மீண்டும் குழந்தை தொழிலாளராக மாறும் மாணவர்கள்!
cc |
மீண்டும் குழந்தை தொழிலாளராக மாறும் மாணவர்கள்!
குழந்தை தொழிலாளர்களாக பல்வேறு இடங்களில் பணிபுரியும் மாணவர்களை மீட்பது மட்டும் அரசின் கடமை அல்ல. அவர்களுக்கு கல்வி கற்பித்து நல்ல நிலைமையை அடைய உதவ வேண்டும். தற்போது கோவிட் -19 நோய் விவகாரத்தால் அரசு இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இவர்களின் காப்பகங்களிலும் இணையம்,டிவி வசதி கூட இல்லை. இதனால் அவர்கள் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டுள்ளது. காசு இருந்தால் அவர்கள் ஜியோமி ஆண்ட்ராய்டு டிவியே வாங்கியிருப்பார்கள் அல்லவா? இப்போது ஆசிரியர்கள் கல்வி ஒளிபரப்பை ஒளிபரப்பினாலும் அதனை பார்க்க இந்த மாணவர்களின் வீடுகளில் செட் டாப் பாக்ஸ் இருப்பதில்லை. இதனை ஆசிரியர் எப்படி எதிர்கொள்ளுவார்? அவர் டிவி வாங்குங்கள், செல்போன் வாங்குங்கள் என்று எப்படி சொல்ல முடியும்? குடும்பம் நடத்த முடியாத சூழலில்தான் குழந்தைகளை தொழிலாளர்களாக வேலைக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர்கள். இவர்கள் பெரும்பாலும் பீடி சுற்றுவது, வீட்டு வேலைகளை செய்வது ஆகியவற்றை செய்து வருபவர்கள். இவர்களிடம் ஆன்லைன் முறையில் கல்வி கற்க எந்த வசதியும் இல்லை. எப்படி அவர்கள் அனைவரும் கல்வி கற்கும் சூழலில் பொருந்திப்போவார்கள். இப்படியே நிலைமை தொடர்ந்தால் அவர்கள் திரும்ப வேலைக்கு போகும் வாய்ப்பும் உள்ளது. குழந்தை தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ் இப்போது 200 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் 70 மாணவர்கள் கல்வி கற்பதற்கான முறையான கருவிகள் இன்றி தடுமாறி வருகின்றனர்.
தி இந்து ஆங்கிலம்
விக்னேஷ் விஜயகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக