் தூரத்திற்குள்தான் செயல்படும். இதனால் ஏற்படும் அதிர்ச்சி, பாதிப்பு பற்றி சாதக, பாதக கருத்துகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அடிப்படையில் இதில் போலீசார் மூலம் தாக்கப்படுபவர் மின்னதிர்ச்சி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துவிடுவார்.
பிற ஆயுதங்களைவிட இந்த முறை குற்றவாளிகளுக்கு குறைந்த பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. ஆனால் மயங்கி விழுபவருக்கு தலையில் அடி, கை, கால்களின் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.. குறிப்பிட்ட இலக்கை ஷாட்கன் மூலம் இயக்கி மூன்று முறை தாக்கமுடியும். மின்னதிர்ச்சி குண்டுகளின் வேகத்தைக் குறைக்க பாராசூட் வசதி கூட பயன்படுத்தப்படுகிறது. ஸ்பெக்டர் கருவி மூலம் குற்றவாளியின் தலை மீது மின்சாரம் பாய்ந்தால், என்னாவது? என கேள்வி கேட்கிறார்கள் மனித உரிமை அமைப்பினர். ஆம்னெஸ்டி நிறுவனம்,, இக்கருவிகளை அமெரிக்க அரசு கவனமாக சோதித்துப் பார்த்து பயன்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. அமெரிக்க அரசு, ஸ்பெக்டர் கருவிகளை நூறு என்ற எண்ணிக்கையில் தயாரித்து தர தயாரிப்பு நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்: நியூ சயின்டிஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக