பெருகிவரும் கள்ளச்சாராய இறப்புகள்! - நத்தை வேகத்தில் நடக்கும் விசாரணை! - டேட்டா கார்னர்

 

 

 https://punjabikhurki.com/wp-content/uploads/2018/10/Liquor.jpg

 

 

 

 மக்களை பலிகொள்ளும் கள்ளச்சாராய தயாரிப்பு! - தற்சார்பு இந்தியா 


அண்மையில் பஞ்சாபில் கள்ளச்சாரய பாதிப்பில் நிறைய பேர் பலியானார்கள். உண்மையில் அரசின் மதுபானச்சாலை வருமானத்தின் அளவு கள்ளச்சாரயமும் பல்வேறு மாநிலங்களில் புழங்கி வருகிறது. அரசுக்கு தெரியாமல் இவை நடப்பதில்லை. அப்படி காட்டிக்கொள்வார்கள். அவரவர்களுக்கான பங்கை கொடுத்துவிட்டால் பூசல் ஏது, சண்டை எதற்கு? கொண்டாட்டம்தானே?

இந்தியா முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் கள்ளச்சாராயம் மூலம் மட்டும் 800 பேர்களுக்கும் மேல் பலியாகியிருக்கிறார்கள். எதற்கு இந்த தொழிலை செய்கிறார்கள்? குறைந்த முதலீட்டில் நினைத்துப் பார்க்கமுடியாத லாபம் கிடைக்கிறது. பெரும்பாலும் உள்ளூரில் வலுவான அரசியல் பின்னணி கொண்டவர்கள் தங்களின் பகுதிநேரத் தொழிலாக கள்ளச்சாராயம் விற்பதைக் கொண்டிருக்கிறார்கள்.


பஞ்சாபில் கள்ளச்சாராய சாவுகள் தொடங்கிய தேதி ஜூலை 29, 2020. முதலில் சாராயம் குடித்த ஐந்து பேர் கைலாசம் சென்று சேர்ந்தனர். இவர்கள் பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த முச்சல், தங்கரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அடுத்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. ஆக.5ஆம் தேதியின்போது பலியான உயிர்களின் எண்ணிக்கை 117 என்று உயர்ந்திருந்தது. பஞ்சாப் முதல்வர் இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


காவல்துறையும் சும்மாயில்லை. குற்றவாளியிடம் காசு வாங்கினாலும் அவர்களை கைது செய்யாமல் இருப்பார்களா? நூறுபேர்களுக்கு மேல் கைது செய்துவிட்ட னர். அப்போதுதான் லூதியானா, பாட்டியலா ஆகிய மாவட்டங்கள் கள்ளச்சசாராயம் காய்ச்சி எடுத்து பஞ்சாப் முழுக்க கடத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, விவகாரத்தின் வழியாக மக்களுக்கு என்று புரிந்துகொள்ளுங்கள்.


டேட்டா கார்னர்.


ஜூலை 2009


குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் 150 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகியுள்ளனர்.


டிசம்பர் 2011


மேற்கு வங்காளத்தில் 160 பேர் பலியானார்கள். பலியான இடம் டையமண்ட் துறைமுகம். செப். 2015 இல் மிட்னார்போ ஊரைச் சேர்ந்த 15 பேர் பலி.


பிப். 2012


ஒடிசாவின் கர்டா, கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் 30 பேர் கள்ளச்சாராயத்தினால் பலியானார்கள்.


அக்டோபர் 2013


.பி இல்லாவிட்டால் எப்படி? இங்கு அசம்கார் ஊரைச்சேர்ந்த 40 பேர் பலியாகி இருக்கிறார்கள்.


ஜூன் 2015


வணிக மாநிலமான மகாராஷ்டிரத்தில் லஷ்மி நகரின் குடிசைப்பகுதியைச் சேர்ந்த நூறுபேர் கள்ளச்சாராயத்திற்கு பலியானார்கள்.



ஆக. 2016


பீகாரில் கோபால்கன்ச் ஊரைச் சேர்ந்த பதினைந்துபேர் கள்ளச்சாராயத்தால் வைகுண்டம் சென்றடைந்தனர்.

இந்தியா டுடே


கருப்பு இந்தியா


கருத்துகள்