டவர்ஸ்கை என்ற கட்டடத்திற்குள் நேரும் விபத்து, அதைச்சுற்றிய உள்ளே வெளியே விளையாட்டு! - தி டவர் - கொரியா
தி டவர்
இயக்குநர், இசை, ஒளிப்பதிவு
பல மாடிக் கட்டிடம். கிறிஸ்மஸ் அன்று, ஏராளமான மக்கள் அங்கு ஒன்றுகூடுகிறார்கள். அங்கு மக்கள் வாழிடம், ஆபீஸ் என அனைத்தும் உண்டு. அங்கு பூ தூவுவதற்காக வரும் சாப்பர் திடீரென கட்டிடத்தின் மீது மோதுகிறது. அங்குள்ள மக்களின் நிலை என்னாகிறது என்பதுதான் படம்..
படத்தின் ஹீரோ என்று யாரை சொல்வது? தீயணைப்புத்துறை கேப்டனாக நடித்துள்ளவரை சொல்லலாம். அவர்தான் இறுதியில் உயிரை நைவேத்தியமாக்கி மக்களை காப்பாற்றுகிறார். இத்தனைக்கும் அவரது மேலதிகாரி கூட மக்களை காப்பாற்ற நினைக்கவில்லை. ஆனால் குழு தலைவராக மக்கள் தான் முக்கியம் என நின்று சாதிக்கிறார். இத்தனைக்கும் கிறிஸ்மஸ் கேக்கை மாலையில் வாங்கிக்கொள்கிறேன் என்று ஆர்டர் செய்துவிட்டு வேலைக்கு வந்தவர். இறுதியில் அஞ்சலிக்கு உடல் கூட கிடைக்காமல் போகிறது.
கதைக்குள் ஆழமாக போய்விட்டோம்.
மனைவியில்லாத செக்யூரிட்டி ஆபீசர், கட்டிட நிர்வாகியான பெண்ணை காதலிக்கிறார் அவரும்தான். ஆனால் இருவரும் சொல்லிக்கொள்வதில்லை. செக்யூரிட்டி ஆபீசரின் மகள்தான் காதல் தூதராக இருவரையும் சேர்த்து வைக்கிறார். உலகில் தன்னுடைய நாயைத்தவிர முக்கியமானது ஏதுமில்லை என நினைக்கும் பணக்காரி, மகனின் கல்விக்கட்டணத்திற்காக மூன்று மாத சம்பளத்தை கடனாக வாங்கி அவனுடன் சிறிது நேரம் பேச விரும்பும் அம்மா, ரிஷப்னிஸ்டைக் காதலிக்கும் சமையல்காரர், தனது வணிகத்தை தவிர எதன்மீதும் ஆர்வம் காட்டாத பில்டிங் உரிமையாளர், மக்களை விட தனது பதவியைக் காதலிக்கும் நகர கமிஷனர்.
இப்படி ஏராளமான மனிதர்கள். அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஆசைகள். இத்தனையும் ஒரேநாள் இரவில் நொறுங்கிப்போகிறது. என்ன ஆகும் அவர்களது வாழ்க்கை. இதுதான் படத்தின் கதை.
நெருப்பைத் தடுக்க கட்டிடத்தில் ஃபயர்வால் இரும்புத்திரைகளை உரிமையாளர் செயல்படுத்துகிறார். இதனால் பல நூறு பேர் இறப்பார்கள் என்றாலும் அவருக்கு வணிகம்தான் முக்கியம். சேதம் குறையவேண்டும். இதனை கண்காணிக்கும் கமிஷனருக்கு அப்போதுதான் மலிவான இரும்பில் கட்டிடங்கள் கட்டியது தெரியவருகிறது. இதுபோல படம் முழுக்க மக்களை வைத்து, அவர்களின் உயிரோடு அரசு அதிகாரிகள் நடத்தும் விளையாட்டை கூர்மையாக சொல்லிக்கொணேட இருக்கிறார்கள்
படத்தை முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது. அந்தளவு பெரிய தவிப்பை , பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது இயக்குநரின் திறமை.
உண்மையின் படம் தீயணைப்பு வீரர்களுக்கு டெடிகேட் பண்ண வேண்டியது.
நெருப்புடா!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக